ஜிமெயில் சேவையில் மின்னஞ்சல்களை ஷெட்யூல் செய்வது எப்படி?
அலுவல் நேரங்களில் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்களை எல்லா நேரத்திலும் அனுப்ப முடியாது.
மின்னஞ்சல்களை அனுப்பும் போது சில சமயங்களில் அவற்றை அனுப்ப சரியான நேரத்திற்கு காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும். அலுவல் நேரங்களில் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்களை எல்லா நேரத்திலும் அனுப்ப முடியாது. எனினும் இவற்றை சில நிமிடங்களில் இருந்து சில மணி நேரங்களுக்கு பின் அனுப்ப வேண்டியிருக்கும். ஜிமெயிலின் புதிய அம்சம் இந்த பிரச்சனையை சரி செய்கிறது.

ஜிமெயிலின் 15-வது ஆண்டு விழாவை முன்னிட்டு கூகுள் மின்னஞ்சல் சேவையில் மின்னஞ்சல்களை ஷெட்யூல் செய்வதுடன் மூன்று புதிய வசதிகளை வழங்குகிறது. ஜிமெயிலில் மின்னஞ்சல்களை ஷெட்யூல் செய்ய பின்வரும் வழிமுறைகளை பின்பற்றலாம்.

1 - வெப் பிரவுசரில் mail.google.com வலைதளம் செல்ல வேண்டும்.
2 - உங்களது மின்னஞ்சல் முகவரி மற்றும் கடவுச்சொல் பதிவிட வேண்டும்.
3 - சைன்-இன் செய்ததும் 'Compose' பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். இது திரையின் மேல்புறம் இடதுபக்கம் காணப்படும்.
4 - இனி மின்னஞ்சலை டைப் செய்து அனுப்ப வேண்டியவரின் மின்னஞ்சல் முகவரியை பதிவிட வேண்டும்.
5 - அடுத்து மின்னஞ்சலை அனுப்புவதற்கான பட்டனிற்கு பதில் அதன் அருகில் இருக்கும் கீழ்புற அம்பு குறியை க்ளிக் செய்ய வேண்டும்.
6 - இனி அனுப்ப வேண்டிய நேரத்திற்கு ஷெட்யூல் செய்ய வேண்டும்.
7 - அடுத்து புதிய ஆப்ஷன் திறக்கும். அதில் மின்னஞ்சல்களை அனுப்ப மூன்று ஆப்ஷன்கள் இடம்பெற்றிருக்கும்.
8 - தேர்வு செய்த ஆப்ஷன்களில் நீங்கள் அனுப்ப வேண்டிய தேதி மற்றும் நேரம் இடம்பெறவில்லை எனில், 'Pick date & time' ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
9 - இனி காலெண்டரில் நீங்கள் அனுப்ப வேண்டிய விவரங்களை தேர்வு செய்ய வேண்டும்.
10 - மின்னஞ்சலை கம்போஸ் செய்யும் போது அதிகபட்சம் பத்து நாட்களுக்குள் ஷெட்யூல் செய்யும் வசதி வழங்கப்படுகிறது.
மின்னஞ்சல் ஷெட்யூல் செய்யப்பட்டதும் அது மின்னஞ்சலின் இடதுபுறம் இருக்கும் 'scheduled' பகுதியில் இருக்கும். இங்கு ஷெட்யூல் செய்யப்பட்ட மின்னஞ்சல்களை ரத்து செய்யும் வசதி வழங்கப்படுகிறது. இவ்வாறு செய்யும் போது மின்னஞ்சல் டிராஃப்ட்ஸ் பகுதியில் திறக்கும்.

பணி செய்யும் போது எல்லா சமயமும் அலுவல் நேரமாக அது இருக்காது. சில சமயங்களில் கூடுதல் நேரம் பணியாற்ற வேண்டிய அவசியம் அனைவருக்கும் ஏற்படும். இதுபோன்ற சூழல்களில் மற்றவர்களின் ஓய்வு நேரத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும். இதனால் அனைவருக்கும் ஏற்றவாரு செயல்பட ஜிமெயில் தேவையில் மின்னஞ்சல் எப்போது செல்ல வேண்டும் என்பதை நிர்ணயிக்கும் வசதியை வழங்குகிறோம். வழக்கம் போல் மின்னஞ்சலை டைப் செய்து, அவற்றை நீங்கள் விரும்பும் நேரத்தில் அனுப்பும் படி ஷெட்யூல் செய்து கொள்ளலாம். என கூகுள் தனது வலைதளத்தில் பதிவிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








