அட்டகாச அம்சம்: இனி வாட்ஸ்அப் மூலம் எளிதாக பணம் அனுப்பலாம்- எப்படி தெரியுமா? இதோ எளிய வழிமுறைகள்!

|

வாட்ஸ்அப் மூலமாக பணம் அனுப்பும் சேவை இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சேவை எப்படி ஆக்டிவேட் செய்து பயன்படுத்துவது என்பது குறித்த விளக்கத்தை பார்க்கலாம்.

பல்வேறு சிறப்பம்சங்கள்

பல்வேறு சிறப்பம்சங்கள்

சமூகவலைதள பயன்பாடுகளில் பிரதானமாக இருப்பது வாட்ஸ்அப். வாடஸ்அப் தங்களது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சிறப்பம்சங்களை தொடர்ந்து அறிவித்து வருகிறது. இதில் தற்போது வாட்ஸ்அப் மூலமாக பணம் அனுப்பும் சேவை இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளது.

யுபிஐ கட்டண சேவை

யுபிஐ கட்டண சேவை

வாட்ஸ்அப் தனது வாடிக்கையாளர்களுக்கு நவம்பர் 6 ஆம் தேதி முதல் யுபிஐ கட்டண சேவையை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. வாட்ஸ்அப் இந்த சேவையை இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் உடன் இணைந்து தயாரித்துள்ளது. இதன்மூலம் இனி பயனர்கள் எளிதாக பணம் அனுப்பலாம். வாட்ஸ்அப் பணம் அனுப்பும் சேவையை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து பார்க்கலாம்.

வங்கிக் கணக்கு வைத்திருத்தல் அவசியம்

வங்கிக் கணக்கு வைத்திருத்தல் அவசியம்

வாட்ஸ்அப்பில் பணம் அனுப்பும் சேவையை பயன்படுத்த விரும்பும் பயனர்கள் வங்கிக் கணக்கு, டெபிட் கார்ட் வைத்திருக்க வேண்டும் என்பது அவசியம். வங்கிக் கணக்கு யுபிஐ ஆதரவோடு இருத்தல் கட்டாயம். முதற்கட்டமாக வாட்ஸ்அப் செயலி அப்டேட் செய்தலை கவனிக்க வேண்டும்.

payments அம்சம்

payments அம்சம்

வாட்ஸ்அப் செயலி திறந்து மேல் வலது புறத்தில் இருக்கும் மூன்று புள்ளி ஐகானை கிளிக் செய்து உள்ளே நுழைய வேண்டும். அதில் payments என்று காண்பிக்கப்படும். அதை கிளிக் செய்தவுடன் வங்கிகளின் பெயர் வரிசையாக இருக்கும். அதில் உள்ள தங்களது வங்கியின் பெயரை தேர்வு செய்ய வேண்டும்.

அமேசான் மூலம் சிலிண்டர் புக்கிங்: சலுகையோடு முன்பதிவு செய்யலாம்!

வங்கி கணக்கோடு மொபைல் எண் இணைத்தல்

வங்கி கணக்கோடு மொபைல் எண் இணைத்தல்

மேலும் வங்கி கணக்கோடு மொபைல் எண் இணைக்கப்பட்டிருத்தல் கட்டாயம். அப்படி மொபைல் எண் இணைக்கப்படாத பட்சத்தில் இந்த சேவை பயன்படுத்த முடியாது. முன்னதாக வேறு சேவையின் மூலம் தங்களது வங்கிக் கணக்கு யுபிஐ ஐடியுடன் இணைக்கப்பட்டிருந்தால் நேரடியாக யுபிஐ ஐடிக்குள் கடவுச் சொல் ஓபனாகும்.

வாட்ஸ்அப் பே வசதி

வாட்ஸ்அப் பே வசதி

யுபிஐ ஐடி இணைக்கப்படாத பட்சத்தில் டெபிட் கார்ட்டில் இருக்கும் கடைசி ஆறு இலக்கு எண்கள், எக்ஸ்பெரி தேதி மற்றும் கார்ட் பின்புறத்தில் இருக்கும் சிவிவி மூன்று இலக்கு எண்கள் பதிவிட வேண்டும். இதன்மூலம் வாட்ஸ்அப் பே வசதியை எளிதாக பயன்படுத்தலாம்.

பேமெண்ட் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்

பேமெண்ட் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்

பின் வாட்ஸ்அப் சேட் பக்கத்தை ஓபன் செய்து யாருக்கு பணம் அனுப்ப வேண்டுமோ அவரது பெயரை கிளிக் செய்து ஓபன் செய்ய வேண்டும். அதன் Attachment பிரிவை கிளிக் செய்தவுன் பேமெண்ட் ஆப்ஷன் காட்டப்படும்.

க்யூஆர் கோட் ஸ்கேன்

க்யூஆர் கோட் ஸ்கேன்

பேமெண்ட் ஆப்ஷனை தேர்வு செய்தவுடன் எவ்வளவு தொகை அனுப்ப வேண்டுமோ அதை டைப் செய்து செண்ட் என்ற தேர்வை கிளிக் செய்ய வேண்டும். பின் யுபிஐ PIN மட்டும் கேட்கப்படும். அதை கொடுத்தவுடன் பணம் குறிப்பிட்ட கணக்குக்கு சென்றுவிடும். மேலும் வாட்ஸ்அப் க்யூஆர் கோட் ஸ்கேன் செய்தும் பணம் அனுப்பலாம்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
How to Send Payment via Whatsapp: Here the Whatsapp pay Setup Method

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X