அம்பானி போட்ட மெகா ஸ்கெட்ச்: வாட்ஸ்அப் செயலியில் புதிய சேவை அறிமுகம்.!

|

ஜியோ நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது. அதேபோல் இந்நிறுவனம் விரைவில் அனைத்து இடங்களிலும் 5ஜி சேவையை கொண்டுவர உள்ளது. இந்நிலையில் வாட்ஸ்அப் செயலியில் ஒரு புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது ஜியோ நிறுவனம்.

மெட்டா மற்றும் ஜியோ பிளாட்பார்ம்ஸ்

மெட்டா மற்றும் ஜியோ பிளாட்பார்ம்ஸ்

அதாவது மெட்டா மற்றும் ஜியோ பிளாட்பார்ம்ஸ் இணைந்து எண்ட்-டு-எண்ட் வாட்ஸ்அப் ஷாப்பிங் அனுபவத்தை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த புதிய சேவை மூலம் ஜியோமார்ட் பொருட்கள் அனைத்தையும் சாட் மூலம் எளிமையாக வாங்க முடியும்.

இனி தொந்தரவே இல்ல, நேரடி satellite கனெக்‌ஷன்: iPhone 14 குறித்து வெளியான சுவாரஸ்ய தகவல்!இனி தொந்தரவே இல்ல, நேரடி satellite கனெக்‌ஷன்: iPhone 14 குறித்து வெளியான சுவாரஸ்ய தகவல்!

ஜியோமார்ட்

ஜியோமார்ட்

குறிப்பாக இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள JioMart on WhatsApp சேவை மூலம் பயனர்கள் ஜியோமார்ட்-இல் கிடைக்கும் அனைத்து பொருட்களையும் வாங்கி கொள்ளலாம். பின்பு பொருட்கள் வாங்குவதோடு, பணம் செலுத்துவது என அனைத்தும் வாட்ஸ்அப் சாட் மூலமாகவே செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

SBI வாடிக்கையாளர்கள் இனி WhatsApp மூலம் பேங்கிங் விபரங்களை அறியலாம்! எப்படி தெரியுமா?SBI வாடிக்கையாளர்கள் இனி WhatsApp மூலம் பேங்கிங் விபரங்களை அறியலாம்! எப்படி தெரியுமா?

ஜியோமார்ட் ஆன் வாட்ஸ்அப்

ஜியோமார்ட் ஆன் வாட்ஸ்அப்

மேலும் ஜியோமார்ட் ஆன் வாட்ஸ்அப் சேவை மூலம் பல லட்சம் வியாபாரங்கள் தங்களின் வாடிக்கையாளர்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதி கிடைக்கும். பின்பு இந்த புதிய சேவை ஷாப்பிங் அனுபவத்தை எளிமையாக்கியுள்ளது என்றுதான் கூறவேண்டும்.

OnePlus, Samsung-ஐ ஓரங்கட்டிய boAt Xtend Talk ஸ்மார்ட்வாட்ச்.! ப்ளூடூத் காலிங் உடன் இவ்வளவு கம்மி விலையிலா?OnePlus, Samsung-ஐ ஓரங்கட்டிய boAt Xtend Talk ஸ்மார்ட்வாட்ச்.! ப்ளூடூத் காலிங் உடன் இவ்வளவு கம்மி விலையிலா?

JioMart on WhatsApp: ஷாப்பிங் செய்வது எப்படி?

JioMart on WhatsApp: ஷாப்பிங் செய்வது எப்படி?

அதாவது உங்கள் வாட்ஸ்அப் செயலியில் இருந்து ஜியோமார்ட்டில் ஷாப்பிங் செய்ய 7977079770 என்ற எண்ணிற்கு "Hi"என்று குறுந்தகவல்அனுப்ப வேண்டும். அதன்பின்பு உங்களுக்கு பிடித்த ஜியோமார்ட் பொருட்களை நீங்கள் வாட்ஸ்அப்-இல் வாங்க முடியும்.

டக்குனு ஸ்டாக் இருக்கும் போதே Nothing Phone (1) வாங்கிடுங்க.! இல்லனா ரேட் இன்னும் ஜாஸ்தியாகிடும்!டக்குனு ஸ்டாக் இருக்கும் போதே Nothing Phone (1) வாங்கிடுங்க.! இல்லனா ரேட் இன்னும் ஜாஸ்தியாகிடும்!

45-வது ஆண்டு கூட்டம்

45-வது ஆண்டு கூட்டம்

அதேபோல் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் 45-வது ஆண்டு கூட்டம் இன்று மதியம் 2 மணிக்கு தொடங்கியது. இதில் ரிலையன்ஸ் முதலீட்டாளர்கள் மற்றும் எதிர்கால முதலீட்டாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.100க்கும் குறைவா? Netflix அறிமுகம் செய்யும் புதிய பிளான்- ஆனால் இதுக்கு ஓகே சொல்லனும்!ரூ.100க்கும் குறைவா? Netflix அறிமுகம் செய்யும் புதிய பிளான்- ஆனால் இதுக்கு ஓகே சொல்லனும்!

5ஜி நெட்வொர்க் சேவை

5ஜி நெட்வொர்க் சேவை

மேலும் இந்த கூட்டத்தில் 5ஜி நெட்வொர்க் சேவை, குறைந்த விலையில் 5ஜி போனுக்கான திட்டங்கள், புதிய ஜியோ போன் ஆகியவை வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தீபாவளி முதல் 5ஜி சேவை மக்கள் பயன்பாட்டிற்கு அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவித்தார் முகேஷ் அம்பானி.

Google ப்ளே ஸ்டோரில் 2000 loan ஆப்ஸ்கள் நீக்கம்- Google ப்ளே ஸ்டோரில் 2000 loan ஆப்ஸ்கள் நீக்கம்- "சாரு பாக்கி இருக்கு, மொத்தம் கொடு" இனி ஓவர் ஓவர்..

ஜியோ 5ஜி சேவை

பின்பு இந்த 5ஜி சேவை முதற்கட்டமாக சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லி ஆகிய நகரங்களில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அடுத்து ஆண்டு (2023) டிசம்பருக்குள், இந்தியாவின் அனைத்து நகரங்களிலும் மூலை முடுக்கெல்லாம் ஜியோ 5ஜி சேவையை வழங்குவோம் என்று தெரிவித்தார் முகேஷ் அம்பானி.

OnePlus-இன் இந்த பவர்ஃபுல் ஸ்மார்ட்போன் மீது 3-வது முறையாக விலைக்குறைப்பு!OnePlus-இன் இந்த பவர்ஃபுல் ஸ்மார்ட்போன் மீது 3-வது முறையாக விலைக்குறைப்பு!

5ஜி இணைய சேவை

மேலும் ஜியோ கொண்டுவரும் 5ஜி இணைய சேவை மூலம் தற்போது உள்ள 4ஜி சேவையை விட 10 மடங்கு வேகத்தில் தரவுகளை விரைவாக பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம் செய்ய முடியும் . குறிப்பாக இந்நிறுவனத்தின் 5ஜி சேவை இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
How to use JioMart via WhatsApp? Simple tips: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X