கண்ணா ஒரே போனில் 2 WhatsApp கணக்கு பயன்படுத்த ஆசையா? கஷ்டம் இல்லாமல் ஈஸியா யூஸ் பண்ணலாம்.. இதோ.!

|

நீங்கள் பயன்படுத்தும் ஒரே ஸ்மார்ட்போனில் இரண்டு வெவ்வேறு கணக்குகளுடன் வாட்ஸ்அப்பைப் பயன்படுத்தலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? உடனடி மெசேஜ்ஜிங் பயன்பாடான வாட்ஸ்அப் உலகின் மிகவும் பிரபலமான பயன்பாடுகளில் ஒன்றாக இருக்கிறது. காரணம், இந்த ஒற்றை ஆப் மூலம் பயனர்கள், உலகில் எங்கிருந்தாலும் அவர்களின் தொடர்புகளுக்கு மெசேஜ் அனுப்ப முடியும், வீடியோ மற்றும் வாய்ஸ் கால் அழைப்புகளை எளிமையாக சில நொடியில் மேற்கொள்ள முடியும். இதைச் செய்ய இன்டர்நெட் சேவை மட்டும் இருந்தால் போதும்.

ஒரே போனில் இரண்டு வாட்ஸ்அப்

ஒரே போனில் இரண்டு வாட்ஸ்அப்

பேஸ்புக்கிற்குச் சொந்தமான பயன்பாடு ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் பயனர்களுக்குப் பதிவிறக்கம் செய்ய இலவசமாகக் கிடைக்கிறது. மொபைல் போன்கள் அல்லது டெஸ்க்டாப்புகளிலும் இதைப் பயன்படுத்தலாம். இருப்பினும், பயன்பாட்டிற்கு சில வரம்புகள் உள்ளன, அதாவது தொலைப்பேசி எண்ணுக்கு வாட்ஸ்அப் கணக்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.

நீங்கள் இந்த ஸ்மார்ட்போன் பயனர் என்றால் நிச்சயமாக டூயல் வாட்ஸ்அப் பயன்படுத்தலாம்

நீங்கள் இந்த ஸ்மார்ட்போன் பயனர் என்றால் நிச்சயமாக டூயல் வாட்ஸ்அப் பயன்படுத்தலாம்

இருப்பினும், பெரும்பாலான உற்பத்தியாளர்கள் பயனர்கள் தங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் ஒரே பயன்பாட்டின் இரண்டு பதிப்புகளை அமைக்க அனுமதிக்கின்றனர்.சியோமி, சாம்சங் , விவோ, ஹவாய், ஹானர், OnePlus மற்றும் Realme போன்ற பயனர்களுக்கு டூயல் ஆப்ஸ் அல்லது பேரலல் ஆப்ஸ் அல்லது டிவின் ஆப்ஸ் போன்ற பயன்பாடுகள் மூலம் சுலபமாக ஒரே நேரத்தில் இரண்டு வாட்ஸ்ஆப் கணக்குகளைப் பயன்படுத்த முடியும்.

பழைய 5 ரூபாய் நோட்டுக்கு இப்போ ரூ.30,000 கிடைக்கிறதா? உங்ககிட்ட இந்த நோட்டு இருக்கானு பாருங்க..பழைய 5 ரூபாய் நோட்டுக்கு இப்போ ரூ.30,000 கிடைக்கிறதா? உங்ககிட்ட இந்த நோட்டு இருக்கானு பாருங்க..

ஒரே ஸ்மார்ட்போனில் இரண்டு தனித்தனி வாட்ஸ்அப் உருவாக்குவது எப்படி?

ஒரே ஸ்மார்ட்போனில் இரண்டு தனித்தனி வாட்ஸ்அப் உருவாக்குவது எப்படி?

ஒரே பயன்பாட்டின் இரண்டு தனித்தனி பதிப்புகளை எவ்வாறு இயக்கலாம் என்பதை அறிய தொடர்ந்து படிக்கவும். குறிப்பாக இதே போன்ற செயல்முறையை நீங்கள் மற்ற ஆப்ஸ்களுக்கும் பயன்படுத்தலாம் என்பதை நினைவில் கொள்க.

  • MIUI இல் இயங்கும் Xiaomi தொலைபேசி பயனர்கள் Settings > Apps > Dual apps கிளிக் செல்லலாம்.
  • சாம்சங் தொலைபேசி பயனர்கள் Settings > Advance features > Dual Messenger கிளிக் செல்லலாம்.
  • விவோ, ஒப்போ, ஹுவாய் மற்றும் ஹானர் போன்களில் டூயல் வாட்ஸ்அப் உருவாக்குவது எப்படி?

    விவோ, ஒப்போ, ஹுவாய் மற்றும் ஹானர் போன்களில் டூயல் வாட்ஸ்அப் உருவாக்குவது எப்படி?

    • விவோ பயனர்கள் Settings > Apps and notifications > App Clone கிளிக் செல்லலாம்.
    • ஒப்போ தொலைபேசி பயனர்கள் Settings > App Cloner கிளிக் செய்யலாம்.
    • ஹுவாய் மற்றும் ஹானர் தொலைபேசி பயனர்கள் Settings > Apps > App twin கிளிக் செல்லலாம்.
    • முதல் போனே இப்படியா? 1' இன்ச் அளவில் கேமரா சென்சார் கொண்ட முதல் ஸ்மார்ட்போன் இது தான்..முதல் போனே இப்படியா? 1' இன்ச் அளவில் கேமரா சென்சார் கொண்ட முதல் ஸ்மார்ட்போன் இது தான்..

      ஒன்ப்ளஸ் மற்றும் ரியல்மி போனில் எப்படி டூயல் வாட்ஸ்அப் ஆக்டிவேட் செய்வது?

      ஒன்ப்ளஸ் மற்றும் ரியல்மி போனில் எப்படி டூயல் வாட்ஸ்அப் ஆக்டிவேட் செய்வது?

      • ஒன்ப்ளஸ் அதன் பயனர்களை Settings > Utilities > Parallel Apps கிளிக் செய்யலாம்.
      • இறுதியாக, ரியல்மி பயனர்கள் Settings > App management > App cloner கிளிக் செல்லலாம்.
      • புதிய ஆண்ட்ராய்டு வெர்ஷனில் இயங்கும் ஸ்மார்ட்போன்களுக்கு இந்த டூயல் ஆப்ஸ் உருவாக்கும் பயன்முறை பயன்படுத்த கிடைக்கிறது. அப்டேட் செய்யாதவர்கள் தங்களின் சாப்ட்வேரை அப்டேட் செய்த பின்னர் முயற்சித்து பாருங்கள்.

        ஒரு ஸ்மார்ட்போனில் இரட்டை வாட்ஸ்அப்பை எவ்வாறு பயன்படுத்துவது?

        ஒரு ஸ்மார்ட்போனில் இரட்டை வாட்ஸ்அப்பை எவ்வாறு பயன்படுத்துவது?

        • வாட்ஸ்அப்பில் இரண்டாவது கணக்கை இயக்க, செட்டிங்ஸ் செல்லவும்.
        • இரட்டை பயன்பாடுகள் இயக்க Dual apps, App Clone, App twin, or Parallel Apps என்ற விருப்பத்தைத் தேர்வுசெய்யுங்கள்.
        • இந்த விருப்பத்திற்காகப் பெயர் நீங்கள் பயன்படுத்தும் ஸ்மார்ட்போனைப் பொறுத்து மாறும் என்பதை நினைவில் கொள்க.
        • மனிதர்கள் செவ்வாய் கிரகத்தில் இனப்பெருக்கம் செய்ய முடியுமா? விஞ்ஞானிகள் சொன்ன பதில் இது தான்..மனிதர்கள் செவ்வாய் கிரகத்தில் இனப்பெருக்கம் செய்ய முடியுமா? விஞ்ஞானிகள் சொன்ன பதில் இது தான்..

          டாக்கில் சுவிட்சை கிளிக் செய்து வெயிட் செய்யுங்கள்

          டாக்கில் சுவிட்சை கிளிக் செய்து வெயிட் செய்யுங்கள்

          • வாட்ஸ்அப் பயன்பாட்டிற்கு எதிராக கொடுக்கப்பட்டிருக்கும் டாக்கில் சுவிட்சை கிளிக் செய்யவும்.
          • நடைபெறும் செயல்முறை முடிவடையும் வரை காத்திருந்து முகப்புத் திரைக்குத் திரும்புங்கள்.
          • இரண்டாவது பயன்பாட்டின் இரண்டாவது பதிப்பை அடையாளம் காணும் வகையில் வாட்ஸ்அப் ஐகான் மீது புது அடையாளம் காண்பிக்கப்படும்.
          • இனி ஒரே ஸ்மார்ட்போனில் இரண்டு வாட்ஸ்அப் பயன்படுத்தலாம்

            இனி ஒரே ஸ்மார்ட்போனில் இரண்டு வாட்ஸ்அப் பயன்படுத்தலாம்

            • அடுத்து நீங்கள் வழக்கம் போல வாட்ஸ்அப்பை ஓபன் செய்து புதிய வாட்ஸ்அப் எண் மூலம் லாகின் செய்துகொள்ளலாம்.
            • உங்கள் பயன்பாட்டில் உள்ள வாட்ஸ்அப் வழக்கம் போல் செயல்படும்.
            • இப்போது கூடுதலாகி மற்றொரு எண் கொண்ட வாட்ஸ்அப் பேரலல் ஆப்ஸ் பிரிவில் செயல்பாட்டில் இருக்கும்.
            • இதன் மூலம் ஒரே ஸ்மார்ட்போனில் நீங்கள் இரண்டு வாட்ஸ்அப் கணக்குகளைப் பயன்படுத்தலாம்.

Best Mobiles in India

English summary
How to use dual WhatsApp on android smartphone easily : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X