ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ்-ல் கிடைக்கும் தரமான அம்சங்கள்.! என்னென்ன?

|

அன்மையில் வெளியிடப்பட்ட ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ்(இயங்குதளம்) ஆனது கூகுள் பிக்சல் போன் மட்டுமின்றி சில ஒன்பிளஸ், சியோமி, ஒப்போ, ரியல்மி போன்களுக்கும் புதிய ஒஎஸ் அப்டேட்டை பெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்ட்ராய்டு 11 அப்டேட் ஆனது

புதிதாக வந்த ஆண்ட்ராய்டு 11 அப்டேட் ஆனது மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்றுதான் கூறவேண்டும். இந்த ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் அப்டேட்டில் என்னென்ன புதிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன என்பதை பற்றி விரவாகப் பார்போம்.

கான்வர்ஷேஷன்ஸ்

மிகவும் எதிர்பார்த்த ஆண்ட்ராய்டு 11-ல் உங்கள் ஸ்மார்ட்போனில் கொண்டுவரும் முதல் குறிப்பிடத்தக்க மாற்றம் கான்வர்ஷேஷன்ஸ் (Conversations)பிரிவில் கிடைக்கும் உங்கள் டெக்ஸ்ட் ற்றும் இன்ஸ்டன்ட் மெசேஜ்களுக்கான பிரத்யேக இடமாகும், இதுதான் கான்வர்ஷேஷன்ஸ் என்று அழைக்கப்படுகிறது.

இந்த புதிய வசதி முக்கியமான உரையாடல்களையும் ஒரு பார்வையில் பார்ப்பதை எளிதாக்குகிறது. பின்பு இது நீங்கள் தவறிட விரும்பாத உரையாடல்களுக்கும் முன்னுரிமை கொடுக்கலாம். பின்பு சில உரையாடல்களுக்கான அறிவிப்புகளை முடக்குவதற்கான விருப்பமும் கிடைக்கும். எனவே நீங்கள் உங்கள் வேலையில் கவனம் செலுத்துவதற்கும் வழக்கமான செய்திகளால் திசைதிருப்பப்படமாலும் இருக்கலாம்.

 பப்பிள்ஸ்

பப்பிள்ஸ்

ஆண்ட்ராய்டு 11-ல் இடம்பெற்றுள் பப்பிளஸ் (Bubbles) பேஸ்பக் மெசஞ்சரில் சாட் ஹெட்ஸ் எவ்வாறு செயல்படுகிறதோ அதுபோலவே
செயல்படுகிறது. பின்பு உங்களது ஸ்மார்ட்போனில் நீங்கள் செய்யும் வேலையை விட்டுவிடாமல், உங்களுக்கான உரையாடல்களை எளிமையாக பார்க்க உதவுகிறது.

பில்ட்-இன்- ஸ்க்ரீன் ரெகார்ட்

பில்ட்-இன்- ஸ்க்ரீன் ரெகார்ட்

பிக்சல் போன் பயனர்கள் இதுவரை ஸ்க்ரீன் ரெக்கார்ட்டிற்கான மூன்றாம் தரப்பு செயலியை நிறுவியிருக்கலாம். ஏனெனில்கூகுள் நிறுவனம் இப்போது வரை அந்த ஆதரவை முன்னிருப்பாக வழங்கவில்லை. ஆனால் ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ்-ல் ஸ்க்ரீனை ரெகார்ட் செய்ய உதவும் ஒரு நிலையான அம்சமாக ஸ்க்ரீன் ரெக்கார்ட் கிடைக்கிறது. இனிமேல் மூன்றாம் தரப்பு செயலியை பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது. ஏனெனில் இந்த அப்டேட்-ல் உங்கள் மைக்ரோஃபோன், ஸ்மார்ட்போன் அல்லது இரண்டிலிருந்தும் ஒலியுடன் ரெகார்ட் செய்யலாம், இயக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

மீடியா கண்ட்ரோல்ஸ் புதியவடிவமைப்பு(Redesigned media controls)

மீடியா கண்ட்ரோல்ஸ் புதியவடிவமைப்பு(Redesigned media controls)

ஆண்ட்ராய்டு 11-ல் மீடியா கட்டுப்பாடுகள் உங்கள் ஆடியோ பின்னணி அனுபவத்தை எளிதாக நிர்வகிக்க மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளன. அதன்படி அறிவிப்பாக இருப்பதற்குப் பதிலாக நீங்கள் Quick Settings area-வில் நேரடியாக மீடியா கட்டுப்பாடு நிர்வகிக்கும் அமைப்புகளை பெறுவீர்கள். சுருக்கமாக இந்த அப்டேட் மீடியா கண்ட்ரோல்ஸ் கார்டில் உள்ள ஆடியோ
சோர்ஸ்-ஐ டேப் செய்வதின் மூலம் உங்கள் ஹெட்போனிலிருந்து ப்ளூடூத் ஸ்பீக்கருக்கு மாற அனுமதிக்கும் திறனையும் கொண்டுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இனி சீன மொபைல்களுக்கு வேலை இருக்காது: ஜியோ ஆண்ட்ராய்டு போன்.! எப்போது அறிமுகம்.!இனி சீன மொபைல்களுக்கு வேலை இருக்காது: ஜியோ ஆண்ட்ராய்டு போன்.! எப்போது அறிமுகம்.!

பவர் மெனு அப்டேட் செய்யப்பட்டுள்ளது

பவர் மெனு அப்டேட் செய்யப்பட்டுள்ளது

ஆண்ட்ராய்டு 11-ல் பவர் பொத்தானை நீண்ட நேரம் அழுத்துவதன் மூலம் உங்களது எல்லா ஸ்மார்ட் ஹோம் சாதனங்களையும் அணுக அனுமதிக்கும் திறனுடன் பவர் மென அப்டேட் செய்யப்பட்டுள்ளது. பின்பு ஸ்மார்ட் ஹோம் சாதனங்களுக்கான கட்டுப்பாடுகளைக் கொண்டுவரும் புதுப்பிக்கப்பட்ட பவர் மெனுவுடன் ஆண்ட்ராய்டு 11 வருகிறது.

ஒன் டைம் பெர்மிஷன்ஸ்

ஒன் டைம் பெர்மிஷன்ஸ்

ஐபோன்களில் ஆப் பெர்மிஷன்ஸ் எவ்வாறு கிடைக்கின்றன என்பதை போலவே செயல்படும் ஒன் டைம் பெர்மிஷன்களை ஆண்ட்ராய்டு 11 கொண்டு வருகிறது. பின்பு இது மைக்ரோஃபோன், கேமரா மற்றும் இருப்பிடத்திற்கு சிங்கிள் யூஸ் அணுகலை வழங்க அனுமதிக்கிறது. பின்பு இந்த அம்சத்தை ஒவ்வொரு முறையும் உங்கள் ஸ்மார்ட்போனில் பயன்படுத்தும் போது, குறிப்பிட்ட ஆப் வசதி உங்களது
அனுமதிளைக் கேட்கும்.

ஆட்டோ ரீசெட் பெர்மிஷன்ஸ்

ஆட்டோ ரீசெட் பெர்மிஷன்ஸ்

இந்த ஒன் டைம் பெர்மிஷன்ஸ்களுடன், பயன்படுத்தப்படாத ஆப்களுக்கான அனுமதிகளை தானாகவே மீட்டமைக்க ஆண்ட்ராய்டு 11 உங்களை அனுமதிக்கிறது. இந்த வசதி ஒரு ஆப் வசதியை நீங்கள் நீண்ட காலமாக பயன்படுத்தப்படாவிட்டலும் கூட அது உங்கள்
டேட்டாவை அணுகுவதை நீங்கள் விரும்பவில்லை என்றால் இது உங்களுக்கு உதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
How To Use Android 11 bubbles Screen Recording And More Features: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X