உங்க போன் ஸ்லோவா இருக்கா? அடிக்கடி ஹேங் ஆகுதா? இதை செஞ்சா போன் ஸ்பீடு பிச்சுக்கும்.!

|

நமக்கு என்ன தான் பெரிய-பெரிய பிரச்சனைகள் வந்தாலும், அதை மிகவும் கூலாக ஹேண்டில் செய்யும் நம் மக்களுக்கு, அவர்களுடைய ஸ்மார்ட்போன் (smartphone) ஹேங் ஆகியவுடன் வரும் கடுப்பிற்கு அளவே கிடையாது. அதிலும் குறிப்பாக, உங்கள் கையில் இருக்கும் ஸ்மார்ட்போன் ஸ்லோவ் ஆகிவிட்டால் 'ச்சு' என்று உச்சுக்கொட்டி பெருமூச்சு விடாத நபர்களே இங்கு கிடையாது என்று தான் சொல்ல வேண்டும். உங்கள் ஸ்மார்ட்போன் இப்படி ஹேங் ஆகிச் சொதப்புவதற்கு சில கரணங்கள் இருக்கிறது.

உங்க ஸ்மார்ட்போன் மெதுவாக அல்லது ஹேங் ஆகுகிறதா?

உங்க ஸ்மார்ட்போன் மெதுவாக அல்லது ஹேங் ஆகுகிறதா?

இந்த காரணங்களைக் கண்டறிந்து, சரி செய்து விட்டாலே, உங்களுடைய போன் மீண்டும் மின்னல் வேகத்தில் செயல்படத் துவங்கிவிடும். உண்மையை சொல்லப் போனால், நம்முடைய ஸ்மார்ட்போன் மெதுவாக அல்லது ஹேங் ஆவதற்கு முக்கிய காரணமே அதன் ஓனர் ஆகிய நாம் மட்டும் தான். இதை மறுக்க யாராலும் முடியாது, காரணம், நம்முடைய போன்களுக்கு ரெஸ்ட் என்பதே இன்றைய காலகட்டத்தில் கிடையாது. நாள் முழுக்க அது முழு செயல்பாட்டிலேயே இருக்கிறது.

இந்த சில மாற்றங்களை செய்தால் உடனே ஸ்பீடு அதிகரிக்குமா?

இந்த சில மாற்றங்களை செய்தால் உடனே ஸ்பீடு அதிகரிக்குமா?

சில மணி நேரம் கூட நம்முடைய ஸ்மார்ட்போன்களை ஸ்விட்ச் ஆப் செய்து வைக்க கூட நமக்குத் தோன்றுவதில்லை. இடைவிடாத வாய்ஸ் கால், இன்டர்நெட் சர்பிங், ஆன்லைனில் உணவை ஆர்டர் செய்வது, கேம் விளையாடுவது என்று முழு நேரமும் பிஸியாகவே இருக்கிறது. இதனால், உங்கள் போன் ஸ்லோவ் அல்லது ஹேங் ஆகுகிறது. இதுபோன்ற சிக்கலை நீங்களும் எதிர்கொண்டு, கடுப்பில் இருக்கிறீர்கள் என்றால், இந்த சில மாற்றங்களை உங்கள் போனில் உடனே செய்துவிடுங்கள். பின்பு மாற்றத்தை நீங்களே உணருவீர்கள்.

உறங்கும் போது உங்கள் அருகில் Smartphone-ஐ வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? உஷார் மக்களே!உறங்கும் போது உங்கள் அருகில் Smartphone-ஐ வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? உஷார் மக்களே!

உங்க போனின் cache குப்பைகளை நீக்க வேண்டுமா?

உங்க போனின் cache குப்பைகளை நீக்க வேண்டுமா?

சரி முதலில் நீங்கள் செய்ய வேண்டிய முக்கியமான விஷயமே இது தான். உங்கள் போனில் கேச்சி (cache) குப்பைகளை நீக்குவது மிகவும் முக்கியம். உங்கள் மொபைலில் நீங்கள் செய்யும் அனைத்து விஷயங்களும் cache வடிவில் போனின் ரேமில் தற்காலிகமாகச் சேமிக்கப்படும். இப்படி நீண்ட காலமாகச் சேர்ந்து வரும் cache மூலம் உங்கள் போன் ஹேங் ஆக வாய்ப்புள்ளது. இதை நீக்கம் செய்ய, உங்கள் போனில் settings > Storage > cache > clear the cache > confirm கிளிக் செய்யவும். இப்படிச் செய்வதன் மூலம் உங்கள் போன் மீண்டும் வேகமாகும்.

ப்ளோட்வேர் மற்றும் யூஸ் செய்யாத ஆப்ஸ்களை நீக்க வேண்டுமா?

ப்ளோட்வேர் மற்றும் யூஸ் செய்யாத ஆப்ஸ்களை நீக்க வேண்டுமா?

ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்வது முதல் போட்டோ எடிட்டிங் வரை பல காரணங்களுக்காக நாம் பல ஆப்ஸ்களை டவுன்லோடு செய்கிறோம். தேவையற்ற ஆப்ஸ் இருந்தால் உங்கள் சாதனத்தின் வேகத்தைக் குறைக்கும் என்பதனால் அவற்றை நீக்கம் செய்யுங்கள். உங்கள் போனின் வேகத்தை அதிகரிக்க settings > apps and programs > நீங்கள் நீக்க வேண்டிய ஆப்ஸை கிளிக் செய்யுங்கள் > disable விருப்பம் கிளிக் செய்து confirm செய்யுங்கள்.

உங்க ஸ்மார்ட்போன் ரீசென்ட் அப்டேட்டை பெற்றதா?

உங்க ஸ்மார்ட்போன் ரீசென்ட் அப்டேட்டை பெற்றதா?

உங்கள் போன் ஆண்ட்ராய்டு அல்லது iOS என்று ஏதுவாக இருந்தாலும், அவற்றைச் சரியாக அப்டேட் செய்திருக்க வேண்டியது உங்கள் கடமை என்பதை மறக்காதீர்கள். உங்கள் போனின் சிஸ்டம் சரியான அப்டேட்டில் இயங்குகிறதா என்பதை உறுதி செய்யுங்கள். அப்படி அப்டேட் செய்யப்படவில்லை என்றால், உங்கள் போன் மெதுவாக இருப்பதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது. இதைச் சரி செய்ய உங்கள் போனை வைஃபையுடன் இணைத்து,settings> about phone அல்லது system updates> search for updates கிளிக் செய்து இன்ஸ்டால் செய்யவும்.

உங்க Smartphone ஹேக் செய்யப்பட்டதா என்பதை எப்படி கண்டறிவது? உஷாரா இருக்கனும் மக்களே.!உங்க Smartphone ஹேக் செய்யப்பட்டதா என்பதை எப்படி கண்டறிவது? உஷாரா இருக்கனும் மக்களே.!

லைட் ஆப்ஸ் ஏன் முக்கியமானது?

லைட் ஆப்ஸ் ஏன் முக்கியமானது?

நீங்கள் பழைய அல்லது குறைந்த விலை போனைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், பெரிய அளவிலான ஆப்ஸ்களை உங்கள் போனில் வைக்காதீர்கள். இது அதிக ஸ்டோரேஜை எடுத்துக்கொள்ளும், இதனால் உங்கள் போன் ஹேங் ஆக அதிக வாய்ப்புள்ளது. இதனால், லைட் வெர்ஷன் ஆப்ஸ்களை யூஸ் செய்யுங்கள். Facebook லைட், இன்ஸ்டாகிராம் லைட் மற்றும் Google Go போன்ற லைட் ஆப்ஸ்களை பயன்படுத்துங்கள்.

உங்கள் போனி அனிமேஷனை மாற்ற வேண்டுமா?

உங்கள் போனி அனிமேஷனை மாற்ற வேண்டுமா?

அனிமேஷன்களைக் குறைப்பது உங்கள் மொபைலை வேகப்படுத்த மற்றொரு வழியாகும். உங்கள் சாதனத்தில் டெவலப்பர் விருப்பத்தை இயக்குவதன் மூலம் இதை நீங்கள் மற்ற முடியும். settings > about phone> build number தகவலை ஏழு முறை கிளிக் செய்யவும். இந்த செயல்முறை உங்கள் சாதனத்தில் டெவலப்பர் விருப்பத்தை இயக்கும். இதன் மூலம் அனிமேஷன் விருப்பத்தை நீங்கள் மாற்றி அமைக்கலாம். இது உங்கள் டிஸ்பிளே அனிமேஷன், போன்ற பல விஷயங்களை மாற்றி உங்கள் போனின் வேகத்தை அதிகரிக்கும்.

Best Mobiles in India

Read more about:
English summary
how to speed up your smartphone useful tips 2022

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X