Home
How to

யாரும் சொல்லிக்கொடுக்காத Smart TV ட்ரிக்ஸ்.! கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.!

சியோமி, நோக்கியா, இன்பினிக்ஸ் நிறுவனங்கள் தொடர்ந்து அசத்தலான ஆண்ட்ராய்டு ஸ்மாரட் டிவிகளை அறிமுகம் செய்து வருகின்றன. குறிப்பாக இன்பினிக்ஸ் நிறுவனம் சமீபத்தில் ரூ.8,999-விலையில் ஒரு நல்ல ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்துள்ளது.

சியோமி, ஒன்பிளஸ், ரெட்மி

சியோமி, ஒன்பிளஸ், ரெட்மி

சியோமி, ஒன்பிளஸ், ரெட்மி நிறுவனங்கள் கூட பட்ஜெட் விலையில் பல அசத்தலான ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்துள்ளன. அதேபோல்இந்த புதிய ஸமார்ட் டிவிகளில் இருக்கும் சில ஆப்ஸ்கள் மூலம் புதிய படங்களை எளிமையாக பார்க்க முடிகிறது.

அருமையான டிப்ஸ்

அருமையான டிப்ஸ்

அதேபோல் உங்களது ஸ்மார்ட் டிவியில் உள்ள ஆப்ஸ்கள் மூலம் படம் பார்க்க விரும்பவில்லை என்றால் கண்டிப்பாக ஒரு பென்டிரைவ்-ஐ பயன்படுத்தி படம் பார்க்க தோன்றும். ஒருவேளை பென்டிரைவ் வேண்டாம் என்று நினைப்பவர்களுக்கும் நம்மிடம் ஒரு அருமையான டிப்ஸ் உள்ளது.

 வழிமுறை-1

வழிமுறை-1

முதலில் பிளே ஸ்டோரில் இருந்து உங்களது ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் டிவிகளில் Send Files to TV என்ற ஆப்வசதியை பதிவிறக்கம் செய்யவும்.

வழிமுறை-2

வழிமுறை-2

நீங்கள் பதிவிறக்கம் செய்த Send Files to TV ஆப் வசதியை உங்களது ஸ்மார்ட்போன் மற்றும் ஸ்மார்ட் டிவிகளில்இன்ஸ்டால் செய்யவும்.

வழிமுறை-3

வழிமுறை-3

அடுத்து உங்களது ஸ்மார்ட் டிவியில் நீங்கள் இன்ஸ்டால் செய்த ஆப் வசதியை திறந்து Receive என்பதை தேர்வுசெய்யவும்.

 வழிமுறை-4

வழிமுறை-4

அதன்பின்பு உங்களது ஸ்மார்ட்போனில் இருக்கும் Send Files to TV ஆப்-ஐ திறந்து, நீங்கள் பதிவிறக்கம் செய்து வைத்திற்கும் படங்களை (வீடியோ) தேர்வு செய்து Send Files என்பதை கிளிக் செய்தால் போதும்.

குறிப்பாக இந்த ஆப் மூலம் உங்களது போனில் இருக்கும் படங்களை எளிமையாக டிவிக்கு அனுப்ப முடியும். தற்போது இந்த ஆப் வசதியை தான் பல்வேறு மக்கள் பயன்படுத்துகின்றனர்.

போனஸ் டிப்ஸ்: பட்ஜெட் ஸ்மார்ட் டிவியை எப்படி வாங்குவது

போனஸ் டிப்ஸ்: பட்ஜெட் ஸ்மார்ட் டிவியை எப்படி வாங்குவது

ஒரு ஸ்மார்ட் டிவி வாங்கும் முன்பு உங்களது பட்ஜெட்-ஐ தீர்மானம் செய்யவேண்டும். அடுத்து உங்களது வீட்டில் இருக்கும் ஹால் அல்லது பெட்ரூம்-க்கு தகுந்த டிவியை தேர்வு செய்ய வேண்டும். ஒருவேளை உங்களது ஹால் சின்னதாக இருந்து நீங்கள் 75-இன்ச் டிவியை தேர்வுசெய்துவிட்டால்கண்டிப்பாக அது சிறந்த அனுபவம் கொடுக்காது, தலைவலி வந்துவிடும்.

ஆண்ட்ராய்டு இயங்குதளம்

ஆண்ட்ராய்டு இயங்குதளம்

அதேபோல் நீங்கள் எந்த நிறுவனங்களை வேண்டுமானலும் தேர்வு செய்யலாம் ஆனால் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவியை தான் வாங்க வேண்டும். குறிப்பாக ஆண்ட்ராய்டு மூலம் தான் நீங்கள் நினைத்த ஆப்ஸ்களை பயன்படுத்த முடியும். அதேசமயம் உங்களது டிவிக்கு ஆண்ட்ராய்டு இயங்குதளம் (ஓஎஸ்) மூலம் தான் புதிய அப்டேட் கிடைக்கும்.

சர்வீஸ் சென்டர்

சர்வீஸ் சென்டர்

சர்வீஸ் சென்டர் வசதியை வைத்திருக்கும் டிவி நிறுவனங்களை தேர்வு செய்வது நல்லது. அதாவது உங்களது ஸ்மார்ட் டிவியில் ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் உடனே நீங்கள் தேர்வுசெய்த பிராண்ட்-இன் சர்வீஸ் சென்டர்-ஐ அணுக முடியும்.

அதேபோல் ஒரு போன் செய்தால் உங்களது வீட்டுக்கே வந்து சர்வீஸ் செய்து தரும் நிறுவனங்களை கூட தேர்வுசெய்வது மிகவும் நல்லது.

ஃபுல் எச்டி டிவி

ஃபுல் எச்டி டிவி

நீங்கள் ஒரு 32-இன்ச் டிவியை வாங்கினால் கூட எச்டி, எச்டி பிளஸ் போன்ற ரெசல்யூசன்-ஐ தேர்வு செய்ய வேண்டாம். அதற்கு பதில் ஃபுல் எச்டி (FHD) டிவியை தேர்வுசெய்வது மிகவும் நல்லது.

 3யுஎஸ்பி போர்ட்

அதேபோல் 3யுஎஸ்பி போர்ட், 2எச்டிஎம்ஐ போர்ட் கொண்ட ஸ்மார்ட் டிவியை தேர்வு செய்ய வேண்டும். மேலும் நீங்கள் தேர்வு செய்யும் டிவியில் குவாட்-கோர் பிராசஸர் உள்ளதா என்பதை கண்டிப்பாக பார்க்க வேண்டும். பின்பு 2ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவு கொண்ட ஸ்மார்ட் டிவிகளை தேர்வு செய்தால் கண்டிப்பாக பயனுள்ள வகையில் இருக்கும்.

 ஸ்மார்ட் ரிமோட்

ஸ்மார்ட் ரிமோட்

நிறைய பட்டனங்கள் இருக்கும் ரிமோட்-ஐ தேர்வு செய்வதை விட ஒரு ஸ்மார்ட் ரிமோட்-ஐ தேர்வுசெய்தால் நன்றாக இருக்கும். அதாவது ஸ்மார்ட் டிவியில் இருக்கும் ஆப்ஸ்களை பயன்படுத்த இதுபோன்ற ஸ்மார்ட் ரிமோட் தான் பயனுள்ள வகையில் இருக்கும்.

விமர்சனம்

விமர்சனம்

குறிப்பாக நீங்கள் அமேசான், பிளிப்கார்ட் தளங்களில் ஸ்மார்ட் டிவியை வாங்கும்முன்பு அதன் விமர்சனங்களை (Reviews) ஆன்லைனில் பார்ப்பது நல்லது. ஒரு வேளை நீங்கள் கடைகளில் சென்று ஸ்மார்ட் டிவியை வாங்குவதாக இருந்தால், அங்கு ப்ரைட்னஸ் வசதி, பிராசஸர், ஆடியோ போன்றவற்றை கவனமாக பார்க்க வேண்டும்.

Best Mobiles in India

English summary
How to Transfer Files Between Your Android TV and Smartphone: Simple Tips: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X