contacts முக்கியம் மக்களே: Android டூ Android தொடர்புகளை மாற்றுவது எப்படி?

|

பாதுகாப்பாக உங்கள் தொடர்புகளை வைத்திருப்பது எப்படி என்பது குறித்தும், ஒரு போனில் இருந்து மற்றொரு போனுக்கு எளிதான முறையில் மாற்றுவது எப்படி என்பது குறித்தும் பார்க்கலாம்.

பொழுதுபோக்கு முதல் அத்தியாவசிய பயன்பாடுகள்

பொழுதுபோக்கு முதல் அத்தியாவசிய பயன்பாடுகள்

பொழுதுபோக்கு முதல் அத்தியாவசிய பயன்பாடுகள் என அனைத்தும் ஸ்மார்ட்போன்களில் வந்து விட்டது.

பிரதான பயன்பாடாக இருக்கும் ஆதார் கார்ட் இல் மாற்றம் செய்ய வேண்டுமா? மொபைல் போன் மற்றும் ஓடிபி தேவை.

சிறுக சிறுக சேமிக்கும் பணத்தை பாதுகாப்பாகவும் டிஜிட்டல் முறையிலும் பரிவர்த்தனை செய்ய வேண்டுமா? மொபைல் போன் தேவை.

தங்களுக்கு பிடித்த நிகழ்வுகளை காட்சியாக பதிவு செய்து தங்களுடனே வைத்திருக்க வேண்டுமா? மொபைல் போன் தேவை.

இப்படி அடிக்கிக் கொண்டே போகலாம்.

தொடர்புகள் என்பது மிக பிரதானம்

தொடர்புகள் என்பது மிக பிரதானம்

அரசு ஆவணங்கள், வங்கி இருப்பு, முக்கிய புகைப்படங்கள் என மொத்தமும் ஸ்மார்ட்போன்களில் தான் இருக்கிறது.

இதெல்லாம் ஒருபுறம் இருக்க, மறுபுறம் தங்களது பட்டியலில் இருக்கும் தொடர்புகள் என்பது மிக பிரதானம். இதை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்பது மிக அவசியம்.

பெரும்பாலும் உங்களின் தொடர்புகளை பிறர் அணுகுவது உங்கள் அனுமதியுடன் தான். அது எப்படி என்று கேள்வி வருகிறதா.. வாங்க பார்க்கலாம்.

Terms and Conditions அவசியம்

Terms and Conditions அவசியம்

நீங்கள் மூன்றாம் தரப்பு பயன்பாடுகளை பதிவிறக்கம் செய்யும் போது. அதில் சில Terms and Conditions கேட்கும். என்ன என்று படித்து பார்க்காமல் அதை Accept செய்து விடுவோம்.

அதில் Contact Allow அல்லது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் உள்ளடக்கிய Galleryக்கான Allow என்று குறிப்பிட்டிருக்கலாம். இந்த Terms and Conditionsகளை படிக்காமல் Accept செய்வதன் மூலம் உங்களது அனுமதியோடு மூன்றாம் தரப்பினர்கள் உங்களது Contactகளை அணுகலாம்.

இதையெல்லாம் கவனமாக கையாளுவதன் மூலம் உங்கள் தொடர்பு பட்டியலை பாதுகாப்பாக வைத்திருக்கலாம்.

மொத்தமாக மாற்றுவது எப்படி?

மொத்தமாக மாற்றுவது எப்படி?

அடுத்த விஷயம், நீங்கள் புது போன் வாங்கும் பட்சத்தில் பழைய போனில் இருந்து தொடர்புகளை இழக்காமல் பாதுகாப்பாக அனைத்தையும் மாற்றுவது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.

ஒன்று இரண்டு அல்லது ஐம்பது நூறாக இருந்தால் ஒவ்வொன்றாக சேமித்துவிடலாம். ஆயிரக்கணக்கான தொடர்புகள் இருக்கும்பட்சத்தில் ஒவ்வொன்றாக சேமிப்பது சாத்தியமில்லாத விஷயம். எனவே சிக்கல் இல்லாமல் மொத்தமாக மாற்றுவது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.

கூகுள் கணக்கு என்பது மிக பிரதானம்

கூகுள் கணக்கு என்பது மிக பிரதானம்

உங்கள் தொடர்புகளை இழக்காமல் மாற்றுவதற்கு எளிய வழிமுறைகள் இருக்கிறது. ஆண்ட்ராய்ட் மற்றும் ஐபோன்கள் இரண்டுக்கும் ஆன வழிமுறைகளை தனித்தனியாக பார்க்கலாம்.

தொடர்புகளை மாற்றவும் பாதுகாப்பாக வைக்கவும் கூகுள் கணக்கு என்பது மிக பிரதானம்.

பெரும்பாலும் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தத் தொடங்கும் போதே நாம் கூகுள் கணக்குகளை ஓபன் செய்து விடுகிறோம்.

அப்போது தான் முறையாக ப்ளே ஸ்டோர் மற்றும் யூடியூப் போன்ற கணக்குகளை பயன்படுத்த முடியும்.

பாதுகாப்பான பயன்பாடாக இருக்கும் கூகுள் டிரைவ்

பாதுகாப்பான பயன்பாடாக இருக்கும் கூகுள் டிரைவ்

அப்படி பயன்படுத்தும் கூகுள் கணக்குகளின் பாஸ்வேர்ட் உள்ளிட்டவைகளை நியாபமாக வைத்துக் கொள்வது அவசியம்.

கூகுள் டிரைவ் இல் புகைப்படங்கள், தொடர்புகள், வீடியோக்கள் உள்ளிட்டவைகளை சேமித்து வைக்கும் பட்சத்தில் அது பாதுகாப்பாக இருக்கும். இதை எந்த சூழ்நிலையிலும் மீட்டெடுத்துக் கொள்ளலாம்.

புகைப்படங்கள், தொடர்புகள், வீடியோக்கள் காணாமல் போகிவிட்டதே என்று கவலைப்படவும் தேவையில்லை.

பிரதான பயன்பாடு இதுதான்

பிரதான பயன்பாடு இதுதான்

பல்வேறு விலைப் பிரிவில் புதுப்புது அம்சங்களோடு ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகும் காரணத்தால், மக்கள் அடிக்கடி புதிய ஸ்மார்ட்போனுக்கு மாற வேண்டிய நிலை இருக்கிறது.

அப்படி புது போனுக்கு மாறும்பட்சத்தில் பழைய சேட்டிங், புகைப்படங்கள் மற்றும் தொடர்புகளை அப்படியே மாற்ற வேண்டிய தேவை இருக்கும். இவை அனைத்துக்கும் கூகுள் டிரைவ் பிரதான தேவையாக இருக்கும்.

தொடர்புகளை எப்படி மாற்றுவது

தொடர்புகளை எப்படி மாற்றுவது

உங்கள் பழைய ஆண்ட்ராய்ட் போனிலிருந்து புதிய ஆண்ட்ராய்டு போனுக்கு தொடர்புகளை எப்படி மாற்றுவது என்பது குறித்து பார்க்கலாம்.

கூகுள் கணக்கை ஓபன் செய்து அதில் டிரைவ் பயன்பாட்டை ஓபன் செய்து கொள்ளவும். அதில் செட்டிங்க்ஸ் பயன்பாட்டுக்குள் சென்று Users and accounts ஆப்ஷனை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். இதில் உங்கள் profile and ID தேர்வு செய்து sync செய்து கொள்ளவும்.

பின் தொடர்பில் உள்ள அனைத்து சேமிப்புகளையும் கூகுள் ஸ்டோரேஜ்-க்கு மாற்றிக் கொள்ளவும்.

அவ்வளவு தான் இந்த கூகுள் கணக்கை நீங்கள் புது போனில் லாக்-இன் செய்தால் அனைத்து தொடர்புகளையும் மீட்டுக் கொள்ளலாம்.

ஐபோனிலிருந்து ஐபோனுக்கு தொடர்புகளை மாற்றுவது எப்படி?

ஐபோனிலிருந்து ஐபோனுக்கு தொடர்புகளை மாற்றுவது எப்படி?

ஐபோன் பயனர்களுக்கு தொடர்புகளை மீட்டெடுப்பது மிக எளிய விஷயம். உங்கள் ஐபோனில் ஐகிளவுட் பயன்பாட்டை இயக்கிக் கொள்ளவும்.

பின் புது ஐபோனில் பயன்பாட்டுக்குள் சென்று iCloudஐ இயக்கி அதே ஐடியை லாக் இன் செய்து கொள்ளவும். உங்கள் தொடர்பில் இருக்கும் அனைத்து எண்களும் அப்படியே iCloud லாக்-இன் செய்த மொபைலில் கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
How to Transfer Contacts from One Android Phone to Another Android Phone? Simple Tips

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X