வாட்ஸ்அப் செயலியில் அழிக்கப்பட்ட குறுந்தகவல்களை பார்ப்பது எப்படி?

|

வாட்ஸ்அப் செயலியில் 2017 ஆம் ஆண்டு டெலீட் ஃபார் எவ்ரிவொன் எனும் அம்சம் வழங்கப்பட்டது. இந்த அம்சம் கொண்டு பயனர்கள் மற்றவர்களுக்கு அனுப்பிய குறுந்தகவல்களை அழிக்க முடியும்.

தங்களுக்கு

இந்த அம்சம் கொண்டு பயனர்கள் குறுந்தகவல்களை தங்களுக்கு மட்டுமின்றி குறுந்தகவலை அனுப்பியவருக்கும் சேர்த்து அழிக்க முடியும். இந்த அம்சம் க்ரூப் சாட்களிலும் இயங்குகிறது.

திஸ் மெசேஜ் வாஸ் டெலீட்டட் எனும் தகவலை வாட்ஸ்அப் வழங்குகிறது

எனினும், குறுந்தகவல் அழிக்கப்பட்டதை இருவருக்கும் தெரியப்படுத்தும் வகையில், திஸ் மெசேஜ் வாஸ் டெலீட்டட் எனும் தகவலை வாட்ஸ்அப் வழங்குகிறது. சமயங்களில் ஐஒஎஸ் பயனர்களுக்கு புகைப்படம், வீடியோக்கள் போட்டோ கேலரியில் சேமிக்கப்படுகிறது. தற்சமயம் அழிக்கப்பட்ட குறுந்தகவல்களை பார்க்க வழி செய்யும் செயலி கிடைக்கிறது.

மீண்டு வரும் ஓசோன் படலம்! காரணம் என்ன?மீண்டு வரும் ஓசோன் படலம்! காரணம் என்ன?

மூன்றாம் தரப்பு செயலி

மூன்றாம் தரப்பு செயலி

மூன்றாம் தரப்பு செயலியான WhatsRemoved+ கொண்டு பயனர்கள் அழிக்கப்பட்ட குறுந்ததகவல்களை மீட்க முடியும். எனினும், இதனை வாட்ஸ்அப் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த செயலி பயனர்களின் தகவல்களை சேகரிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் இதனை கவனமாக பயன்படுத்த வேண்டும்.

வாட்ஸ்அப் செயலியில் அழிக்கப்பட்ட குறுந்தகவல்களை படிப்பது எப்படி என பார்ப்போம்

வாட்ஸ்அப் செயலியில் அழிக்கப்பட்ட குறுந்தகவல்களை படிப்பது எப்படி என பார்ப்போம்

கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து WhatsRemoved+ எனும் செயலியை இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

பின் WhatsRemoved+ செயலியை திறந்து அது கேட்கும் அனுமதிகளை முழுமையாக படித்துவிட்டு பின் அனுமதி வழங்குவது பற்றி முடிவு செய்யலாம். அனுமதியளித்தால் மட்டுமே செயலியை பயன்படுத்த முடியும்.

ஸ்மார்ட்போனில் WhatsRemoved+ செயலியை இயக்கும் போது விண்டோவில் உள்ள செயலிகளின் பட்டியல் தோன்றும்.

பட்டியலில் இருந்து நீங்கள் அனுமதி அளிக்க விரும்பும் செயலிகளை தேர்வு செய்ய வேண்டும்.

பின் அனுமதியை உறுதிப்படுத்த Allow பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.

பெரும்பாலான சமயங்களில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை திரும்ப பெற முடியும். எனினும், புகைப்படம் டவுன்லோடு செய்யப்படவில்லை எனில், அதனை திரும்ப பெறுவது கடினம் ஆகும். எனினும், டவுன்லோடு செய்யப்பட்ட குறுந்தகவல்களை மீட்க முடியும்.

இனி, WhatsRemoved+ செயலி மூலம் மற்ற குறுந்தகவல் செயலிகளில் வரும் குறுந்தகவல்களை இயக்க முடியும்.

வாட்ஸ்அப் செயலியை இயக்க, WhatsRemoved+ செயலியை திறந்து, பட்டியலிடப்பட்டுள்ள செயலிகளில் இருந்து வாட்ஸ்அப்பை பயன்படுத்த வேண்டும்.

இந்த செயலி நோட்டிபிகேஷன் மாற்றங்களை கண்டறிந்து, என்ன நடைபெற்றது என்பதை தெரிவிக்கும். இதில் பயனர்கள் தேர்வு செய்து அனுமதியளித்த செயலிகளின் நோட்டிபிகேஷன்களை மட்டுமே இந்த செயலி பதிவு செய்து வைக்கும்.

 போன்று செயலிகள் ஐஒஎஸ் மற்றும் ஐபோனில் இந்த செயலி கிடையாது

வாட்ஸ்அப் பயனர்கள் இதே போன்று செயலிகள் ஐஒஎஸ் மற்றும் ஐபோனில் இந்த செயலி கிடையாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த செயலியின் குறைபாடு அதன் தனியுரிமை விவகாரம் எனலாம். இதற்கு முக்கிய காரணம் ஒடிபி மற்றும் இதர வங்கி விவரங்கள் மூன்றாம் தரப்பு செயலிக்கு கிடைக்கும். இதனால் அழிக்கப்பட்ட குறுந்தகவல்களை படிக்க உங்களது தனியுரிமை விவரங்களை இழக்க வேண்டி இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
How to see deleted messages on WhatsApp : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X