Amazon Prime வாட்ச் பார்ட்டி அம்சத்தை எப்படி பயன்படுத்துவது? நண்பர்களுடன் ஆன்லைனில் படம் பார்க்கலாம்
அமேசான் பிரைம் வீடியோவில் திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் வாடிக்கையாளர்களின் அனுபவத்தை உயர்த்த அமேசான் ஏராளமான புதிய அம்சங்களை உருவாக்கியுள்ளது. அதில் இப்போது, வாட்ச் பார்ட்டி அம்சம் என்ற புதிய அம்சத்தை நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த அம்சம் எப்படிச் செயல்படும், இதை எப்படிப் பயன்படுத்தலாம் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் நிகழ் நேரத்தில் திரைப்படம்
இந்த அம்சம் பயனர்களை தங்களின் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் நிகழ் நேரத்தில் திரைப்படங்களையும் நிகழ்ச்சிகளையும் பார்க்க அனுமதிக்கிறது. மேலும், இந்த அம்சம் பயனர்களை ஸ்ட்ரீமுக்கு இடையில் சாட் செய்யவும் அனுமதிக்கிறது. அமேசான் பிரைம் வீடியோ வாட்ச் பார்ட்டி அம்சத்தைத் தொடங்குவதற்கு முன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து விவரங்களையும் இங்கே குறிப்பிட்டுள்ளோம்.

பிரைம் வீடியோ வாட்ச் பார்ட்டி அம்சத்தை அப்படி பயன்படுத்துவது?
அமேசான் பிரைம் வீடியோ வாட்ச் பார்ட்டி அம்சத்தைச் செயல்படுத்த, உங்கள் டெஸ்க்டாப்பில் அமேசான் பிரைம் வீடியோ பயன்பாட்டைத் திறந்து, உங்கள் நண்பர்களைச் சேர்க்க வேண்டும். நீங்கள் விரும்பிய திரைப்படத்தைத் தேர்ந்தெடுக்கவும் அல்லது உங்கள் நண்பர்களுடன் நீங்கள் சேர்ந்து பார்க்க விரும்பும் நிகழ்ச்சியைத் தேர்வு செய்யுங்கள்.

Create Watch Party விருப்பம்
இப்போது தேர்வு செய்த படத்திற்கான தலைப்பு பக்கத்தில் அமேசான் வாட்ச் பார்ட்டி அம்சம் தெரியும்.வாட்ச் பார்ட்டி அம்சத்தைத் திரைப்பட பக்கத்தில் தோன்றும் வாட்ச் பார்ட்டி அம்சத்தின் ஐகானைக் கிளிக் செய்யுங்கள். ஐகானைக் கிளிக் செய்தவுடன், ஸ்ட்ரீமிங்கிற்கு முன் சாட் பெயரைத் தேர்வு செய்ய கேட்கப்படுவீர்கள். ஸ்ட்ரீமிங்கைத் தொடங்க 'Create Watch Party' விருப்பத்தை கிளிக் செய்யுங்கள்.

100 நபர்களுடன் இணைந்து வாட்ச் பார்ட்டி பார்க்கலாம்
இதில் நீங்கள் 100 நபர்களுடன் இணைந்து வாட்ச் பார்ட்டி அம்சத்தை அனுபவிக்க முடியும்.
முக்கியமான குறிப்பு, அமேசான் வாட்ச் பார்ட்டி அம்சத்தை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் சேர்ந்து அனுபவிக்க, அவர்களிடமும் சரியான அமேசான் பிரைம் வீடியோ சந்தாவைக் கொண்டிருக்க வேண்டும் என்பதை நீங்கள் உறுதிப்படுத்த வேண்டும்.

இதில் மட்டும் இந்த புதிய அம்சம் கிடையாது
இந்த அம்சம் டெஸ்க்டாப் குரோம் மற்றும் பயர்ஃபாக்ஸ் பிரௌசரில் மட்டுமே கிடைக்கிறது. ஸ்மார்ட்போன், இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர், ஆப்பிள் சஃபாரி போன்ற தளங்களில் பயன்படுத்தமுடியாது.


Click it and Unblock the Notifications