இன்டர்நெட் இல்லாமல் கூட மொபைலில் பண பரிவர்த்தனை செய்யலாம்! இந்த வசதியை உடனே முயற்சி செய்யுங்கள்.!
நீங்கள் அவசரமாகப் பணப் பரிவர்த்தனை செய்ய வேண்டும் என்ற இக்கட்டான சூழ்நிலையில் தான்,உங்களின் மொபைல் இன்டர்நெட் மெதுவாக இருக்கும் அல்லது இல்லாமல் கூடப் போகும். அப்படியான இக்கட்டான சூழ்நிலைகளில் இன்டர்நெட் இல்லாமல் உடனடியாக எப்படிப் பணப் பரிவர்த்தனை செய்வது என்று பார்க்கலாம்.

யு.எஸ்.எஸ்.டி சேவை மூலம் பண பரிவர்த்தனை
உங்களின் மொபைல் எண் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டிருந்தால் மட்டும் போதும், நிச்சயம் உங்களால் இன்டர்நெட் வசதி இல்லாமல் வெறும் மொபைல் நெட்வொர்க்கை பயன்படுத்தி பணப் பரிவர்த்தனை செய்து கொள்ள முடியும். மொபைல் நெட்வொர்க் மூலம் செய்யக்கூடிய இந்த சேவை ஒரு யு.எஸ்.எஸ்.டி (USSD) சேவை என்பது குறிப்பிடத்தக்கது.

மேம்படுத்தப்பட்டுள்ள வங்கி சேவை
இந்த சேவை NUUP (National Unified USSD Platform) சேவையின் கீழ் கிடைக்கிறது, இது நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவால் (NPCI) 2012 ஆம் தொடங்கப்பட்டது. பின்னர் 2014 ஆம் ஆண்டில் பரந்த அளவிலான சேவைகளுடனும், பாதுகாப்புடனும் மேம்படுத்தப்பட்டுள்ளது.

இன்டர்நெட் இல்லாமல் பரிவர்த்தனை
இன்டர்நெட் இல்லாமல் எப்படிப் பணப் பரிவர்த்தனை செய்வது என்பதைப் பார்க்கலாம். முதலில் உங்கள் போனில் *99# டயல் செய்துவிட்டு சில விநாடிகள் காத்திருங்கள். உங்களுக்கான அடுத்த ஆப்ஷன்கள் ஸ்கிரீனில் தோன்றும்.

சேவைக்கான மொழி தேர்வு
சேவை விருப்பங்கள் உங்கள் திரையில் தோன்றும், பின் உங்களுக்கான மொழியைத் தேர்வு செய்துகொள்ளுங்கள் தமிழ், ஆங்கிலம், கனடா, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகி மொழிகளில் இந்த சேவை உங்களுக்குக் கிடைக்கிறது.

வங்கி ஐ.எஃப்.எஸ்.சி விபரம்
உங்களுக்கான மொழியைத் தேர்வு செய்தபின் தோன்றும் விருப்பங்களில் உங்கள் மொபைல் எண், யுபிஐ ஐடி மற்றும் ஐ.எஃப்.எஸ்.சி விபரம் போன்ற விபரங்களைப் பதிவு செய்துகொள்ளுங்கள். முதல் முறை பயனர்களுக்கு இந்த செயல்முறைகள் கண்டிப்பாகப் பதிவு செய்யப்படவேண்டும்.

இந்த சேவைக்கான கட்டணம்
இதற்கான கட்டணமாக 0.5 காசுகள் உங்கள் மொபைல் கணக்கிலிருந்து வசூலிக்கப்படும். ஒவ்வொரு நெட்வொர்க்கிலும் இதற்கான கட்டணம் வேறுபாடாகும், அதிகப்படியாக 0.50 முதல் 1.50 ரூபாய் வரை மட்டுமே வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

பயனர்களுக்கான வங்கி விருப்பங்கள்
உங்கள் வங்கி ஐ.எஃப்.எஸ்.சி விபரம், யூ.பி.ஐ எண்களைப் பதிவு செய்தபின் வெளியே வந்துவிடுங்கள், மறுபடியும் உங்கள் போனில் *99# டயல் செய்துகொள்ளுங்கள், இப்பொழுது உங்களுக்கான பணப் பரிவர்த்தனை செய்யும் விருப்பம், வங்கி இருப்பு, பணம் பெறுவதற்கான சேவை எனப் பல சேவைகளுக்கான விருப்பங்கள் உங்களுக்கு வழங்கப்படும்.

பின்பற்ற வேண்டிய செயல்முறை
திரையில் காண்பிக்கப்பட்டுள்ள விருப்பங்களில் உங்களுக்கு தேவையான விருப்பத்தை தேர்வு செய்துகொள்ளுங்கள். பணம் அனுப்ப விரும்பினால், பணப் பரிவர்த்தனை விருப்பத்தை செலெக்ட் செய்து, பணம் செலுத்த வேண்டிய நபரின் வங்கி விபரங்களை என்டர் செய்து, சென்ட் கிளிக் செய்யுங்கள். சில வினாடிகளில் உங்கள் இருப்பில் உள்ள பணம் அவருக்கு மாற்றம் செய்யப்படும்.

பிரச்சனைக்கான தீர்வு
இந்த சேவையைப் பயன்படுத்தி, இன்டர்நெட் இல்லாத இடங்களிலிருந்தும் கூட உங்களால் பணப் பரிவர்த்தனை செய்யமுடியும். பணப் பரிவர்த்தனையில் பொது ஏதேனும் பிரச்சனைகளைச் சந்தித்தால் உங்கள் வங்கிஅல்லது மொபைல் ஆபரேட்டரை தொடர்பு கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








