Home
How to

கூகுள் மேப்ஸில் சத்தமின்றி அறிமுகமான புதிய வசதி.. பயன்படுத்துவது எப்படி? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..

இந்தியாவில் பல கோடி மக்கள் கூகுள் மேப்ஸ் செயலியைப் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக இந்த கூகுள் மேப்ஸ் செயலியில் உள்ள ஒவ்வொரு வசதிகளும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. அதேபோல் கூகுள் நிறுவனம் இந்த கூகுள் மேப்ஸ் செயலியில் தொடர்ந்து புதிய வசதிகளைச் சேர்த்துக் கொண்டே இருக்கிறது. அந்த வகையில் தற்போது ஒரு புதிய வசதி இந்த கூகுள் மேப்ஸ் செயலியில் சேர்க்கப்பட்டுள்ளது.

கூகுள் மேபஸ் செயலியில் தற்போது நடந்து செல்பவர்கள், சைக்கிள் ஓட்டுபவர்களுக்காகவே ஒரு பிரத்யேக வசதியைச் சேர்த்துள்ளது கூகுள் நிறுவனம். அதாவது அதிநவீன செயற்கை நுண்ணறிவான ஜெமினி (Gemini) அசிஸ்டென்டை தான் இப்போது நடைப்பயிற்சி மற்றும் சைக்கிளிங் நேவிகேஷனிலும் இணைத்துள்ளது. கூகுள் மேப்ஸில் முன்பு இந்த வசதி வாகன ஓட்டிகளுக்கு மட்டுமே கிடைத்தது. இனி அனைவருக்கும் இந்த வசதி கிடைக்கும்.

கூகுள் மேப்ஸில் சத்தமின்றி அறிமுகமான புதிய வசதி..

பொதுவாகச் சாலையில் நடக்கும்போதோ அல்லது சைக்கிள் ஓட்டும்போதே போனை கையில் வைத்துக்கொண்டு பார்ப்பது மிகவும் ஆபத்தானது. ஆகவே இந்த புதிய அப்டேட் மூலம் ஹே கூகுள் (Hey Google) என்று சொன்னாலே போதும், கூகுள் மேப்ஸில் உள்ள ஜெமினி உங்களுக்கு உதவத் தயாராகிவிடும்.

குறிப்பாக நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கான வழியை வாய்மெரியாகவே கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். மேலும் உங்கள் கைகள் ஃப்ரீயாகவும் (Hands-free), கண்கள் சாலையை நோக்கியும் இருப்பதை இது உறுதி செய்கிறது கூகுள் மேப்ஸில் உள்ள இந்த புதிய வசதி.

அதேபோல் கூகுள் மேப்ஸில் உள்ள இந்த புதிய வசதி வெறும் வழி காட்டியாக மட்டும் செயல்படாது, அதாவது நீங்கள் நடக்கும்போது, நான் இப்போது எங்கே இருக்கிறேன், அருகில் நல்ல ஹோட்டல் ஏதேனும் இருக்கிறதா? என்று கேட்டால் கூட ஜெமினி உடனே பதில் சொல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுவும் நீங்கள் சைக்களில் செல்லும்போது, நீங்கள் சேர வேண்டிய இடத்திற்கு எவ்வளவு நேரம் ஆகும் என்பதையும் கூகுள் மேப்ஸில் உள்ள ஜெமினி தெளிவாகச் சொல்லிவிடும். இதுதவிர வழியில் உள்ள உள்ள சார்ஜிங் ஸ்டேஷன்கள் போன்ற தகவல்களையும் இந்த ஜெமினி வசதி வழங்கும்.

மேலும் நீங்கள் பயணம் செய்துகொண்டிருக்கும்போதே இன்னும் 10 நிமிடத்தில் வீட்டிற்கு வந்துவிடுவேன் என்று அம்மாவுக்கு மெசேஜ் அனுப்பு என்று சொன்னால் அதுவே டைப் செய்து அனுப்பிவிடும். பின்பு உங்களது அடுத்த மீட்டிங் எப்போது என்று கேட்டாலும் சொல்லிவிடும். ஆகவே கூகுள் மேப்ஸில் சேர்க்கப்பட்ட இந்த ஜெமினி வசதியானது அனைத்து மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும். சரி கூகுள் மேப்ஸில் வந்துள்ள இந்த புதிய வசதியைப் பயன்படுத்துவது எப்படி என்று பார்க்கலாம்.

கூகுள் மேப்ஸில் சத்தமின்றி அறிமுகமான புதிய வசதி..

வழிமுறை-1 முதலி கூகுள் மேப்ஸை திறக்கவும்

வழிமுறை-2: அடுத்து நீங்கள் செல்ல வேண்டிய இடத்தை தேர்வு செய்யவும்.

வழிமுறை-3: அதன்பின்னர் வாகிங் (Walking) அல்லது சைக்கிளிங் (Cycling) மோடைத் தேர்வு செய்ய வேண்டும்.

வழிமுறை-4: இப்போது மைக் ஐகானை தட்டவும் அல்லது ஹே கூகுள் என்று சொல்லவும். அவ்வளவு தான் இனி அதுவே நீங்கள் செல்லவேண்டிய இடத்திற்குத் தெளிவாக வழியைச் சொல்லும்.

அதேபோல் இந்த ஆண்டு கூகுள் மேப்ஸ் செயலியில் பல்வேறு புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக கூகுள் மேப்ஸில் வரும் ஒவ்வொரு அம்சங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
How to Use Gemini in Google Maps for Walking and Cycling Navigation
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X