ஏர்டெல்-ஏர்டெல் பணம் அனுப்புவது எப்படி? சிம்பிள் டிப்ஸ்.!

|

உங்கள் ப்ரீபெய்ட் மொபைல் எண்ணில் போதுமான இருப்பு இல்லாத சூழ்நிலையில் அவசரமாக நீங்கள் ஒருவருக்கு கால் செய்ய வேண்டு என்றால் என்ன செய்வது? எந்தவொரு ஆன்லைன் ரீசார்ஜ் போர்ட்டல்கள் அல்லது யுபிஐ கட்டண பயன்பாடுகள் மூலமாகவும் உங்கள் எண்ணை ரீசார்ஜ் செய்து அதன்பின்னர் நீங்கள் உடனடியாக அந்த அழைப்பை பேசலாம் என்று நீங்கள் கூறலாம்.

அதிக தொகை

ஆனால் உங்கள் பேக் காலாவதியானதும் இண்டர்நெட் வேகம் குறைந்துவிடும். அதில் நீங்கள் ரீசார்ஜ் செய்வதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். மேலும் தனியாக இண்டர்நெட் ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்றாலும் அதற்காக உங்களிடம் அதிக தொகை வசூலிக்கப்படும்.

இருப்பு பரிமாற்றம்

இருப்பு பரிமாற்றம்

இதுபோன்ற சூழ்நிலை வந்தால், உங்களுக்கு உதவி செய்வதற்குத்தான் இருப்பு பரிமாற்றம் என்ற ஒரு வசதி உள்ளது. இந்த இருப்பு பரிமாற்றம் என்பது உங்கள் நண்பர்கள் யாரிடம் இருந்தும் நீங்கள் நிலுவை கடன் வாங்கி அவசர நேரத்தில் அதைப் பயன்படுதத் கொள்ளலாம். ஏர்டெல் இந்த வசதியை நமக்கு அளித்துள்ளது. ஏர்டெல்லின் ஒரு மொபைல் எண்ணிலிருந்து மற்றொன்றுக்கு இருப்பு பரிமாற்றத்தை பரிமாறி கொள்ளும் வசதியை செய்து கொடுத்துள்ளது.

வாட்ஸ்அப் க்ரூப் பிரைவசி - இன்வைட் லின்க் ரீசெட் செய்வது எப்படி?வாட்ஸ்அப் க்ரூப் பிரைவசி - இன்வைட் லின்க் ரீசெட் செய்வது எப்படி?

 டாக்டைம் தொகை

டாக்டைம் தொகை

இது ஒரு எளிதான செயல்முறையாகும், இதைச் செய்வதற்கான வழிமுறைகளை தற்போது பார்ப்போம். உங்கள் மொபைல் எண்ணில் இருக்கும் டாக்டைம் தொகையை வேறு ஒருவருக்கு மாற்றுவதற்கு முன், நீங்கள் முக்கியமான இரண்டு விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும். முதலாவது அனுப்புநர் மற்றும் பெறுநர் இருவரும் ஏர்டெல் என்ற ஒரே சேவையை பெற்றிருக்க வேண்டும். இரண்டாவது என்னவெனில், இருப்பு பரிமாற்றத்திற்கான ஏர்டெல் யு.எஸ்.எஸ்.டி குறியீட்டை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அதுதான் 141

எப்படி மாற்றுவது ?

எப்படி மாற்றுவது ?

இப்போது பணத்தை ஏர்டெல்லில் இருந்து இன்னொரு ஏர்டெல் எண்ணுக்கு எப்படி மாற்றுவது என்பதை பார்ப்போம்


முதலில் *141# என்ற எண்ணுக்கு டயல் செய்ய வேண்டும்

அதில் ஷேர் டாக் டைம் உள்பட ஒருசில ஆப்சன்கள் வரும்.

நீங்கள் அதில் 1 என்பதை க்ளிக் செய்து அதனை அனுப்ப வேண்டும்.

அதன் பின்னர்

இதனையடுத்து உங்களுக்கு ஒரு மெசேஜ் வரும். அதில் நீங்கள் ரூ.5 முதல் ரூ.40 வரை பரிமாற்றம் செய்து கொள்ளலாம்.


மேலும் உங்களிடம் இருக்கும் தொகையும் அதில் இருக்கும். உடனே நீங்கள் அனுப்ப வேண்டிய தொகை எவ்வளவு என்பதை உறுதி செய்ய வேண்டும்


அதன் பின்னர் யாருக்கு அனுப்ப வேண்டுமோ, அவருடைய மொபைல் எண்ணை குறிப்பிட்டு பின்னர் ‘அனுப்பு' என்பதை மெசேஜ் செய்ய வேண்டும்

ஒரு மெசேஜ் உங்களுக்கு வரும்

ஒரு மெசேஜ் உங்களுக்கு வரும்

அவ்வளவு தான் நீங்கள் குறிப்பிட்ட தொகை உடனடியாக அந்த எண்ணுக்கு டிரான்ஸ்பர் செய்யும் வேலை முடிந்துவிட்டது. அதன்பின்னர் இருப்பு தொகை டிரான்ஸ்பர் ஆனதை உறுதி செய்யும் ஒரு மெசேஜ் உங்களுக்கு வரும். இதற்கு ஒரு குறிப்பிட்ட சர்வீஸ் கட்டணம் உண்டு. அதேபோல் இந்த இருப்பு தொகையை பெற்றவருக்கும் ஒரு மெசேஜ் வரும் என்பது குறிப்பிடத்தக்கது

 ரூ.150 மட்டுமே பரிமாற்றம் செய்ய முடியும்

மேலும் இந்த சேவைக்கு ரூ.10 வரை அதிகபட்சமாக சேவைக்கட்டணம் வசூல் செய்யப்படும் என்பதும், நாள் ஒன்றுக்கு ஐந்து முறை மட்டுமே இவ்வாறு பரிமாற்றம் செய்ய முடியும் என்பதும் ஒரு மாதத்திற்கு ரூ.150 மட்டுமே பரிமாற்றம் செய்ய முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது

Most Read Articles
Best Mobiles in India

English summary
How To Transfer Balance Money From Airtel To Airtel Number : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X