ஜிமெயிலில் இதெல்லாம் பண்ணலாமா? இத்தனை நாளா இது தெரியாம போச்சே!

|

ஜிமெயில் என்பது பல்வேறு தேவைகளுக்கும் பிரதானமாக உள்ளது. பொதுவாக ஒரு சில முக்கிய விஷயங்களை நாம் ஜிமெயில் கணக்கு மூலமாகவே பெருகிறோம். ஜிமெயில் தங்களது வாடிக்கையாளர்களுக்கான பயன்பாட்டை எளிதாக்கும் வகையில் பல்வேறு சிறப்பம்சங்களை அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கின்றன.

தவறான தகவல்களுடன்

ஒருவேளை தவறான தகவல்களுடன் அல்லது பெரிய தவறுடன் நீங்கள் மின்னஞ்சலை அனுப்பும் கெட்ட நேரங்கள் உங்களுக்கு வரலாம். அந்த நேரத்தில் தான் Unsend பொத்தானின் தேவையை நீங்கள் உணர்வீர்கள்.

 குறுகிய நேரம் கிடைக்கும்

இந்த ஜிமெயிலில் குறிப்பிட்ட மின்னஞ்சலை அன்சென்ட் செய்ய தனி பொத்தானோ அல்லது அம்சமோ இல்லை என்றாலும் கூட குறிப்பிட்ட இமெயிலை அனுப்பிய பின் அதை ரீகால் செய்வதற்கு உங்களுக்கு குறுகிய நேரம் கிடைக்கும்.

ரூ .500 கோடி முதலீட்டுடன் புதிய துணை நிறுவனம் உருவாக்கிய Micromax.!ரூ .500 கோடி முதலீட்டுடன் புதிய துணை நிறுவனம் உருவாக்கிய Micromax.!

ஏற்கனவே நீங்கள் அறிந்திருக்கலாம்

இந்த வசதியை ஏற்கனவே நீங்கள் அறிந்திருக்கலாம். நீங்கள் ஒரு மின்னஞ்சலை அனுப்பும்போது, Undo பொத்தான் திரையில் தோன்றும், இது நீங்கள் Settings-இல் டைமரை அமைத்திருந்தால் அதிகபட்சம் 30 விநாடிகள் தெரியும்.

ஜிமெயில் ஆப்

அதாவாது குறிப்பிட்ட நேரத்திற்குள் அன்டூ பொத்தானை அழுத்தினால் மின்னஞ்சல் ரத்து செய்யப்படும். ஒருவேளை ஜிமெயில் பக்கத்தில் வேறு ஏதேனும் ஒரு விருப்பத்தை நீங்கள் அழுத்தினால், அன்டூ பொத்தான் உடனடியாக மறைந்து விடும். ஏனெனில் ஒரு இமெயில் அனுப்பப்பட்டதும் அந்த பக்கம் ரெஃப்ரெஷ் செய்யப்படும். இந்த அம்சம் ப்ரவுஸர் அல்லது ஜிமெயில் ஆப் ஆகிய இரண்டிலுமே செயல்படும்.

குள் உங்களுக்கு ஜிமெயிலில்

மேலும் இது தவிர்த்து கூகுள் உங்களுக்கு ஜிமெயிலில் ஒரு confidential mode-ஐயும் வழங்குகிறது. ஒருவேளை நீங்கள் இமெயிலில் சொதப்பும் ஒரு நபராக இருந்தால் இது நிச்சயமாக உங்களுக்கு கைகொடுக்கும். நீங்கள் இந்த பயன்முறையை இயக்கினால் பெறுநர்களுக்கு குறிப்பிட்ட மின்னஞ்சலை forward, copy, print அல்லது download செய்யும் விருப்பம் இருக்காது.

 ஒரு மின்னஞ்சலை

இப்போது நீங்கள் ஒரு மின்னஞ்சலை எவ்வாறு ரீகால் செய்யலாம் மற்றும் அதை அன்டூ செய்யும் நேரத்தினை தேர்வு செய்வது எப்படி என்பதை சற்று விரிவாகப் பார்ப்போம்.

மின்னஞ்சலை ரீகால் அல்லது அன்சென்ட் செய்வது எப்படி?

மின்னஞ்சலை ரீகால் அல்லது அன்சென்ட் செய்வது எப்படி?

வழிமுறை-1

நீங்கள் ஏற்கனவே அனுப்பிய ஒரு குறிப்பிட்ட மின்னஞ்சலை ரீகால் அல்லது அன்சென்ட் செய்ய விரும்பினாலும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், உங்களுக்கு நிறைய நேரம் கிடைக்காது. அதை செய்ய உங்களுக்கு சிறிது நேரம் மட்டுமே கிடைக்கும்.

வழிமுறை-2

அனுப்பட்ட இமெயிலை திரும்ப பெற விரும்பினால் ஸ்க்ரீனில் இடது மூலையில் Message sent மற்றும் Undo அல்லது View message போன்ற விருப்பங்களை காண்பீர்கள்.

வழிமுறை-3

மேற்குறிப்பிட்ட விருப்பங்களில் Undo விருப்பத்தை உடனே கிளிக் செய்யவும் அவ்வளவுதான். அந்த குறிப்பிட்ட இமெயில் அனுப்பப்படாது.

ஒரு இமெயிலை ரீகால் அல்லது அன்டூ செய்வதற்க்கான குறிப்பிட்ட நேரத்தை தேர்வு செய்வது எப்படி?

ஒரு இமெயிலை ரீகால் அல்லது அன்டூ செய்வதற்க்கான குறிப்பிட்ட நேரத்தை தேர்வு செய்வது எப்படி?

வழிமுறை-1

உங்களது கம்ப்யூட்டரில் உள்ள ஜிமெயிலுக்குச் செல்லவும்.

வழிமுறை-2

அடுத்து வலதுபுறத்தில் உள்ள செட்டிங்ஸ்-ஐ கிளிக் செய்து, பின்னர் all settings என்பதை தேர்வு செய்யவும்.

வழிமுறை-3

பின்னர் Undo Send என்பதற்கு அடுத்து 5, 10, 20 அல்லது 30 விநாடிகள் போன்ற அன்டூ செய்வதற்கான நேர விருப்பங்களை நீங்கள் காண்பீர்கள். அதில் ஒன்றை தேர்வுசெய்ய வேண்டும் அவ்வளவுதான். கண்டிப்பாக இந்த வசதி பல்வேறு மக்களுக்கும் பயனுள்ள வகையில் இருக்கும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
How to unsend or recall emails on Gmail : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X