உங்கள் அனுமதி இல்லாமல் புதிய வாட்ஸ் அப் குரூப்பில் சேர்ப்பதை எப்படி தடுப்பது? புதிய அப்டேட்!
தேவையில்லாத வாட்ஸ் ஆப் குரூப்களில் உங்கள் நண்பர்கள் உங்களை சேர்கிறார்களா? இதனால் அடிக்கடி தேவையில்லாத மெசேஜ்கள் வந்து உங்களைக் கடுப்பேற்றுகிறதா?

கவலை வேண்டாம் உங்கள் அனுமதி இல்லாமல் உங்களை யாரும் எந்த புதிய குரூபிலும் சேர்க்க முடியாது. அதற்கான புதிய சேவையை வாட்ஸ் ஆப் அறிமுகம் செய்துள்ளது. அதை எப்படிப் பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.

பில்லியன் வாட்ஸ் ஆப் பயனர்கள்
இந்தியாவில் மட்டும் சுமார் பில்லியன் கணக்கான பயனர்கள் வாட்ஸ் ஆப் செயலியைப் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாகக் கூறப்போனால் இந்தியாவில் தற்பொழுது யாரும் வாட்ஸ் ஆப் செயலி பயன்படுத்தாமல் இருப்பதே இல்லை. இதனால் தானோ என்னவோ நமக்கு அடிக்கடி தேவையில்லாத மெசேஜ்கள், இமேஜ்கள் நம் இன்பாக்ஸை நிரப்புகின்றன.

தேவையில்லாதா தலைவலி
உங்கள் அனுமதி இல்லாமல் உங்கள் எண் தெரிந்த உங்கள் நண்பர்கள், உங்களுக்குச் சற்றும் சம்பந்தமில்லாத குரூப்களில் உங்களைச் சேர்த்துவிடுகின்றனர். இதனால் தேவையில்லாதா மெசேஜ்கள் வந்து உங்களைக் கடுப்பேற்றும், இதனால் அந்த குரூப்பிலிருந்து வெளியேற வேண்டியதும் இருக்கும்.

தீர்மானிக்கும் அதிகாரத்தை வழங்கிய வாட்ஸ் ஆப்
இந்த தேவையில்லாத வேலையைப் பார்ப்பதற்குப் பதிலாக மிக எளிதாக யார் உங்களை புதிய குரூப்பில் சேர்க்கலாம் என்பதற்கான அனுமதியை இப்பொழுது நீங்கள் வாட்ஸ் ஆப் செயலியில் வழங்கலாம். உங்கள் ஆன்லைன் ஸ்டேட்டஸ் எப்படி யார் பார்க்கலாம், யார் பார்க்கக் கூடாது என்று தீர்மானிக்கும் அதிகாரத்தை வாட்ஸ் ஆப் முன்பு வழங்கியதோ அதேபோல் இப்பொழுது குரூப் சேவைக்கும் வழங்கியுள்ளது.

சமீபத்திய அப்டேட் கட்டாயம்
இந்த புதிய சேவையை உங்கள் வாட்ஸ் ஆப்பில் ஆக்டிவேட் செய்ய முதலில், உங்கள் வாட்ஸ் அப் செயலி சமீபத்திய அப்டேட்டை பெற்றிருக்க வேண்டும். உங்கள் வாட்ஸ் ஆப் அப்டேட் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். கீழ் வரும் செயல்முறைகளைப் பின்பற்றுங்கள்.

பின்பற்ற வேண்டிய செயல்முறை
- உங்கள் போனில் வாட்ஸ் ஆப் ஓபன் செய்துகொள்ளுங்கள்.
- வாட்ஸ் ஆப்பில், வாட்ஸ் ஆப் செட்டிங்ஸ்(Settings) கிளிக் செய்யுங்கள்.
- அக்கௌன்ட்(Accounts ) ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.
- பிரைவசி(privacy) ஆப்ஷனை கிளிக் செய்துகொள்ளுங்கள்.
- இப்பொழுது குரூப்ஸ்(Groups) என்ற புதிய ஆப்ஷன் உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும், அதை கிளிக் செய்யுங்கள்.
- அதற்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள மூன்று ஆப்ஷன்களில்(Everyone, My Contacts, Nobody) ஒன்றை தேர்வு செய்துகொள்ளுங்கள்.
- நீங்கள் Everyone கிளிக் செய்தால் யார் வேண்டுமானாலும் உங்களை புதிய குரூப்பில் சேர்க்க முடியும்.
- நீங்கள் My Contacts கிளிக் செய்தால் உங்கள் நண்பர்கள் மட்டுமே உங்களை புதிய குரூப்பில் சேர்க்க முடியும்.
- நீங்கள் Nobody கிளிக் செய்தால் உங்களை யாரும், எந்த புதிய குரூப்பிலும் சேர்க்க முடியாது.

Everyone, My Contacts, Nobody என்ன செய்யும்?
இதன் புதிய சேவையின் மூலம் உங்களை யார் புதிய குரூப்பில் சேர்க்கவேண்டும் என்பதை நீங்களே தீர்மானித்து அனுமதி வழங்கலாம்.


Click it and Unblock the Notifications