சியோமி ஸ்மார்ட்போன்களில் தொல்லைதரும் விளம்பரங்களை நிறுத்துவது எப்படி?

|

சியோமி ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியா முழுவதும் நல்ல வரவேற்ப்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு ஸ்மார்ட்போன்களும் சிறந்த தொழில்நுட்ப வசதியை கொண்டுள்ளன.

 சம்பந்தமே இல்லாத ஒரு மொக்கை காரணத்தை கூறுகிறது

சம்பந்தமே இல்லாத ஒரு மொக்கை காரணத்தை கூறுகிறது

ஆனாலும் இந்நிறுவனம் கொண்டுவந்த MIUI 10-ஐ மூலம் அதன் ஸ்மார்ட்போன்களில் அதிகமாக விளம்பரங்களைக் காட்டத்தொடங்கியது. குறிப்பாக இந்த விளம்பரங்கள் அதன் ஸ்மார்ட்போன்களின் விலையை மலிவு விலையில் வைத்திருக்க உதவுகின்றன.என்று சியோமி நிறுவனம் சம்பந்தமே இல்லாத ஒரு மொக்கை காரணத்தை கூறுகிறது.

 விடயமாக கருதும் ப

இருந்தபோதிலும் விளம்பரங்களை எரிச்சலூட்டு ஒரு விடயமாக கருதும் பயனர்களுக்கு அவற்றை முடக்குவதற்கான ஒரு அசத்தலான வழிகளையும் சியோமி நிறுவனம் கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ்அப் மூலம் நொடியில் LPG சிலிண்டர் புக்கிங் செய்வது தான் பெஸ்ட்.. ஏன் தெரியுமா? காரணம் இருக்கு..வாட்ஸ்அப் மூலம் நொடியில் LPG சிலிண்டர் புக்கிங் செய்வது தான் பெஸ்ட்.. ஏன் தெரியுமா? காரணம் இருக்கு..

பிளாக் அல்லது ஆஃப் செய்வது எப்படி

பிளாக் அல்லது ஆஃப் செய்வது எப்படி

அதன்படி இப்போது MIUI 12 அப்டேட்டை பெற்ற சியோமி ஸ்மார்ட்போன்களில் இந்த தொல்லைதரும் விளம்பரங்களை நிறுத்த முடியும்.நாம் இப்போது MIUI 12 அப்டேட் பெற்ற சியோமி ஸ்மார்ட்போனில் தோன்றும் அனைத்து வகையான விளம்பரங்களை பிளாக் அல்லது ஆஃப் செய்வது எப்படி என்று விரிவாகப் பார்ப்போம்.

MSA (MIUI System Ads) விருப்பத்தை முடக்க வேண்டும்

MSA (MIUI System Ads) விருப்பத்தை முடக்க வேண்டும்

முதலில் நீங்கள் சியோமி ஸ்மார்ட்போன்களில் வரும் விளம்பரங்களை நிறுத்த MSA (MIUI System Ads) என்கிறவிருப்பத்தை முடக்க வேண்டும். இதன் வழிமுறைகளை இப்போது பார்ப்போம்.


வழிமுறை-1
உங்களது சியோமி ஸ்மார்ட்போனில் செட்டிங்ஸ் பகுதிக்கு செல்லவும்.

வழிமுறை-2
அடுத்து Passwords & security என்கிற விருப்பத்தை கிளிக் செய்யவும்.

வழிமுறை-3
பின்னர் Authorisation and revocation என்ற விருப்பத்தை தேர்வுசெய்யவும்.

வழிமுறை-4
இப்போது அதனுள் MSA என்ற விருப்பம் இருக்கும். அதை சட்டுனு ஆஃப் செய்யவும். அவ்வளவுதான் முடிந்தது.

தனிப்பட்ட விளம்பர பரிந்துரைகளை (Personal ad recommendations) ஆஃப் செய்யும் வழிமுறை

தனிப்பட்ட விளம்பர பரிந்துரைகளை (Personal ad recommendations) ஆஃப் செய்யும் வழிமுறை

உங்களது சியோமி ஸ்மார்ட்போனில் செட்டிங்ஸ் பகுதிக்கு சென்று Additional Settings- Privacy சென்று personal ad recommendations என்ற விருப்பத்தை ஆஃப் செய்தால் போதும்.

Mi Browser விளம்பரங்களை ஆஃப் செய்யும் வழிமுறைகள்

Mi Browser விளம்பரங்களை ஆஃப் செய்யும் வழிமுறைகள்

உங்களது ஸ்மார்ட்போனில் Mi Browser - Settings - Advanced சென்று recommendations என்ற விருப்பத்தை ஆஃப் செய்தால் போதும்.

File manager விளம்பரங்களை ஆஃப் செய்யும் வழிமுறைகள்

File manager விளம்பரங்களை ஆஃப் செய்யும் வழிமுறைகள்

File manager விளம்பரங்களை ஆஃப் செய்யும் வழிமுறைகள்உங்கள் சாதனத்தில் Mi File Manager App - Settings - About - recommendations என்ற விருப்பத்தை தேர்வு செய்யு ஆஃப் செய்தால் போதும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
How To Stop Ads On Xiaomi Smartphones in Tamil : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X