Just In
- 47 min ago
கேனான் EOS M200 மிரர்லெஸ் கேமரா இன்று முதல் விற்பனையில்! விலை என்ன தெரியுமா?
- 51 min ago
உஷார்- 2000 "சியோமி" போலி பொருட்கள் பறிமுதல்: உண்மையை கண்டறிவது எப்படி?
- 52 min ago
கேலக்ஸி எம்10எஸ் ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.
- 1 hr ago
மூங்கில் குச்சி, ஹெட்ஃபோன், சார்ஜர் கொண்டு பள்ளி மாணவன் செய்த புதுமைப் படைப்பு.!
Don't Miss
- News
ஹைதராபாத் என்கவுண்டர்.. போலீஸ் மீது எப்.ஐ.ஆர்.. உச்சநீதிமன்றத்தில் அதிரடி வழக்கு
- Movies
மனைவி பிரியாவின் பிறந்தநாள்.. அட்லி போட்ட உருக்கமான வாழ்த்து டிவீட்.. நெட்டிசன்கள் செம கலாய்!
- Automobiles
அதிர்ஷ்டசாலிகள் நொய்டா வாசிகள்... வாசல் தேடி வரும் சிறப்பு வசதி.. என்னனு தெரியுமா..?
- Sports
தோல்வியே சந்திக்காத நார்த் ஈஸ்ட் அணியை வீழ்த்துமா ஏடிகே? பரபரப்பான ஐஎஸ்எல் மோதல்!
- Education
திருவள்ளுவர் பல்கலையில் பேராசிரியர் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Finance
2019 தொடக்கத்தில் லாட்டரி முடிவில் பிரம்மாண்ட புதையல்! பணத்திலேயே குளிக்கும் இந்த அதிர்ஷ்டசாலி யார்?
- Lifestyle
உங்கள் துணையுடன் நீங்கள் இதை செய்தால் உங்களுக்குள் பிரிவே ஏற்படாது…!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
வெளிநாட்டு பயணங்களில் டிரோன் பயன்படுத்தும் முன் இவற்றை தெரிந்து கொள்ளுங்கள்
பயணம் மேற்கொள்ளும் போது டிரோன்களை உடன் எடுத்துச் செல்வது அதிக ஆபத்தான விஷயமாகும். அதுவும் வெளிநாடுகளுக்கு பயணிக்கும் போது டிரோன்களை எடுத்துச் செல்வதில் பல சிக்கல்கள் இருக்கின்றன. பல்வேறு நாடுகளில் டிரோன் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இதுதவிர ஒவ்வொரு நாட்டிலும் டிரோன் பயன்பாட்டிற்கான விதிகள் மாறுபடும்.
புகைப்பட கலைஞர்கள், பயண விரும்பிகள் மற்றும் வீடியோ எடுப்பவர்களுக்கு டிரோன்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன. டிரோன்களை பயன்படுத்தி வீடியோக்களை மிக அழகாகவும், வித்தியாசமாகவும் படம்பிடிக்க முடியும். இதுதவிர இதனை இயக்குவதும் எளிமையான ஒன்று தான்.

டிரோன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளன
காடுகள், நெடுஞ்சாலை மற்றும் பாலைவனம் போன்ற பகுதிகளில் பயணிக்கும் போது டிரோன்களின் பயன்பாடு மேலும் அதிகரிக்கிறது. டிரோன் பயன்படுத்துவதில் பல்வேறு நன்மைகள் இருக்கும் நிலையிலும் சில நாடுகளில் டிரோன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளன. சில நாடுகளில் பாதுகாப்பு காரணங்களுக்காக சில பகுதிகளில் மட்டும் டிரோன் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

டிரோன் பயன்பாட்டிற்கு முன் முறையான அனுமதி
அந்த வகையில் டிரோன் வைத்திருப்பவர் என்ற அடிப்படையில், டிரோனை பறக்க விடும் முன் டிரோன்களுக்கு தடை எனக் கோரும் பதாகைகளை உற்று நோக்க வேண்டும். இதுதவிர டிரோன் பயன்பாட்டிற்கு முன் முறையான அனுமதி பெறுவதும் அவசியமாகும். உள்நாட்டில் இப்படியிருக்க வெளிநாடுகளுக்கு டிரோன்களை எடுத்துச் செல்லும் போது இதுபோன்ற விஷயங்களில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டியதும் அவசியமாகும்.
3ஜிபி ரேம் வசதியுடன் அசத்தலான விவோ வ்யை12 அறிமுகம்.!

டிரோன் விதிமுறைகள்:
உலகம் முழுக்க டிரோன்கள் அதிக பிரபலமடைந்து வருகின்றன. அந்த வகையில் புது நாடு ஒன்றிற்கு டிரோன் கொண்டு சென்று பயன்படுத்த திட்டமிட்டால், அந்நாட்டு டிரோன் விதிகளை பற்றி அறிந்து கொள்ள வேண்டும். புதிய நாடுகளுக்கு பயணப்படும் போது அந்நாட்டு அதிகாரிகளிடம் டிரோன் பயன்படுத்த தேவையான அனுமதி பெற வேண்டியதும் அவசியமாகும். டிரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் அவற்றை இயக்குவது குற்றமாகும்.

செக்-இன் லக்கேஜ்
பயணங்களின் போது டிரோன்களை எப்போதும் செக்-இன் லக்கேஜில் வைத்திருக்க வேண்டும். மேலும் இவ்வாறு எடுத்துச் செல்லும் முன் டிரோன்களில் பேட்டரி எடுக்கப்பட்டு விட்டதா என்றும் சரிபார்க்க வேண்டும். விதிகளை பின்பற்றும் போது, லித்தியம் பாலிமர் பேட்டரிகளை கேபின் பேக்கஜில் வைத்துக் கொள்ளவும். கூடுதல் பாதுகாப்பிற்கு தீப்பிடிக்காத சார்ஜிங் பேக் கொண்டு செல்லலாம்.
பப்ஜி விளையாடியதைத் தடுத்த அண்ணனைக் குத்திக் கொன்ற 15வயது தம்பி.!

போர்ட்டபிள் டிரோன்களை பயன்படுத்தலாம்
பயணங்களின் போது பெரிய டிரோன்களை கொண்டு செல்வது சிரமமான காரியமாகும். இதனால் போர்ட்டபிள் டிரோன் கொண்டு செல்வது சவுகரிய பயணத்திற்கு வழிவகை செய்யும். பெரிய டிரோன்களுக்கென கூடுதல் உபகரணங்கள் இருக்கும் என்பதால், அவற்றை சுமக்க அதிக பைகளை சுமக்க வேண்டியிருக்கும்.

கூடுதல் பேட்டரிகள்
டிரோன் பேட்டரிகள் குறைந்த அளவு பேக்கப் கொடுக்கும் என்பதால், கூடுதல் பேட்டரிகளை கொண்டு செல்லலாம். இவை அதிக நேரம் டிரோன் பயன்படுத்த வழி செய்யும்.

நெரிசல் மிக்க பகுதிகள்
டிரோன்களை அதிக கூட்ட நெரிசல் மிக்க பகுதிகளில் பயன்படுத்துவதை தவிரிக்க வேண்டும். குறைந்தளவு மக்கள் இருக்கும் பகுதிகளில் டிரோன் பயன்படுத்துவது நல்லது. மேலும் டிரோன் பயன்படுத்தும் போது அதனை மிகவும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.
வெளிநாடுளுக்கு டிரோன் கொண்டு செல்லும் போது மேலே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றினால் பயணம் சிறப்பாக அமையும். இந்தியாவில் டிரோன் பயன்பாடு சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்படுகிறது. பயனர்கள் முன்கூட்டியே முறையான அனுமதி பெற்ற டிரோன்களை பயன்படுத்தலாம்.
-
29,999
-
14,999
-
28,999
-
34,999
-
1,09,894
-
15,999
-
36,990
-
79,999
-
71,990
-
49,999
-
14,999
-
9,999
-
64,900
-
34,999
-
15,999
-
25,999
-
46,354
-
19,999
-
17,999
-
9,999
-
18,200
-
18,270
-
22,300
-
33,530
-
14,030
-
6,990
-
20,340
-
12,790
-
7,090
-
17,090