ஸ்மார்ட்போன் டேட்டாவை காலி செய்யும் ஃபேஸ்புக் - உடனே நிறுத்துவது எப்படி?

|

ஃபேஸ்புக்கில் உங்களுக்கு வரும் நோட்டிஃபிகேஷன்களை பார்க்க லாக்-இன் செய்து பின் அதில் வரும் வீடியோக்களை கண்டு நேரம் போவதே தெரியாமல் ஆழ்ந்திருப்பவர்கள் ஏராளம்.

ஃபேஸ்புக் உங்க டேட்டாவை காலி செய்வதை தடுத்து நிறுத்துவது எப்படி?

நீங்களும் பலமுறை ஃபேஸ்புக் வீடியோக்களை பார்த்து பொழுதுபோக்கி இருந்திருக்கலாம். ஃபேஸ்புக் நியூஸ் ஃபீடில் வரும் ஆரோக்கியம், உடல்நலம் மற்றும் பொழுதுபோக்கு சார்ந்த வீடியோக்களை பார்க்க விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது.

ஃபேஸ்புக் பயனர்கள் எண்ணிக்கை

ஃபேஸ்புக் பயனர்கள் எண்ணிக்கை

ஒருவேளை இதை நீங்கள் மறுத்தாலும், ஃபேஸ்புக் பயனர்கள் எண்ணிக்கை ஜூன் 2019 இல் 15,900 கோடியில் இருந்து ஜூன் 30 வரையிலான காலக்கட்டத்தில் இது 24,100 கோடியாக அதிகரித்திருக்கிறது. இதிலிருந்தே ஃபேஸ்புக் பயனர் எண்ணிக்கையை அறிந்து கொள்ள முடியும்.

 தடுத்து நிறுத்த என்ன செய்ய வேண்டும்

தடுத்து நிறுத்த என்ன செய்ய வேண்டும்

ஃபேஸ்புக் நியூஸ்ஃபீடில் சர்ஃபிங் செய்யும் போது நேரம் போவது மட்டுமின்றி இது அதிகளவு டேட்டாவையும் எடுத்துக் கொள்ளும். இதை தடுத்து நிறுத்த என்ன செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.

உடைந்த ஸ்க்ரீன் மொபைலை பயன்படுத்துகிறீர்களா? இதோ உங்களுக்கு ஒரு எச்சரிக்கை

ஃபேஸ்புக்கில் உங்களது செட்டிங்களை மாற்றலாம்:

ஃபேஸ்புக்கில் உங்களது செட்டிங்களை மாற்றலாம்:

ஃபேஸ்புக் தளத்தில் உங்களது ஸ்மார்ட்போன் மூலம் நீங்கள் பதிவேற்றம் செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களின் தரத்தை தீர்மானிப்பது மட்டுமின்றி, ஃபேஸ்புக் நியூஸ் ஃபீடில் நீங்கள் பார்க்கும் வீடியோக்களையும் கட்டுப்படுத்த முடியும். இதில் மாற்றங்களை மேற்கொள்ள பின்வரும் ஆப்ஷன்களை பயன்படுத்தவும்.

- ஃபேஸ்புக் செயலியை ஸ்மார்ட்போனில் திறக்கவும்.

- இனி செயலியின் கீழ்புறம் இடதுபக்கத்தில் இருக்கும் ஹேம்பர்கர் ஐகானை க்ளிக் செய்யவும்.

- செட்டிங்ஸ் ஆப்ஷனில் இருக்கும் பிரைவசி ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.

- கீழ்புறம் ஸ்கிரால் செய்து மீடியா மற்றும் காண்டாக்ட்ஸ் ஆப்ஷனை க்ளிக் செய்யவும்.

- இதில் வீடியோ மற்றும் போட்டோஸ் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.

- அடுத்து நியூஸ் ஃபீடில் இருக்கும் Videos in News Feed start with Sound button ஆப்ஷனை க்ளிக் செய்யவும்.

- இனி வீடியோ செட்டிங் ஆப்ஷனில் Upload HD பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.

- இனி போட்டோ செட்டிங்கில் Upload HD ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

 ஆட்டோ பிளே

ஆட்டோ பிளே

வீடியோ செட்டிங்கில் இருக்கும் ஆட்டோ பிளே ஆப்ஷனை தேர்வு செய்து Wi-Fi Connections Only option அல்லது Never Auto-Play Videos ஆப்ஷன்களில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும்.

சுந்தர் பிச்சையை கடுமையாக திட்டிய ஜனாதிபதி டிரம்ப்.! காரணம் இது தான்.!

டேட்டா சேவர்

டேட்டா சேவர்

ஃபேஸ்புக் தனது வாடிக்கையாளர்களுக்கு டேட்டா சேவர் ஆப்ஷன் ஒன்றை வழங்குகிறது. இது புகைப்படங்களின் தரத்தை குறைத்து ஆட்டோ பிளே வீடியோ ஆப்ஷனை டிசேபிள் செய்யும். இந்த ஆப்ஷனை இயக்க பின்வரும் வழிமுறைகளை பின்பற்றவும்:

- ஹேம்பர்கர் ஐகானை க்ளிக் செய்யவும்.

- இனி செட்டிங்ஸ் மற்றும் பிரைவசி ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

- அடுத்து டேட்டா சேவர் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
WhatsApp Likely Working On Boomerang-Like Feature : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X