Android & iPhone கேமரா பிளாஷ் லைட்ட இப்படியும் யூஸ் பண்ணலாமா? நம்ம போன்ல இப்படி ஒரு அம்சம்-ஆ?
உங்கள் போனிற்கு வரும் நோட்டிபிகேஷன்களை தவறவிடுகிறீர்களா? வழக்கமான நோட்டிபிகேஷன் அலர்ட் அம்சம் உங்களுக்கு போதுமானதாக இல்லையா? கூடுதல் கவனத்தை ஈர்க்க வேண்டுமா? அப்படியானால், நீங்கள் உடனே உங்கள் போன் செட்டிங்ஸ் சென்று இந்த செட்டிங்கை மாற்றி அமையுங்கள்.
இதன் மூலம், உங்கள் ஆண்ட்ராய்டு போன் மற்றும் ஐபோன் சாதனங்களில் இனி நோட்டிபிகேஷன்னை நீங்கள் பெறும் பொழுது, உங்கள் ஸ்மார்ட்போனில் இருக்கும் எல்இடி பிளாஷ் லைட் அலர்ட் லைட்டாக செயல்படும் மக்களே.! ஆம், சரியாக தான் படித்தீர்கள். உங்கள் ஸ்மார்ட் போனில் உள்ள எல்இடி லைட்டை நீங்கள் நோட்டிபிகேஷன் அலர்ட் கருவியாகப் பயன்படுத்தலாம்.

LED பிளாஷ் லைட் மூலம் நோட்டிபிகேஷனை அலெர்ட் செய்ய முடியுமா? அது எப்படி?
குறிப்பாக, இத்தகைய அம்சம் காது கேளாதவர்கள் மற்றும் கண் பார்வையில் குறைபாடு உள்ளவர்களுக்குப் பெரிதும் பயனளிக்கும் என்பதனால், இதை தெரிந்து கொள்வது மிகவும் நல்லது. இது உங்களுக்கு தேவைப் படாவிட்டாலும், ஒரு நாள் மற்றவர்களுக்காக நீங்கள் உதவுவதற்கு இந்த அம்சம் பெரிதும் பயன்படும். இவர்கள் மட்டுமின்றி, சத்தமான தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்களுக்கும் இந்த அம்சம் பெரிதும் பயன்படும்.
சில நேரங்களில், போன் ரிங் ஆவது உங்களுக்கு கேட்காவிட்டாலும் கூட, பிளாஷ் லைட் ஒளிர்வது உங்கள் கவனத்தை ஈர்க்கும். மறுபுறம், இது மற்றவர்களை டிஸ்டர்ப் செய்யாத வகையில், வெறும் ஒளியை மட்டும் எழுப்புவதனால், பல இடங்களில் சைலன்ட் அலெர்ட் நோட்டிபிகேஷன் அம்சமாக இது பெரிதும் பயன்படும். சரி வாருங்கள், உங்கள் ஸ்மார்ட் போனில் எப்படி இந்த எல்இடி பிளாஷ் லைட் நோட்டிபிகேஷன் அலர்ட் அம்சத்தை ஆக்டிவேட் செய்வது என்று பார்க்கலாம்.

இந்த அம்சம் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் மற்றும் ஐபோன் போன்ற சாதனங்களில் பயன்படுத்தக் கிடைக்கிறது. முதலில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன் சாதனத்தில் எப்படி இந்த எல்இடி லைட் நோட்டிபிகேஷன் அலர்ட் அம்சத்தை பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
Android-ல் எப்படி இந்த எல்இடி லைட் நோட்டிபிகேஷன் அலர்ட் அம்சத்தை யூஸ் செய்வது?
- முதலில் உங்கள் ஸ்மார்ட் போனில் உள்ள செட்டிங்சை திறக்கவும்.
- பிறகு, ஸ்கிரோல் டவுன் செய்து, அசசிபிலிட்டி செட்டிங்ஸ் (Accessibility settings) என்பதை கிளிக் செய்யவும்.
- பிறகு, அதில் கீழ் காணப்படும் அட்வான்ஸ் செட்டிங்ஸ் (Advanced settings) என்பதை கிளிக் செய்யவும்.
- இப்பொழுது மீண்டும் ஸ்க்ரோல் செய்து, பிளாஷ் நோட்டிபிகேஷன் (Flash Notification) என்பதை கிளிக் செய்யவும்.
- இப்பொழுது அதில் காணப்படும் கேமரா பிளாஷ் நோட்டிபிகேஷன் (Camera Flash Notification) என்ற ஸ்விச்சை ஆன் செய்யவும்.
- உங்கள் டிஸ்ப்ளேவையும் நோட்டிபிகேஷன் போது ஒளிரச் செய்ய வேண்டுமானால் ஸ்கிரீன் ஃப்ளாஷ் நோட்டிபிகேஷன் (Screen Flash Notification) என்ற அம்சத்தை ஆக்டிவேட் செய்யும்.

ஐபோன் சாதனத்தில் எப்படி ஃப்ளாஷ் லைட் நோட்டிபிகேஷன் அம்சத்தை ஆக்டிவேட் செய்வது?
- முதலில் உங்களை செட்டிங் செல்ல வேண்டும்.
- பிறகு அசசபிலிட்டி செட்டிங்ஸ் (Accessibility) விருப்பத்தை கிளிக் செய்யவும்.
- இப்பொழுது கீழே ஆடியோ மற்றும் விஷுவல் ஆப்ஷன் (Audio/Visual Option) என்பதை கிளிக் செய்யவும்.
- பிறகு அதில் கீழே ஸ்க்ரோல் செய்து, டர்ன் ஆன் எல்இடி பிளாஷ் ஃபார் அலர்ட் (Turn On LED Flash Alert) என்ற அம்சத்தை ஆன் செய்யவும்.
- இந்த அம்சம் உங்கள் போன் லாக்கில் இருந்தால் மட்டுமே செயல்படும்.
போன் ஆன் இல் இருக்கும் பொழுது நோட்டிபிகேஷன் டிஸ்பிளேவில் கட்டப்படுவதனால், பிளாஷ் லைட் ஒளிராது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இந்தப் பயனுள்ள பதிவை மற்றவர்களுடன் பகிர்ந்து நீங்களும் பயன்பெறுங்கள். இத்தகைய வம்சம் இன்னும் வேறு யாருக்கெல்லாம் பயனுள்ளதாக அமையும் என்பதை கமெண்டில் உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்.


Click it and Unblock the Notifications