ஆதார் கார்டு போட்டோவை எப்படி மாற்றுவது? இதற்கு கட்டணம் வசூலிக்கப்படுமா? முழு விபரம்.!

|

இந்திய குடிமக்களுக்கு ஆதார் அட்டை (Aadhaar Card) என்பது மிக முக்கியமான கட்டாய அடையாள ஆதார ஆவணமாகத் திகழ்கிறது. ஆதாரில் உள்ள 12 இலக்க தனிப்பட்ட அடையாள எண் இந்திய அரசின் சார்பாக இந்தியத் தனித்துவ அடையாள ஆணையத்தால் வழங்கப்படுகிறது. இது அட்டைதாரரின் பயோமெட்ரிக் டேட்டாக்களை கொண்டுள்ளது. அரசாங்க வேலைகள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வங்கி அதிகாரப்பூர்வ வேலைகளுக்கும் ஆதார் அவசியமாகிறது.

ஆதார் அட்டையில் இருக்கும் உங்களுடைய போட்டோவை மாற்ற முடியுமா?

ஆதார் அட்டையில் இருக்கும் உங்களுடைய போட்டோவை மாற்ற முடியுமா?

உண்மையைச் சொல்லப் போனால், இந்தியாவிற்குள் நீங்கள் எங்குச் சென்றாலும், இந்த ஆதார் அடையாள சான்றைத் தான் அனைவரும் கேட்கின்றனர். இப்படி பலதரப்பட்ட சேவைகளுக்கு அடையாள சான்றாகச் செயல்படும் ஆதார் அட்டையில் இருக்கும் உங்களுடைய போட்டோவை தெளிவாகவும், புதிதானதாகவும் வைத்துக்கொள்வது அவசியம். உங்கள் ஆதார் அட்டையில் உள்ள போட்டோவை நீங்கள் அப்டேட் செய்துகொள்ள இப்போது UIDAI அனுமதிக்கிறது.

ஆதார் அட்டையில் உள்ள எந்த தகவலை எல்லாம் மாற்றலாம்?

ஆதார் அட்டையில் உள்ள எந்த தகவலை எல்லாம் மாற்றலாம்?

ஆதார் அட்டையில் உள்ள போட்டோவை எப்படி மாற்றுவது அல்லது அப்டேட் செய்வது என்பதைத் தான் நாம் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். ஆதாரில் உள்ள அனைத்து தனிப்பட்ட அடையாள எண்களும் வாழ்நாள் முழுவதும் ஒரே மாதிரியாக இருக்கும் என்பதனால், அதில் எந்த மாற்றத்தையும் உங்களால் மேற்கொள்ள முடியாது. அதுதவிர, முகவரி, போன் நம்பர் மற்றும் போட்டோவை மாற்ற இது அனுமதிக்கும்.

ரூ. 30,000 விலையில் புது iPhone 12 வாங்கலாமா? எப்படி தெரியுமா? கொஞ்சம் கவனமா படிங்க.!ரூ. 30,000 விலையில் புது iPhone 12 வாங்கலாமா? எப்படி தெரியுமா? கொஞ்சம் கவனமா படிங்க.!

ஆதார் தகவல் எப்போதும் அப்டேட்டில் இருப்பது ஏன் முக்கியமானது?

ஆதார் தகவல் எப்போதும் அப்டேட்டில் இருப்பது ஏன் முக்கியமானது?

எப்போதும், ஆதார் ஆவணத்தில் உள்ள தகவல்கள் சரியானதாக அப்டேட் செய்யப்பட்டிருக்க வேண்டியது முக்கியமானது. எனவே, தங்கள் ஆதார் அட்டையில் உள்ள எந்தத் தகவலையும் மாற்ற விரும்பும் குடிமக்களுக்கு, UIDAI இன் அதிகாரப்பூர்வ தளத்தைப் பார்வையிடுவதன் மூலம் அவற்றை நீங்கள் திருத்திக்கொள்ள முடியும். நீங்கள் ஆதார் போட்டோவை சமீபத்திய படத்துடன் புதுப்பிக்க விரும்பினால், கீழே குறிப்பிடப்பட்டுள்ள செயல்முறைகளைப் பின்பற்றுங்கள்.

ஆதார் போட்டோவை மாற்ற ஆன்லைன் முறை மட்டும் போதுமானதா?

ஆதார் போட்டோவை மாற்ற ஆன்லைன் முறை மட்டும் போதுமானதா?

இதைச் செய்வதற்கு நீங்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம், நீங்கள் ஆதார் பதிவு மையம் அல்லது ஆதார் சேவா கேந்திராவை நேரில் சென்று பார்வையிடலாம். ஆன்லைனிலும் மக்கள் மாற்றங்களைச் செய்யலாம் என்றாலும் கூட, உங்களுடைய புதிய போட்டோவை நீங்கள் அருகிலுள்ள ஆதார் மையம் சென்று பயோமெட்ரிக் உள்நுழைவுடன் அனுமதி பெற்ற பின், ஆதார் மையத்தில் இருந்து கிளிக் செய்யப்பட வேண்டும் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

ஆதார் அட்டையில் உள்ள போட்டோவை எப்படி அப்டேட் செய்வது?

ஆதார் அட்டையில் உள்ள போட்டோவை எப்படி அப்டேட் செய்வது?

  • முதலில் நீங்கள் UIDAI இன் uidai.gov.in. அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும்.
  • இணையதளத்தில் இருந்து ஆதார் பதிவுப் படிவத்தைத் தேடிப் பதிவிறக்கம் செய்யவும்.
  • படிவத்தில் உள்ள அனைத்து விவரங்களையும் சரியாக நிரப்ப வேண்டும்.
  • இந்த படிவத்தை அருகில் உள்ள ஆதார் பதிவு மையம் அல்லது ஆதார் சேவா கேந்திரா சென்று சமர்ப்பிக்கவும்.
  • உறங்கும் போது உங்கள் அருகில் Smartphone-ஐ வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? உஷார் மக்களே!உறங்கும் போது உங்கள் அருகில் Smartphone-ஐ வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? உஷார் மக்களே!

    ஆதார் அட்டையில் போட்டோவை மாற்ற கட்டணமா?

    ஆதார் அட்டையில் போட்டோவை மாற்ற கட்டணமா?

    • தற்போது இருக்கும் ஆதார் நிர்வாகி அனைத்து விவரங்களையும் பயோமெட்ரிக் சரிபார்ப்பு மூலம் உறுதி செய்வார்.
    • அடுத்து, நிர்வாகி உங்கள் ஆதார் அட்டையில் புதுப்பிக்கப்படும் புதிய படத்தைக் கிளிக் செய்வார்.
    • இந்த போட்டோ அப்டேட் சேவைக்கு நீங்கள் GST உடன் ரூ.100 கட்டணம் வசூலிக்கப்படும்.
    • ஆதார் நிர்வாகி உங்களுக்கு புதுப்பிப்பு கோரிக்கை எண்ணை (URN) வழங்குவார்.
    • ஆதார் அட்டையில் போட்டோவை மாற்றும் முன் இதை தெரிந்துகொள்ளுங்கள்

      ஆதார் அட்டையில் போட்டோவை மாற்றும் முன் இதை தெரிந்துகொள்ளுங்கள்

      முக்கிய குறிப்பு: UIDAI இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் URN எண்ணைப் பயன்படுத்தி உங்களின் சமீபத்திய ஆதார் அட்டையின் நிலையைக் கண்காணிக்கலாம். கூடுதலாக, ஆதார் புகைப்பட புதுப்பிப்பு செயல்முறை 90 நாட்கள் வரை நேரம் எடுத்துக்கொள்ளும் என்பதை மறக்காதீர்கள். இந்த செயல்முறை முடிந்ததும், ஆதார் பதிவு மையத்திற்குச் சென்று அல்லது UIDAI இன் அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து e-aadhaar நகலைப் பதிவிறக்குவதன் மூலம் உங்கள் புதுப்பிக்கப்பட்ட ஆதார் அட்டையை நீங்களே பிரிண்ட் செய்துகொள்ளலாம்.

Best Mobiles in India

Read more about:
English summary
How To Update Photo In Aadhaar Card Step By Step Guide 2022 Tips Online

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X