WhatsApp டிப்ஸ்: ஒரே நேரத்தில் 100 போட்டோஸ் மற்றும் வீடியோஸை அனுப்புவது எப்படி?
வாட்ஸ்அப் (WhatsApp) பயனர்கள் அனைவரும் வாட்ஸ்அப் வழியாக போட்டோஸ் மற்றும் வீடியோ பைல்களை பகிர்கின்றனர். ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேலான புகைப்படங்களை ஒரே வேளையில் அனுப்ப வாட்ஸ்அப் அனுமதிக்காது. ஆனால், இந்த கவலை இனி இல்லை.
இனி வாட்ஸ்அப் பயனர்கள் ஒரே நேரத்தில் 100 போட்டோ மற்றும் 100 வீடியோ பைல்களை வாட்ஸ்அப் மூலம் எளிதாக அனுப்ப முடியும். ஆம், மக்களே.! சமீபத்திய அப்டேட்டிற்கு பிறகு இது இப்போது சாத்தியமானது. இதைப் பற்றி நீங்கள் இன்னும் அறியவில்லை என்றால், இப்போது தெரிந்துகொள்ளுங்கள். முதலில் நீங்கள் வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பயனராக இருக்க வேண்டும். ஆம், இந்த அம்சம் இப்போது ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது.

ஒரே நேரத்தில் 100 புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை WhatsApp-ல் அனுப்ப முடியுமா?
ஆண்ட்ராய்டு பயனர்கள் ஒரே நேரத்தில் 100 புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்ப அனுமதிக்கும் புதிய அம்சத்தை வாட்ஸ்அப் அறிவித்துள்ளது. இது முந்தைய வரம்பான 30 இலிருந்து 70 எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. இந்த அம்சம் சமீபத்திய ஆண்ட்ராய்டு அப்டேட் ஆனா வாட்ஸ்அப் வெர்ஷன் 2.22.24.73 இல் சேர்க்கப்பட்டுள்ளது. இது வழி பகிரப்படும் ஆவணங்களுக்கு கேப்ஷன்களைச் சேர்க்கும் திறனை உள்ளடக்கியுள்ளது.
இந்த வாட்ஸ்அப் அப்டேட் ரொம்ப முக்கியம் மக்களே.!
முன்பு, வாட்ஸ்அப் மூலம் போட்டோஸ் மற்றும் வீடியோ பைல்களுக்கு மட்டுமே கேப்ஷன்களைச் சேர்க்க முடியும். ஆனால், இப்போது இதில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் நிறுவனம் புதிய வரம்பை குறிப்பிடவில்லை என்றாலும், குழு பொருள் மற்றும் விளக்கப் புலங்களுக்கான எழுத்து வரம்பை நீட்டித்துள்ளது. இந்த அப்டேட்கள் தற்சமயம் ஆண்ட்ராய்டுக்கான வாட்ஸ்அப்பில் மட்டுமே கிடைக்கின்றது.
ஆனால், இவை விரைவில் iOS-க்கு அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிகிறது. வாட்ஸ்அப் தற்போது "கெப்ட் மெசேஜஸ்" என்ற அம்சத்தை சோதித்து வருகிறது. இது பயனர்கள் காணாமல் போகும் செய்திகளையும் டிரான்ஸ்கிரிப்ட்களையும் iOS இல் வைத்திருக்க அனுமதிக்கிறது. கடந்த ஆண்டு, WhatsApp பைல் அளவின் வரம்பை 100MB இலிருந்து 2GB ஆக உயர்த்தியது. ஆனால் இந்த அம்சம் iOS WhatsApp-க்கு இன்னும் அறிமுகப்படுத்தப்படவில்லை.

நீங்கள் Android வாட்ஸ்அப் பயனர் என்றால் லக்கு தான்.!
புதிய அம்சங்கள் வாட்ஸ்அப்பில் மீடியா மற்றும் ஆவணங்களைப் பகிர்வதைப் பயனர்களுக்கு எளிதாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கான அதிகரித்த வரம்பு, பயனர்கள் இப்போது ஒரே மெசேஜ்ஜில் அதிக உள்ளடக்கத்தைப் பகிரலாம். சரியாக சொல்ல வேண்டுமென்றால், ஒரே நேரத்தில் 100 புகைப்படங்களையும் வீடியோக்களையும் இப்போது நீங்கள் பகிரலாம்.
ஒரே நேரத்தில் 100 போட்டோ மற்றும் வீடியோவை WhatsApp இல் அனுப்புவது எப்படி?
- முதலில் உங்கள் வாட்ஸ்அப் வெர்ஷன் 2.22.24.73 வெர்ஷனிற்கு அப்டேட் செய்யப்பட்டுள்ளதா என்பது உறுதிப்படுத்துங்கள்.
- அப்டேட் செய்யப்படவில்லை என்றால் Google Play Store சென்று அப்டேட் செய்யவும்.
- பிறகு உங்கள் Android சாதனத்தில் புகைப்படங்களைப் பகிர விரும்பும் தனிநபர் சாட்டிற்கு செல்லவும்.
- அல்லது குரூப் சாட்டிற்கு கூட நீங்கள் செல்லலாம்.
- டிஸ்பிளேவின் அடிப்பகுதியில் உள்ள இணைப்பு ஐகானைத் தட்டவும்.
- இது ஒரு காகித கிளிப் போல் தெரியும்.
- மெனுவிலிருந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைத் தேர்ந்தெடுக்கவும்.
- பின்னர், உங்கள் ஸ்மார்ட்போனின் கேலரியில் இருந்து, நீங்கள் பகிர விரும்பும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைத் தேர்ந்தெடுக்கவும்.
- இப்போது ஒரே நேரத்தில் 100 பைல் வரை தேர்ந்தெடுக்கலாம்.
- உங்கள் தேர்வுகளைச் செய்த பிறகு, 100 புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஒரே கிளிக்கில் பகிரலாம்.
இந்த முறையை பின்பற்றி இனி வாட்ஸ்அப் பயனர்கள் 100 புகைப்படம் மற்றும் வீடியோவை அனுப்பலாம்.


Click it and Unblock the Notifications








