Home
How to

விண்டோஸ் 10 இயங்குதளத்தில் பிரீ-லோடு செய்யப்பட்ட செயலிகளை அன்-இன்ஸ்டால் செய்வது எப்படி?

விண்டோஸ் 10 இயங்குதளத்தில் எக்ஸ்பாக்ஸ், குரூவ் மியூசிக், பீப்பிள், மேப்ஸ் என பல்வேறு இதர செயலிகள் பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டு இருக்கின்றன. இவை கணினிகளில் அதிகளவு ஸ்பேஸ் எடுத்துக் கொள்ளாது என்ற பட்சத்திலும் அவற்றை அன்-இனஸ்டால் செய்வது எளிமையான காரியமே.

விண்டோஸ் 10 தளத்தில் பிரீ-லோடு செயலிகளை அன்-இன்ஸ்டால் செய்வது எப்படி?

பில்ட்-இன் முறையில் இருக்கும் செயலிகளை கண்ட்ரோல் பேனலில் இருந்து அன்-இன்ஸ்டால் செய்ய முடியது என்றாலும், இதை செய்ய வேறு வழிமுறைகள் இருக்கின்றன. இதுபோன்ற சர்வதேச செயலிகளை அன்-இன்ஸ்டால் செய்ய சில எளிய வழிமுறைகள் இருக்கின்றன. இவற்றை பின்பற்ற எவ்வித மூன்றாம் தரப்பு செயலிகளோ அல்லது சேவைகளையோ பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது.

வழிமுறை 1: டிராப்டவுன் மெனுவில் இருந்து செயலிகளை அன்-இன்ஸ்டால் செய்வது

விண்டோஸ் 10 தளத்தில் செயலிகளை அன்-இன்ஸ்டால் செய்ய இதுதான் எளிய வழிமுறை ஆகும். முதலில் ஸ்டார்ட் மெனுவில் அன்-இன்ஸ்டால் செய்ய வேண்டிய செயலியின் பெயரை டைப் செய்ய வேண்டும். பின் ரைட்-க்ளிக் செய்து அன்-இன்ஸ்டால் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இது எளிய வழிமுறை என்றாலும் எல்லா செயலிகளையும் இதுபோன்று அன்-இன்ஸ்டால் செய்ய முடியாது.

விண்டோஸ் 10 தளத்தில் பிரீ-லோடு செயலிகளை அன்-இன்ஸ்டால் செய்வது எப்படி?

வழிமுறை 2: பவர்ஷெல் பயன்படுத்துவது

விண்டோஸ் 10 தளத்தில் உள்ள பில்ட்-இன் செயலிகளை பவர்ஷெல் மூலம் எடுக்க முடியும். இந்த இயங்குதளத்தை பலர் பயன்படுத்தி வருகின்றனர் என்பதால், இவற்றை அன்-இன்ஸ்டால் செய்வது மிகவும் எளிய வழிமுறை தான். பில்ட்-இன் செயலிகளை அன்-இன்ஸ்டால் செய்வதில் பவர்ஷெல் மிகவும் பிரபல செயலியாக இருக்கிறது.

1 - விண்டோஸ் 10 சர்ச் பாரில் பவர்ஷெல் என டைப் செய்ய வேண்டும். பவர்ஷெல் ஆப்ஷனில் ரைட் க்ளிக் செய்து Run as Administrator பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.

2 - இனி Get-AppxPackage | ft Name, PackageFullName -AutoSize எனும் கமாண்ட் டைப் செய்ய வேண்டும். பின் இன்ஸ்டால் செய்யப்பட்டு இருக்கும் செயலிகளின் பட்டியலை பார்க்க முடியும்.


3 - சில செயலிகளை குறிப்பாக அன்-இன்ஸ்டால் செய்ய Get-AppxPackage *xboxapp எனும் கமாண்ட் பயன்படுத்த வேண்டும்.


நீங்கள் நீக்க விரும்பும் செயலியின் பெயரை * குறியீட்டின் பின் பயன்படுத்த வேண்டும்.


4 - விண்டோஸ் புளோட்வேரை நீக்கும் வரை காத்திருக்க வேண்டும். இனி பில்ட்-இன் செயலிகள் நீக்கப்பட்டு இருக்கும்.


விண்டோஸ் 10 தளத்தில் உள்ள பில்ட்-இன் செயலிகளை நீக்க பல்வேறு வழிமுறைகள் இருக்கின்றன. இந்த வழிமுறைகளை பின்பற்றி பல்வேறு செயலிகளை நீக்க முடியும் என்றாலும், இது சிக்கல் நிறைந்த சில செயலிகளுக்கு மட்டும் பொருந்தாது.


இவை இயங்குதளத்திலேயே இருக்க வேண்டும் என உருவாக்கப்படவில்லை, எனினும், இவற்றை அழிக்கவோ, அன்-இன்ஸ்டால் செய்யவோ எந்த வழிமுறையும் கிடையாது. சில செயலிகள் தவிர பெரும்பாலான பில்ட்-இன் செயலிகளை விண்டோஸ் 10 தளத்தில் இருந்து அன்-இன்ஸ்டால் செய்துவிட முடியும்.

Best Mobiles in India

English summary
How To Uninstall Windows 10 Pre-Loaded Apps : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X