வாட்ஸ்அப் பேமெண்ட்ஸ் : இவ்வசதியை நிறுவி பணம் அனுப்புவது எப்படி?

|

இன்று நம்மில் பெரும்பாலானோர் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பிறருடன்‌ தேவையில்லா தொடர்பை தவிர்க்கவும், அவசியமில்லாதவற்றை தொடுவதை தவிர்க்கவும் மின்னணு பணபரிவர்த்தனைகளை (டிஜிட்டல் பேமெண்ட்) நம்பியுள்ளனர். ரூபாய் நோட்டுகளும் நாணயங்களும் பல கைகள் மாறி பயணித்து வரும் என்பதால் அவை ஒவ்வொன்றையும்‌ தூய்மைபடுத்துவது சாத்தியமற்றது‌.

பல்வேறு வகையான இணைய

தற்போது பல்வேறு வகையான இணைய பரிவர்த்தனை செயலிகள் பயன்பாட்டில் உள்ளன. இதில் ஒருவகையான செயலி யூபிஐ மற்றும் வாலெட் அடிப்படையிலான பணபரிமாற்ற சேவையை வழங்கினால், மற்றொருவகை செயலி வங்கிகள் மூலம் நேரடியான யூபிஐ பரிவர்த்தனை சேவையை வழங்குகிறது‌. இதில் வித்தியாசமாக வாட்ஸ்அப் பேமெண்ட்ஸ், ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு அனுப்பும் (Peer to Peer) யூபிஐ அடிப்படையிலான வசதியை வழங்குகிறது.

உங்கள் ஸ்மார்ட்போனில் வாட்ஸ்அப் பேமெண்ட்ஸ்-ஐ எப்படி நிறுவி பயன்படுத்துவது என அறிந்துகொள்ள ஆவலாக உள்ளீர்களா? இதோ படிப்படியான எளிமையான செயல்முறைகள்..

தேவையான அம்சங்கள்

தேவையான அம்சங்கள்

* வாட்ஸ்அப் செயலியின் சமீபத்திய பதிப்பு (Latest version)

* செயல்பாட்டில் உள்ள வங்கி கணக்கு (Active bank account)

* வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணும் வாட்ஸ்அப் எண்ணும் ஒன்றாக இருப்பது அவசியம்

Amazon: ரூ.300 ஆர்டருக்கு ரூ.19,000 மதிப்பிலான ஹெட்போன் டெலிவரி! அமேசான் தந்த இன்ப அதிர்ச்சி.!Amazon: ரூ.300 ஆர்டருக்கு ரூ.19,000 மதிப்பிலான ஹெட்போன் டெலிவரி! அமேசான் தந்த இன்ப அதிர்ச்சி.!

வாட்ஸ்அப் பேமெண்ட்ஸ்-ஐ நிறுவுவது எப்படி?

வாட்ஸ்அப் பேமெண்ட்ஸ்-ஐ நிறுவுவது எப்படி?

1) உங்கள் ஸ்மார்ட்போனில் வாட்ஸ்அப் செயலியை திறந்து மேல் வலது மூலையில் உள்ள மூன்று புள்ளி குறியீட்டை அழுத்தவும்.

2) பரிவர்த்தனை (பேமெண்ட்ஸ்) வசதியை தேர்வு செய்யவும்

3) " பரிவர்த்தனை சேர்த்தல் முறை" (Add Payments Method)யை அழுத்தி, ஏற்றுக்கொள் மற்றும் தொடர் ( Accept and Continue) என்பதை அழுத்தவும்.

4)தற்போது உங்கள் வங்கி பெயரை தேர்வுசெய்யவும்

5) பின்னர் உங்களது பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணை வைத்து உங்கள் வங்கி‌ பற்றிய தகவல்களை இச்செயலி திரட்டும்

6) இதன் பின்னர், "குறுஞ்செய்தி மூலம் சரிபார்" (Verify via SMS) என்பதை அழுத்தி உங்களது வங்கிக்கணக்கை குறுஞ்செய்தி வாயிலாக சரிபார்க்கவும்

7) வங்கிக்கணக்கு சரிபார்க்கப்பட்ட பின்னர், "முடிந்தது" (Done) என்பதை அழுத்தி நிறுவல் செயல்முறையை முடிக்கவும்.

வாட்ஸ்அப் பேமெண்ட்ஸ் மூலம் பணம் அனுப்பும் வழிமுறை

வாட்ஸ்அப் பேமெண்ட்ஸ் மூலம் பணம் அனுப்பும் வழிமுறை

நீங்கள் பணம் நபரும் அவருடைய ஸ்மார்ட்போனில் வாட்ஸ்அப் பேமெண்ட்ஸ் வசதியை நிறுவியுள்ளதை உறுதிசெய்துகொள்ளவும்.

1) சாட் திரையில் நீங்கள் பணம் அனுப்ப விரும்பும் நபரின் சாட்-ஐ திறக்கவும்

2) "இணைப்பு" (Attach) குறியீட்டை அழுத்தி 'பேமெண்ட்ஸ்' என்பதை தேர்வுசெய்யவும்

3) நீங்கள் அனுப்ப விரும்பும் தொகையை உள்ளீடு செய்து "அடுத்து" ( Next) பொத்தானை அழுத்தவும்

4) இந்த பண பரிவர்த்தனையை அங்கீகரிக்க யூபிஐ கடவுச்சொல்லை உள்ளிடவும்.

5) கடவுச்சொல் சரிபார்க்கப்பட்டவுடன் பணம் நீங்கள் அனுப்பவிரும்பிய நபருக்கு சென்றடைந்திருக்கும்

Best Mobiles in India

English summary
How To Setup WhatsApp Payment On Your Smartphone To Send Money: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X