வாட்ஸ்அப் படங்கள், வீடியோக்கள் போன் மெமரியில் தானாக நிரம்புவதை நிறுத்துவது எப்படி?

|

தற்போதைய காலகட்டத்தில் பலரின் வாழ்க்கையில் WhatsApp என்பது ஒரு முக்கியமான அங்கமாகவே மாறிவிட்டது. உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான தகவல்தொடர்பு செயலிகள் இருந்தாலும், மக்கள் வாட்ஸ்அப் செயலியையே விரும்பி பயன்படுத்துகின்றனர்.

நிறைய பயனர்களை பெற்றுள்ளது

உலகளவில் வாட்ஸ்அப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. இந்த பயன்பாட்டின் மூலம் நீங்கள் மெசேஜ் அனுப்புவது மட்டுமல்லாமல் வீடியோ மற்றும் புகைப்படங்களையும் பகிர்ந்துகொள்ளலாம். மேலும் கடந்த சில ஆண்டுகளில் இந்த வாட்ஸ்அப் நிறுவனம் நிறைய பயனர்களை பெற்றுள்ளது.

 வழியாக நீங்கள் பெறும்

இந்த வாட்ஸ்அப் வழியாக நீங்கள் பெறும் ஒவ்வொரு வீடியோ மற்றும் புகைப்படத்தையும் வாட்ஸ்அப் டவுன்லோட் செய்து உங்கள் ஸ்மார்ட்போனில் சேமித்து வைத்திருக்கும்.இதை நீங்கள் விரும்பவில்லை என்றால் கவலையை விடுங்கள், தடுக்க சில வழிமுறைகள் உள்ளது அதை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஆன்லைன் வகுப்பு: ஜூம் அழைப்பை துண்டிக்க மறந்த ஆசிரியர்கள் செய்த காரியம்- பள்ளி நிர்வாகம் நடவடிக்கை!ஆன்லைன் வகுப்பு: ஜூம் அழைப்பை துண்டிக்க மறந்த ஆசிரியர்கள் செய்த காரியம்- பள்ளி நிர்வாகம் நடவடிக்கை!

வழிமுறை-1

வழிமுறை-1

வாட்ஸ்அப் செயலியை திறந்து, மேல்-வலது மூலையில் உள்ள 3 புள்ளிகளைக் கிளிக் செய்ய வேண்டும். பின்னர் செட்டிங்ஸ் என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

 வழிமுறை-2

வழிமுறை-2

அடுத்து Data Storage and Usage(டேட்டா ஸ்டோரேஜ் மற்றும் யூசேஜ்) என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும்.

 வழிமுறை-3

வழிமுறை-3

பின்னர் நீங்கள் Media Auto-download விருப்பத்தை காண்பீர்கள், அதன் கீழ் 3 விருப்பங்களையும் காண்பீர்கள். இதில் நீங்கள் எந்த விருப்பத்தை தேர்வு செய்தாலும் அது வீடியோக்கள், புகைப்படங்கள், ஆவணங்கள் மற்றும் ஆடியோ ஆகியவற்றைக் குறிப்பிடும் விருப்பங்களை காட்சிப்படுத்தும்.

வழிமுறை-4

வழிமுறை-4

அதில் நீங்கள் When using mobile data என்கிற விருப்பத்தை தேர்வு செய்து எதெல்லாம் டவுன்லோட் ஆக வேண்டும்,எதெல்லாம் ஆக கூடாது என்பதை தேர்வு செய்து ஓகே என்பதை கிளிக் செய்யவும்.

வழிமுறை-5

இதைச் செய்வதன் மூலம் வாட்ஸ்அப் உங்களது போன் ஸ்டோரேஜில் புகைப்படங்களையும் வீடியோக்களையும் தானாக சேமிப்பதை நீங்கள் நிறுத்தலாம். மேலும் நீங்கள் விரும்பும் மீடியாக்களை மட்டுமே பதிவிறக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
How to stop WhatsApp images and videos from getting stored in phone memory: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X