Gmail - ஈமெயிலை எப்படி ஷெட்டியூல் செய்து அனுப்புவது?

|

ஜிமெயிலில் ஈமெயில்களை ஷெட்டியூல் (Schedule) செய்யும் அம்சம் இருக்கிறதென்பது எத்தனை பேருக்கு தெரியும். அவசரமா இல்லாமல் நிதானமானாக, முன்பே உங்கள் ஈமெயில்களை உங்களுக்குத் தேவையான நேரத்தில் அனுப்புவதற்கான வாய்ப்பை ஜிமெயில் உங்களுக்கு வழங்குகிறது.

Gmail - ஈமெயிலை எப்படி ஷெட்டியூல் செய்து அனுப்புவது?

இந்த ஷெட்டியூல் சேவை ஆண்ட்ராய்டு மற்றும் iOS பயனர்கள் இரண்டு பயனர்களுக்குக் கிடைக்கிறது. ஜிமெயில் இல் இருந்து எப்படி ஈமெயில்களை ஷெட்டியூல் செய்வது என்பதைப் பார்க்கலாம்.

  • முதலில் ஜிமெயில் ஆப் ஓபன் செய்யுங்கள். அடுத்தபடியாக உங்களுடைய ஈமெயில்ளை கம்போஸ்(Compose) செய்ய வேண்டும்.
  • ஈமெயில்ளை கம்போஸ் செய்ய பிளஸ் அடையாளம் பட்டனை கிளிக் செய்யவும்.
  • அங்கே ஈமெயில் முகவரி, சப்ஜெக்ட் மற்றும் ஈமெயில் தகவல்கள் ஆகியவற்றை நிரப்பிய பின் மேல் வலது மூலையில் உள்ள மூன்று புள்ளிகளை கிளிக் செய்யவும்.
  • உங்கள் டிஸ்பிளேயில் தோன்றும் பாப் அப் இல் முதல் விருப்பமாக "Scheduled send" ஆப்ஷன் இருக்கும், அதை கிளிக் செய்யுங்கள்.
  • Tomorrow morning, This afternoon, Monday Morning மற்றும் Pick Date & Time என்ற நான்கு விருப்பங்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.
  • Pick Date & Time என்ற விருப்பத்தை நீங்கள் தேர்வு செய்யும் பொழுது, உங்களால் குறிப்பிட்ட நேரம் மற்றும் தேதியை நீங்களே முடிவு செய்து ஈமெயில்ளை அனுப்ப முடியும்.

இந்த முறையைப் பயப்படுத்தி உங்களால், நீங்கள் அனுப்பு நினைக்கும் ஈமெயில்களை எளிதாக ஷெட்டியூல் செய்து, நீங்கள் விரும்பும் நேரத்திற்கு அனுப்ப முடியும்.

Best Mobiles in India

English summary
How To Schedule Emails In Gmail : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X