வெப் ப்ரவுசரில் இருந்து ஆண்ராய்டு பயனர்கள் மெசேஜ் அனுப்புவது எப்படி?

கூகுளின் இன்ஸ்டால் செய்யும் வழிமுறையை பின்பற்றினால், இதை செய்ய சில நொடிகள் மட்டுமே தேவைப்படும்

|

கூகுள் நிறுவனம் தனது அனைத்து ஆண்ராய்டு பயனர்களுக்காகவும் இந்த வார துவக்கத்தில் " மெசேஜ் ஃபார் வெப்" என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் நீங்கள் வீட்டிலோ, அலுவலகத்திலோ அல்லது எங்கு இருந்தாலும், எந்தவொரு இணைய உலாவியின்(வெப் ப்ரவுசர்) உதவியுடனும் உங்களால் குறுஞ்செய்திகளை(டெக்ஸ்ட் மெசேஜ்) அனுப்ப முடியும்.

வெப் ப்ரவுசரில் இருந்து ஆண்ராய்டு பயனர்கள் மெசேஜ் அனுப்புவது எப்படி?

ஆப்பிள் ஐபோன் பயனர்களுக்கு மேக்-ல் ஐமெசேஜ் என்ற பெயரில் நீண்ட காலமாக இந்த வசதியை வழங்கிவரும் நிலையில், கூகுள் தனது ஆண்ராய்டு பயனர்களுக்கும் அதே போன்ற ஒரு வசதியை வழங்கும் ஒரு முயற்சியாகவே இது பார்க்கப்படுகிறது. இந்த புதிய வசதியின் மூலம் உங்களின் குறுஞ்செய்தி உரையாடலை கணிணியில் துவங்கவோ அல்லது ஏற்கனவே உள்ள உரையாடலை தொடரவோ முடியும். எனவே குறுஞ்செய்திகளை அனுப்ப எப்போதும் உங்கள் கைப்பேசியை சார்ந்து இருக்க வேண்டிய அவசியமில்லை.
வெப் ப்ரவுசரில் இருந்து ஆண்ராய்டு பயனர்கள் மெசேஜ் அனுப்புவது எப்படி?

இந்த வசதியை பெற பின்வரும் எளிய வழிமுறையை பின்பற்றினால் போதுமானது.

° முதலில் பின்வரும் லிங்க் மூலம் கூகுள் ப்ளே ஸ்டோர் சென்று, உங்கள் ஆண்ராய்டு போனில் ' ஆண்ராய்டு மெசேஜஸ்' ஐ(Android Messages) பதிவிறக்கம் செய்யவும். சில போன்களில் மட்டுமே இது ஏற்கனவே இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்காது.


https://play.google.com/store/apps/details?id=com.google.android.apps.messaging&hl=en_US


° கூகுளின் இன்ஸ்டால் செய்யும் வழிமுறையை பின்பற்றினால், இதை செய்ய சில நொடிகள் மட்டுமே தேவைப்படும்.

°பின்னர் உங்கள் கணிணியில் உள்ள இணைய உலாவியில் https://messages.android.com என்ற இணைய பக்கத்திற்கு செல்லவும்.

°உங்கள் கணிணி கீழே காண்பிக்கப்பட்டுள்ளது போல க்யூ.ஆர் கோடு உள்ள திரையை பார்க்கமுடியும்.

வெப் ப்ரவுசரில் இருந்து ஆண்ராய்டு பயனர்கள் மெசேஜ் அனுப்புவது எப்படி?

°பின்னர் உங்கள் போனில் உள்ள 'ஆண்ராய்டு மெசேஜஸ்' செயலியை திறக்கவும்.

°அச்செயலியின் மேல் வலது மூலையில் உள்ள மெனு பொத்தானை அழுத்தவும்.

°பின்னர் "மெசேஜ் ப்ரம் வெப்"(Messages for Web) என்பதை தேர்வு செய்யவும்.

° இப்போது தோன்றும் திரையில் "ஸ்கேன் க்யூ.ஆர் கோட்"(Scan QR Code) என்பதை அழுத்தவும்.


°உடனடியாக உங்கள் போனை எடுத்து கணிணி திரையில் தோன்றும் க்யூ.ஆர் கோட்-ஐ போனில் ஸ்கேன் செய்ய வேண்டும்.

°போன் உடனே அந்த கோட்-ஐ கண்டறிந்து, கீழே காண்பிப்பது போன்ற இணைய பக்கம் திறக்கும்.

வெப் ப்ரவுசரில் இருந்து ஆண்ராய்டு பயனர்கள் மெசேஜ் அனுப்புவது எப்படி?

அவ்வளவு தான். திரையில் உள்ள புதிய பக்கத்தில் உங்களின் போன் கான்டேக்டில் உள்ளவர்களுடன் நீங்கள் இணைய உலாவியை பயன்படுத்தி புதிதாக உரையாடலை துவங்கலாம். போனில் ஏற்கனவே செய்ய உரையாடல்களும் இதில் தோன்றும் என்பதால், அந்த உரையாடலை உங்களால் தொடரவும் முடியும். மேலும் இதை பயன்படுத்தி படங்கள் ,எமோஜிக்கள், ஸ்டிக்கர்கள் என பலவற்றை அனுப்பவும் முடியும்.
Best Mobiles in India

English summary
Android phone owners can now send text messages from a web browser, here's how: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X