சீக்கிரம் மொபைல் டேட்டா காலியாகிறதா? தடுப்பது எப்படி? சிம்பிள் டிப்ஸ்.!

|

ஜியோ மற்றும் ஏர்டெல் போன்ற நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு தகுந்தபடி டேட்டா சலுகையை அள்ளத்தருகிறது, இருந்தபோதிலும் பேஸ்புக், வாட்ஸ்ஆப் போன்ற செயலிகளை பயன்படுத்த தொடங்கி சில மணி நேரங்களில் 90 சதவிகிதம் டேட்டா உபோயகத்து வீட்டீர்கள் என்கிற மேசேஜ் வந்து விடுகிறது.

தினசரி 2ஜிபி டேட்டா

தினசரி 2ஜிபி டேட்டா

தினசரி 2ஜிபி டேட்டா பயன்படுத்தும் மக்களுக்கு இந்த பிரச்சணை இருக்கும். குறிப்பாக பேஸ்புக் அதிகம் பயன்படுத்துவதற்கு எனவே இந்த பிரச்சணை அதிகமாக இருக்கும். உங்கள் மொபைல் டேட்டா வீணாவதை தடுக்க சில வழிகள் உள்ளது அதைப் பார்ப்போம்.

1ஜிபி முதல் 1.5ஜிபி வரை

1ஜிபி முதல் 1.5ஜிபி வரை

குறிப்பாக பேஸ்புக் உள்நுழைந்து வெளியே வரும் 1ஜிபி முதல் 1.5ஜிபி வரை டேட்டா காணாமல் போய் இருக்கும். இதில் இருந்து தப்பிக்க இரண்டு வழிகள் உள்ளது, ஒன்று இமேஜ் மற்றும் வீடியோ தரத்தை குறைப்பது, இரண்டாவது டேட்டா சேவரை எனேபிள் செய்வது ஆகும்.

புதிய வசதியுடன் கலக்கும் அசத்தலான ஹானர் 10 லைட்.!புதிய வசதியுடன் கலக்கும் அசத்தலான ஹானர் 10 லைட்.!

இமேஜ் மற்றும் வீடியோ தரத்தை குறைப்பது:

இமேஜ் மற்றும் வீடியோ தரத்தை குறைப்பது:

வழிமுறை-1
ஸ்மார்ட்போனில் பேஸ்புக் செயலியை திறக்கவும்.

வழிமுறை-2:
அடுத்து பேஸ்புக்கில் இருக்கும் Hamburger icon-ஐ கிளிக் செய்யவும், ஐபோன் பயனராக இருந்தால் இடது பக்கத்தில் இருக்கும்.

வழிமுறை-3:
பின்பு Settings விருப்பத்தை தேர்வு செய்து Settings and Privacy-ஐ கிளிக் செய்ய வேண்டும்.

வழிமுறை-4
அதன்பின்பு ஸ்கோரோல் டவுன் செய்து Media and Contacts விருப்பத்திற்கும் நுழையவும்.

இப்போது வீடியோ மற்றும் புகைப்படங்களுக்கான விருப்பங்களை காண்பீர்கள், அதில் Videos in News Feed start with Sound, வீடியோ செட்டிங்ஸ்-ன் கீழ் Upload HD button மற்றும் போட்டோ செட்டிங்ஸ்-ன் கீழ் Upload HD photo போன்ற பல விருப்பங்களை காண்பீர்கள். இப்போது உங்களின் விருப்பத்திற்கு ஏற்ப எனேபிள் மற்றும் டிஸேபிள்களை மாற்ற முடியும்.

டேட்டா சேவர்:

டேட்டா சேவர்:

பேஸ்புக் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு டேட்டா சேவர் எனும் விருப்பத்தை வழங்குகிறது, அதன்படி Image size-ஐ குறைத்தல் மற்றும் ஆட்டோ-பிளே வீடியோவை முடக்குதல் போன்றவைகளை நிகழ்த்தி, உங்களின் டேட்டாவை சேமிக்க முடியும். இதை செய்வது எப்படி பார்ப்போம்.

பேஸ்புக்கில் இருக்கும் Hamburger icon-ஐ கிளிக் செய்யவும்.

அடுத்து Settings and Privacy என்பதை கிளிக் செய்யவும்.

பின்பு Data Saver விருப்பத்தை கிளிக் செய்து எனேபிள் செய்தால், கண்டிப்பாக உங்கள் டேட்டாவை சேமிக்க முடியும்.

Best Mobiles in India

English summary
how to stop overusing of mobile data from facebook : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X