காசு போடனும்., உங்களிடம் வாட்ஸ்அப் பே இருக்கா?- வளர்ந்து வரும் வாட்ஸ் அப் பே: பயன்படுத்துவது எப்படி?

|

இந்தியா உட்பட பல நாடுகளில் வாட்ஸ்அப் மிகவும் பிரபலமான உடனடி செய்தியிடல் பயன்பாடாகும். வாட்ஸ்அப் தளம் பல்வேறு வகையில் பிரதான பயன்பாடாக மாறி இருக்கிறது. வாட்ஸ்அப் தளத்தில் தகவல்களை பகிர்வதோடு மட்டுமல்லாமல், வீடியோ, இமேஜ், இருப்பிடம் உள்ளிட்ட பல்வேறு தகவலை பகிர பிரதான தளமாக இருக்கிறது. வாட்ஸ்அப் நிறுவனம் வாடிக்கையாளர் தேவை அறிந்து பல்வேறு அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி வாட்ஸ்அப்பில் பிரதான பயன்பாடாக 2020 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட சேவை தான் வாட்ஸ்அப் பே அம்சம், இந்த அம்சத்தின் பயன்பாடு குறித்த விவரங்களை பார்க்கலாம்.

வாட்ஸ்அப் செயலியில் தொடர்ந்து புதிய அம்சங்கள்

வாட்ஸ்அப் செயலியில் தொடர்ந்து புதிய அம்சங்கள்

வாட்ஸ்அப் செயலி பொறுத்தவரை உலகம் முழுவதும் அதிகளவு மக்கள் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக இந்த செயலி மூலம் செய்திகள், தகவல்கள் போன்றவற்றை மிக எளிமையாக பகிர்ந்து கொள்ளலாம். இந்த வாட்ஸ்அப் செயலியில் தொடர்ந்து புதிய அம்சங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் வாட்ஸ்அப் நிறுவனம் கடந்த 2018-ம் ஆண்டின் துவகத்தில் சுமார் 1 மில்லியன் பயனர்களுடன் நாட்டில் அதன் கட்டண சேவையை சோதிக்கத் தொடங்கியது. இப்போது அனைவருக்குமான ஒரு அம்சமாக வழங்கப்படுகிறது.

யூபிஐ அடிப்படையிலான கட்டண சேவை

யூபிஐ அடிப்படையிலான கட்டண சேவை

வாட்ஸ்அப் பல்வேறு அம்சங்களை வாடிக்கையாளர்கள் தேவை அறிந்து அறிமுகம் செய்து வருகிறது. வாட்ஸ்அப் பே என்பது யூபிஐ அடிப்படையிலான கட்டண சேவை தளமாகும். இது கூகுள்பே, போன்பே போன்று பயனர்களை பணம் செலுத்த அனுமதிக்கிறது. அதேபோல் நிறுவனம் பயனர்கள் அனுபவத்தை மேம்படுத்த வாட்ஸ்அப் பே-க்கு பல கவர்ச்சிகரமான அம்சங்களை வழங்கி வருகிறது. வாட்ஸ்அப் பே தளத்தில் கணக்கை இணைப்பது, பண இருப்பை சரி பார்ப்பது, பணம் அனுப்புவது உள்ளிட்ட விவரங்களை முழுமையாக பார்க்கலாம்.

வாட்ஸ்அப் பே பயன்பாட்டை எவ்வாறு அமைப்பது

வாட்ஸ்அப் பே பயன்பாட்டை எவ்வாறு அமைப்பது

வாட்ஸ்அப் பேமெண்ட் அமைப்பது மிகவும் எளிதானதாகும். முதலில் உங்கள் வாட்ஸ்அப் கணக்கை திறந்து மெனு ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

இதில் மெசேஜ் என்ற தேர்வுக்கு அருகில் கட்டண விருப்பம் காண்பிக்கப்படும் இதை கிளிக் செய்து உள்ளே நுழையலாம்

விருப்பங்களின் பட்டியலில் உங்கள் வங்கிப் பெயரை தேர்ந்தெடுக்க வேண்டும், அதன்பின் எஸ்எம்எஸ் அங்கீகாரம் வழங்கப்படும்.

பின் உங்கள் பரிவர்த்தனைகளை தொடங்க உங்கள் யூபிஐ பின்னை அமைக்க வேண்டும்.

வாட்ஸ்அப் தளத்தின் மூலம் பணம் அனுப்புவது எப்படி

வாட்ஸ்அப் தளத்தின் மூலம் பணம் அனுப்புவது எப்படி

வாட்ஸ்அப் தளத்தின் மூலம் பணம் அனுப்புவது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.

வாட்ஸ்அப் மூலம் உங்கள் தொடர்புகளுக்கு பணம் அனுப்புவது என்பது எளிதான ஒன்றாகும்.

வாட்ஸ்அப் கணக்கை திறந்து நீங்கள் பணம் அனுப்பும் விரும்பும் பட்டத்தில் ஒரு நபரின் சேட்டிங்கை திறக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட வாட்ஸ்அப் கட்டண விருப்பத்தை பயன்படுத்தாத பட்சத்தில் கூகுள் பே மற்றும் போன்பே போன்ற பிற பயன்பாடுகளின் யூபிஐ ஐடி மூலம் பணத்தை அனுப்பலாம். அவர்கள் வாட்ஸ்அப் பே பதிவு செய்யாத பட்சத்தில் நீங்கள் வாட்ஸ்அப் பே பதிவு செய்ய விண்ணப்பம் விடுக்கலாம்.

பணம் பெறுபவர் முன்னதாகவே வாட்ஸ்அப் பே கணக்கை பயன்படுத்தும் பட்சத்தில் நீங்கள் பேமெண்ட் விருப்பத்தை கிளிக் செய்து உள்ளே நுழையலாம். குறிப்பை இணைத்து நெக்ஸ்ட் என்ற விருப்பத்தை கிளிக் செய்து சென்ட் பேமெண்ட் என்ற விருப்பத்தின் மூலம் பணம் செலுத்தலாம்.

வாட்ஸ்அப் கணக்கில் உங்கள் இருப்பை எவ்வாறு சரிபார்ப்பது

வாட்ஸ்அப் கணக்கில் உங்கள் இருப்பை எவ்வாறு சரிபார்ப்பது

வாட்ஸ்அப் பேயின் ஒரு பகுதியாக வாட்ஸ்அப்பில் இருந்தே நமது வங்கிக் கணக்கு இருப்பை சரிபார்க்கும் வசதியும் இதில் இருக்கிறது.

வாட்ஸ்அப் கணக்கை ஓபன் செய்து டிஸ்ப்ளேவின் மேல் வலது புறத்தில் உள்ள மூன்று புள்ளி ஐகானை கிளிக் செய்யவும்.

உங்கள் வங்கிக் கணக்கை தேர்ந்தெடுக்க "பேமெண்ட்ஸ்" என்ற விருப்பத்தை தேர்ந்தெடுத்து கீழ ஸ்வைப் செய்ய வேண்டும். கணக்கு இருப்பு என்ற விருப்பம் காட்டப்படும் அதை தேர்ந்தெடுத்து ஓபன் செய்த உடன் பின்-ஐ உள்ளிட வேண்டும். இதன்மூலம் இருப்பை சரி பார்க்கலாம். பணம் அனுப்பும் போது கணக்கு இருப்பை சரிபார்க்கும் விருப்பத்தையும் வாட்ஸ்அப் வழங்குகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
How to Transfer Money and Check Balance Via Whatsapp Pay

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X