சியோமி ஃபோனின் பழுது நீக்கும் பணி என்னாச்சு? இப்போது ஆன்லைனில் அறியலாம்

|

தனது அதிகாரபூர்வமான இணையதளமான Mi.com-ல் சியோமி இந்தியா நிறுவனம், ஒரு புதிய எம்ஐ சேவை ஆர்டர் நிலை அம்சத்தின் அறிமுகம் குறித்து அறிவித்துள்ளது. இந்த அம்சம் மூலம் பயனரின் ஃபோன் பழுது நீக்கும் பணியின் நிலவரத்தை, 5 படிகளில் அறிந்து கொள்ளலாம்.

சியோமி ஃபோனின் பழுது நீக்கும் பணி என்னாச்சு? இப்போது ஆன்லைனில் அறியல

இந்த அம்சத்தின் வெளியீடு குறித்து சியோமி இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மனு குமார் ஜெயின், ஒரு டிவிட்டர் இடுகையை வெளியிட்டுள்ளார். இந்த புதிய எம்ஐ சேவை ஆர்டர் நிலை அம்சத்தின் மூலம் தங்கள் ஃபோனின் பழுது குறித்தும் அது நீக்கும் பணியின் நிலை குறித்தும், ஆன்லைனில் பயனர்கள் அறிந்து கொள்ளலாம்.

பழுது நீக்கும் பணியில் உள்ளது, ஆய்வில் உள்ளது, பணி நடந்து கொண்டிருக்கிறது, டெலிவரிக்கு தயாராக உள்ளது, டெலிவரி செய்யப்பட்டது மற்றும் ரத்து செய்யப்பட்டது என்ற 5 நிலைகள் காணப்படுகின்றன.

தங்கள் பழுது நீக்கும் பணியின் நிலையைக் குறித்து அறிய சேவை நிலையத்தில் உள்ள நிர்வாகிகளை அழைத்து கேட்க வேண்டிய சியோமி ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களுக்கு, இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக அமையும்.

மேலும் சியோமி சேவை மையங்களில் நடைபெறும் தரம் குறைந்த நிர்வாகத்தை வெளிகாட்டும் எண்ணற்ற வீடியோக்கள் சமூக ஊடகங்களில் உலா வரும் நேரத்தில், இந்த அம்சம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தக் காரணத்திற்காக கூட, பயனர்களுக்கு ஏற்படும் சிக்கலை போக்கும் வகையில், பழுது நீக்கும் பணியின் நிலையை ஆன்லைனில் அறிந்து கொள்ளும் வசதியை இந்நிறுவனம் அறிமுகம் செய்திருக்கலாம்.

இந்தியாவில் ஒரு மேம்பட்ட வாடிக்கையாளர் சேவையை அளிக்க வேண்டும் என்பதில் சியோமி நிறுவனம் எப்போதும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இந்த பழுது நீக்கும் பணியின் நிலையை ஆன்லைனில் அறிந்து கொள்ளும் அம்சம், இந்நிறுவனத்தின் இலக்கை அடைய உதவும் முன்னோக்கிய படியாக அமையும் என்று தெரிகிறது.

Mi.com மூலம் உங்கள் சியோமி ஃபோனின் பழுது நீக்கும் பணியின் நிலையை எப்படி கண்டறியலாம் என்பதை காண்போம்.

முதல் படியாக, உங்கள் தொடர்பு எண் அல்லது சேவை எண் அல்லது ஆர்டர் எண் அல்லது ஐஎம்இஐ எண் அல்லது எஸ்என் எண்ணை, சேவை ஆர்டர் நிலையை அறிவதற்கான அதிகாரபூர்வமான இணையதளத்தில் உள்ளிடவும்.

மேற்கண்ட எண்ணை உள்ளிட்ட பிறகு, உறுதிப்படுத்தும் பொத்தானை கிளிக் செய்து, உங்கள் பதிவுசெய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு வரும் ஓடிபி எண்ணை பெறவும்.

இணையதளத்தில் ஓடிபி தட்டச்சு செய்வதற்காக அளிக்கப்பட்டுள்ள பெட்டியில், அதை அளித்துவிட்டு சமர்ப்பி பொத்தானை தட்டவும்.

அவ்வளவு தான்! உங்கள் ஃபோன் பழுது நீக்கும் பணி எந்த நிலையில் உள்ளது என்பதை இணையதளத்தில் காணலாம்.

ஸ்னாப்டிராகன் 845 செயலியுடன் அசத்தும் சியோமி மி 7.!ஸ்னாப்டிராகன் 845 செயலியுடன் அசத்தும் சியோமி மி 7.!

Best Mobiles in India

Read more about:
English summary
Xiaomi India has announced the launch of a new Mi Service Order Status feature on its official website Mi.com. This feature will let users track the repair status of their device with a five-stage tracking progress. Let’s take a look at how you can track the device repair status of your Xiaomi phone via Mi.com.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X