கூகுள் பிளே ஸ்டோரில் ஆப் வாங்கியதற்கான பணத்தை திரும்பப் பெறும் வழிமுறைகள்

|

கூகுள் பிளே ஸ்டோரில் செயலி அல்லது கேம் போன்றவற்றுக்கு பணம் செலுத்திவிட்டு, தவிர்க்க முடியாத காரணங்களால் செலுத்திய பணத்தை திரும்பப் பெற வேண்டுமா? கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி செயலி, புத்தகம், திரைப்படம் அல்லது கேம்களுக்கு நீங்கள் செலுத்திய பணத்தை எப்படி திரும்பப் பெற வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

கூகுள் பிளே ஸ்டோரில் ஆப் வாங்கியதற்கான பணத்தை திரும்பப் பெறுவது எப்படி

வழிமுறைகளை பின்பற்றும் முன்:

சீரான இணைய வசதி இருக்கிறதா என்றும் பேமண்ட் வசதி செயல்படுத்தப்பட்ட கூகுள் அக்கவுண்ட் விவரங்களை தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும்.

கூகுள் பிளே ஸ்டோரில் ஆப் வாங்கியதற்கான பணத்தை திரும்பப் பெறுவது எப்படி

கூகுள் பிளே பர்சேஸ் மூலம் செய்வது

1 - கூகுள் பிளே ஸ்டோரினை ஸ்மார்ட்போனில் திறக்கவும்


2 - செயலியின் இடதுபுறமாக இருக்கும் மூன்று புள்ளிகள் கொண்ட பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்


3 - அக்கவுண்ட்ஸ் ஆப்ஷனில் பர்சேஸ் ஹிஸ்ட்ரியை தேர்வு செய்ய வேண்டும்


4 - பர்சேஸ் ஹிஸ்ட்ரி பகுதியில் கீழ்புறமாக ஸ்கிரால் செய்து பணத்தை திரும்பப் பெறுவதற்கான செயலியை தேர்வு செய்ய வேண்டும்


5 - செயலியை தேர்வு செய்ததும் ரீஃபண்ட் ஆப்ஷனை க்ளிக் செய்யவும்


6 - திரையில் கேட்கப்படும் போது Yes ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்


7 - இவ்வாறு செய்ததும், செயலி அல்லது கேம் ஸ்மார்ட்போனில் இருந்து தானாக நீக்கப்பட்டு விடும். நீங்கள் செயலியை வாங்குவதற்கு செலுத்திய தொகை உங்களது அக்கவுண்ட்டிற்கு அனுப்பப்படும்.

கூகுள் பிளே ஸ்டோரில் ஆப் வாங்கியதற்கான பணத்தை திரும்பப் பெறுவது எப்படி

மற்றொரு வழிமுறை கூகுள் பிளே ஸ்டோர் லிஸ்டிங்கில் இருந்து பணத்தை திரும்பப் பெற வழி செய்கிறது. இதற்கு ரீசன்ட்ஸ் ஆப்ஷனில் நீங்கள் வாங்கிய செயலிகளை பார்க்க முடியும். செயலியை அன்-இன்ஸ்டால் செய்த பின் ரீஃபன்ட் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.


பயனர்கள் செயலிகளுக்கு செலுத்திய தொகையை பணம் செலுத்தப்பட்ட இரண்டு நாட்களுக்குள் திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும். அதிக நேரம் ஆகிவிடும் பட்சத்தில் செயலியின் டெவலப்பரிடம் கோரிக்கை விடுக்க வேண்டும்.

Best Mobiles in India

English summary
How to take an app purchase refund from Google Play Store and more details: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X