Spam calls தொல்லையா? கடுப்பாகிறதா? எல்ரோரையும் ஒரே நேரத்தில் இப்படி பிளாக் செய்யுங்க.!

|

டெலிமார்க்கெட்டிங் மற்றும் ஸ்பேம் அழைப்புகளால் (Spam calls) கடுப்பாகிறதா? நீங்கள் வேலையிலோ அல்லது ஏதேனும் முக்கியமான மீட்டிங்கிலோ இருக்கும் போது, தேவையில்லாமல் உங்களை வாய்ஸ் கால் (Voice call) மூலம் தொடர்பு கொண்டு அடிக்கடி எரிச்சலூட்டுகிறார்களா? இதனால், உங்கள் போனை சைலென்டில் மாற்ற வேண்டிய நிலை உருவாக்குகிறதா? இனி இந்த கவலையே வேண்டாம்.!

ஸ்பேம் கால்களை ஒட்டுமொத்தமாக பிளாக் செய்ய முடியுமா?

ஸ்பேம் கால்களை ஒட்டுமொத்தமாக பிளாக் செய்ய முடியுமா?

காரணம், உங்களுக்குத் தேவையில்லாமல் அழைத்து தொல்லை கொடுக்கும் டெலிமார்க்கெட்டிங் மற்றும் ஸ்பேம் கால் அழைப்புகளை (Unwanted spam call disturbance) ஒரேயடியாகவும், ஒட்டுமொத்தமாகவும் நீங்கள் பிளாக் செய்துகொள்ள ஒரு சூப்பரான அம்சம் இப்போது பயன்படுத்தக் கிடைக்கிறது. இதை ஒரு முறை ஆக்டிவேட் செய்துவிட்டால், அடுத்து உங்களுக்குத் தேவையில்லாத அழைப்புகள் வராது.

Jio, Airtel, Vi, BSNL என்று எது பயன்படுத்தினாலும் இதற்கு தீர்வு உண்டு மக்களே.!

Jio, Airtel, Vi, BSNL என்று எது பயன்படுத்தினாலும் இதற்கு தீர்வு உண்டு மக்களே.!

உங்களுக்கு வரும் தேவையில்லாத அழைப்புகள் அனைத்தையும் நீங்கள் ஒன்றின் பின் ஒன்றாக பிளாக் செய்ய வேண்டியதில்லை. இந்த சூப்பரான ட்ரிக் தெரிந்தால், வெறும் சில நிமிடங்களில் ஒட்டுமொத்தமாக உங்களுக்கு வரக்கூடிய அணைத்து ஸ்பேம் கால்ஸ் அலைபுகையும் நீங்கள் பிளாக் செய்துவிடலாம். நீங்கள் Jio, Airtel, Vi, BSNL என்று எந்த நெட்வொர்க்கில் இயங்கினாலும் சரி, இந்த ட்ரிக் சிறப்பாக வேலை செய்யும்.

உங்க ஏரியாவில் உங்க ஏரியாவில் "பவர் கட் (shutdown)" எப்போது? ஆன்லைனில் செக் செய்வது எப்படி? இதோ ஈஸி டிப்ஸ்.!

ஸ்பேம் கால்ஸ் அழைப்புகள் மோசடி அழைப்புகளாகவும் மாறுமா?

ஸ்பேம் கால்ஸ் அழைப்புகள் மோசடி அழைப்புகளாகவும் மாறுமா?

சில நேரங்களில் இந்த ஸ்பேம் அழைப்புகள் மோசடி அழைப்புகளாகவும் இருக்கும் என்பதனால் இவற்றை பிளாக் செய்வது சிறந்தது மற்றும் பாதுகாப்பானது. இது வங்கி அல்லது வங்கி தொடர்புடைய பிற ஏமாற்று சிக்கலில் பயனர்களைச் சிக்க வைக்கிறது என்பதனால் ஸ்பேம் கால்ஸை பெற்றால் உஷார் (Spam call alert) மக்களே.! இதுபோன்ற அழைப்புகளிலிருந்து விடுபட, மக்கள் ஒவ்வொரு ஸ்பேம் தொடர்புகளைத் தடுக்க முயல்கின்றனர்.

சைலன்ட் ஸ்பேம் கால் கில்லர்.!

சைலன்ட் ஸ்பேம் கால் கில்லர்.!

இப்படி, ஒவ்வொரு ஸ்பேம் எண்ணையும் தேடி-தேடி தடுப்பது சாத்தியமில்லை. ஆனால் ஸ்பேம் அழைப்புகளை மொத்தமாகத் தடுக்கவும் புகாரளிக்கவும் அல்லது ஸ்பேம் அழைப்புகள் மற்றும் செய்திகளைப் பெறுவதை நிறுத்தவும் ஒரு வழி உள்ளது. இந்த சைலன்ட் ஸ்பேம் கால் கில்லர் அம்சத்தை நீங்கள் ஆக்டிவேட் செய்தால் மட்டும் போதும், அடுத்து ஸ்பேம் அழைப்புகள் பற்றிய கவலையே வேண்டாம் உங்களுக்கு.

இந்த Smartwatch வாங்க எல்லாரும் கும்பலா படை எடுக்குறாங்க.! ஏன்னா இப்போ 90% விலை கம்மி.!இந்த Smartwatch வாங்க எல்லாரும் கும்பலா படை எடுக்குறாங்க.! ஏன்னா இப்போ 90% விலை கம்மி.!

DND அம்சம் என்றால் என்ன? அதை எப்படி உங்கள் போனில் ஆக்டிவேட் செய்வது?

DND அம்சம் என்றால் என்ன? அதை எப்படி உங்கள் போனில் ஆக்டிவேட் செய்வது?

நாம் இங்குப் பேசிக்கொண்டிருக்கும் அம்சத்தை DND - Do not disturb என்று குறிப்பிடுகிறார்கள். இதை எப்படி சில நொடிகளில் ஆக்டிவேட் செய்யலாம் என்பதைப் பார்க்கலாம். உங்கள் எண்ணில் DND அம்சத்தைச் செயல்படுத்த - உங்கள் SMS பயன்பாட்டைத் திறந்து START என டைப் செய்து, அதை 1909 என்ற எண்ணிற்கு அனுப்பவும். இப்போது, வங்கி, ஹாஸ்ப்பிட்டாலிட்டி போன்ற பல வகைகளின் பட்டியல் காண்பிக்கப்படும்.

DND சேவை எந்த மாதிரியான ஸ்பேம் கால் அழைப்புகளை தடுக்கும்?

DND சேவை எந்த மாதிரியான ஸ்பேம் கால் அழைப்புகளை தடுக்கும்?

நீங்கள் தடுக்க விரும்பும் வகைக்கான குறியீட்டைக் கொண்டு Reply செய்யவும். இப்போது, உங்கள் தொலைத்தொடர்பு சேவை வழங்குநர் உங்கள் கோரிக்கையை உறுதிப்படுத்தும் மெசேஜ் உங்களுக்கு அனுப்பப்படும். அவ்வளவு தான் அடுத்த 24 மணி நேரத்திற்குள் DND சேவை உங்கள் எண்ணில் தொடங்கப்படும். இந்த அம்சம் கோரப்படாத மூன்றாம் தரப்பு வணிக அழைப்புகளை மட்டுமே தடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

கடலில் அடித்துவரப்பட்ட Nokia 3210.! பழைய போனை வைத்து பள்ளியில் பாடம் எடுத்த சிறுமி.!கடலில் அடித்துவரப்பட்ட Nokia 3210.! பழைய போனை வைத்து பள்ளியில் பாடம் எடுத்த சிறுமி.!

பேங்கிங் SMS மற்றும் அழைப்புகளை இது தடுக்காது தானே.!

பேங்கிங் SMS மற்றும் அழைப்புகளை இது தடுக்காது தானே.!

இது உங்கள் வங்கியிலிருந்து வரும் SMS நோட்டிபிகேஷன் (Banking SMS Notification), மற்றும் எச்சரிக்கை செய்திகள் (Alert Messages), ஆன்லைன் போர்ட்டல்கள் மற்றும் சேவைகள், மூன்றாம் தரப்பு தனிப்பட்ட அழைப்பு போன்றவற்றைத் தடுக்காது என்பது கவனிக்கத்தக்கது. நீங்கள் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஆகியவற்றில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்றால், கீழே குறிப்பிடப்பட்டுள்ள முறையைப் பின்பற்றி DND அம்சத்தை ஆக்டிவேட் செய்துகொள்ளுங்கள்.

ஜியோவில் DND அம்சத்தை எப்படி செயல்படுத்துவது?

ஜியோவில் DND அம்சத்தை எப்படி செயல்படுத்துவது?

  • MyJio செயலிக்குச் செல்லவும்.
  • இப்போது Settings -> Service settings -> Do not disturb என்பதை கிளிக் செய்யவும்.
  • நீங்கள் தடுக்க விரும்பும் வகைகளைத் தேர்வு செய்தால் அடுத்து இனி ஸ்பேம் அழைப்புகள் மற்றும் மெசேஜ்களைப் பெறமாட்டீர்கள்.
  • ஐயோ சாமி.! இந்த OnePlus டிவிய முதல்ல வெளியவிடுங்கப்பா.! கூப்பாடு போட்டு வெயிட் பண்ணும் ரசிகர்கள்.!ஐயோ சாமி.! இந்த OnePlus டிவிய முதல்ல வெளியவிடுங்கப்பா.! கூப்பாடு போட்டு வெயிட் பண்ணும் ரசிகர்கள்.!

    ஏர்டெல்லில் DND அம்சத்தை எப்படி செயல்படுத்துவது?

    ஏர்டெல்லில் DND அம்சத்தை எப்படி செயல்படுத்துவது?

    • ஏர்டெல் அதிகாரப்பூர்வ தளத்தைப் பார்வையிடவும் - airtel.in/airtel-dnd.
    • உங்களுடைய மொபைல் எண்ணை உள்ளிடவும்
    • சரிபார்க்க உங்கள் எண்ணில் பெறப்பட்ட OTP ஐ உள்ளிடவும்.
    • நீங்கள் தடுக்க விரும்பும் வகைகளைத் தேர்ந்தெடுக்கவும்.
    • வோடபோன்-ஐடியாவில் DND அம்சத்தை எப்படி செயல்படுத்துவது?

      வோடபோன்-ஐடியாவில் DND அம்சத்தை எப்படி செயல்படுத்துவது?

      • Discover.vodafone.in/dnd என்ற இணையதள பக்கத்தைத் திறக்கவும்.
      • உங்கள் மொபைல் எண், ஈமெயில் முகவரி மற்றும் பெயரை உள்ளிடவும்.
      • மார்க்கெட்டிங் அழைப்புகளைப் பெறுவதைத் தடுக்க விரும்பும் வகைகளைத் தேர்ந்தெடுக்கவும்.
      • WiFi பாஸ்வோர்ட் விபரம் தேவையில்லை.! டைரக்ட்டா WiFi உடன் இணைவது எப்படி? இதோ ட்ரிக்.!WiFi பாஸ்வோர்ட் விபரம் தேவையில்லை.! டைரக்ட்டா WiFi உடன் இணைவது எப்படி? இதோ ட்ரிக்.!

        BSNL இல் DND அம்சத்தை எப்படி செயல்படுத்துவது?

        BSNL இல் DND அம்சத்தை எப்படி செயல்படுத்துவது?

        • உங்கள் BSNL எண்ணிலிருந்து 1909 "start dnd" என்ற மெசேஜ்ஜை அனுப்பவும்.
        • பெறப்பட்ட விருப்பத்திலிருந்து நீங்கள் தடுக்க விரும்பும் வகைகளைத் தேர்ந்தெடுக்கவும்.
        • குரல் அழைப்பு, SMS அல்லது அனைத்தையும் உள்ளடக்கிய பயன்முறையிலிருந்தும் நீங்கள் தேர்வு செய்யலாம்.
        • இப்படி சில நிமிடங்களில் உங்களுக்கு வரும் ஸ்பேம் கால்ஸ் அனைத்தையும் ஈஸியாக பிளாக் செய்துகொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
How To Stop and Block All Unwanted Spam Calls With DND Activate

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X