உங்களின் புகைப்படங்கள் எங்கு எடுக்கப்பட்டவை என்பதை மற்றவர்கள் பார்க்காமல் இருக்க செய்வது எப்படி?

|

ஸ்மார்ட்போனில் புகைப்படம் அல்லது வீடியோக்களை எடுக்கும் போது, லொகேஷன் ஆன் செய்யப்பட்டு இருந்தால், புகைப்படம் எங்கு எடுக்கப்பட்டவை என்ற விவரமும் சேமிக்கப்படும். புகைப்படங்களை லொகேஷன் அல்லது நிகழ்வுக்கு ஏற்ப ஒருங்கிணைக்கும் போது இந்த அம்சம் பயனுள்ளதாக இருக்கும்.

லொகேஷன் டேட்டா

லொகேஷன் டேட்டா

புகைப்படத்தின் லொகேஷன் டேட்டா EXIF மூலம் புகைப்படம் எடுக்கப்பட்ட நேரத்தையும் சேர்த்து சேமித்து வைத்துக் கொள்ளும். இதனால் அவற்றை பகிரும் போது, புகைப்படத்துடன் அது எடுக்கப்பட்ட லொகேஷன் விவரங்களும் மற்றவர்கள் அறிந்து கொள்ள முடியும். எனினும், எல்லா சமயங்களிலும், புகைப்படத்தின் லொகேஷனை பகிர வேண்டிய நிலை ஏற்படாது.

ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஒ.எஸ்

ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஒ.எஸ்

அந்த வகையில் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஒ.எஸ். ஸ்மார்ட்போன்களில் புகைப்படம் அல்லது வீடியோ எடுக்கும் போது அவற்றின் லொகேஷன் விவரங்களை சேமிக்க வேண்டாம் என்ற ஆப்ஷனை தேர்வு செய்யும் வசதியை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றன. இதனை எப்படி செயல்படுத்த வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.

BSNL Rs 1,999 Prepaid Plan: ஜியோவிற்கு டாட்டா: பிஎஸ்என்எல் வழங்கும் 1308ஜிபி டேட்டா.! அதிரடி சலுகை.!BSNL Rs 1,999 Prepaid Plan: ஜியோவிற்கு டாட்டா: பிஎஸ்என்எல் வழங்கும் 1308ஜிபி டேட்டா.! அதிரடி சலுகை.!

ஐ.ஒ.எஸ். சாதனங்களில் புகைப்படம் அல்லது வீடியோவில் உள்ள லொகேஷன் விவரங்களை எடுப்பது எப்படி?

ஐ.ஒ.எஸ். சாதனங்களில் புகைப்படம் அல்லது வீடியோவில் உள்ள லொகேஷன் விவரங்களை எடுப்பது எப்படி?

1 - போட்டோஸ் ஆப் சென்று பகிர வேண்டிய புகைப்படங்கள் அனைத்தையும் தேர்வு செய்து கொள்ள வேண்டும்

2 - இனி ஷேர் செய்யக் கோரும் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்

3 - ஷேர் பக்கத்தில் லொகேஷன் இணைக்கப்பட்டுள்ளதை குறிக்கும் நோட்டிஃபிகேஷன் இடம்பெற்று இருக்கும். இத்துடன் ஆப்ஷன்ஸ் எனும் பட்டனும் காணப்படும். அதனை க்ளிக் செய்ய வேண்டும்

4 - புகைப்படம் மற்றும் வீடியோக்களில் உள்ள லொகேஷன் டேட்டாவை எடுக்க லொகேஷன் ஆப்ஷனை ஆஃப் செய்ய வேண்டும்

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் புகைப்படம் அல்லது வீடியோ லொகேஷன் விவரங்களை எடுப்பது எப்படி?

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் புகைப்படம் அல்லது வீடியோ லொகேஷன் விவரங்களை எடுப்பது எப்படி?

ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் சில ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் கேலரி செயலியில் லொகேஷன் விவரங்களை அழிக்கும் வசதியினை வழங்குகின்றன. எனினும், கூகுள் போட்டோஸ் செயலியில் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்.

1 - கூகுள் போட்டோஸ் செயலியில் புகைப்படம் ஒன்றை தேர்வு செய்து மேல்புறமாக ஸ்வைப் செய்து புகைப்படத்தின் இன்ஃபோ பார்க்க வேண்டும்


2 - இனி செங்குத்தாக இருக்கும் மூன்று புள்ளிகளை க்ளிக் செய்து லொகேஷனை எடுக்கக் கோரும் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்


கூகுள் போட்டோஸ் செயலியின் செட்டிங்ஸ் சென்று ஜியோ லொகேஷன் ஆப்ஷனை ஆஃப் செய்ய வேண்டும். இது புகைப்படங்களில் உள்ள லொகேஷன் விவரங்களை எடுத்து விடும்.

BSNL Rs 1,999 Prepaid Plan: ஜியோவிற்கு டாட்டா: பிஎஸ்என்எல் வழங்கும் 1308ஜிபி டேட்டா.! அதிரடி சலுகை.!BSNL Rs 1,999 Prepaid Plan: ஜியோவிற்கு டாட்டா: பிஎஸ்என்எல் வழங்கும் 1308ஜிபி டேட்டா.! அதிரடி சலுகை.!

குறிப்பு

குறிப்பு

கூகுள் போட்டோஸ் செயலியில் தற்சமயம் புகைப்படங்களில் உள்ள லொகேஷன் விவரங்களை மட்டும் எடுத்துவிடும் வசதியை வழங்குகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
How to stop others from knowing where your photos were clicked : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X