Home
How to

ஸ்க்ரீன்ஷாட் இல்லாமல் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களை பாதுகாப்பது எப்படி?

ஒருசிலர் ஸ்க்ரீன்ஷாட் எடுத்து வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்களை பாதுகாத்து வைத்து கொள்வார்கள்.

வாட்ஸ் அப் என்பது ஒவ்வொரு மனிதருக்கும் இன்றியமையாத் ஒன்றாக மாறிவிட்டது. லிங்க்குகள் முதல் வீடியோ வரை, பலவிதமான கேள்விகள், மீம்ஸ்கள், போஸ்ட்டுகள், விடுமுறை திட்டங்கள் என பல நபர்களுக்கு இந்த வாட்ஸ் அப் ஒரு வழிகாட்டியாக உள்ளது. ஆனால் அதே நேரத்தில் வாட்ஸ் அப்-இல் வரும் ஸ்டேட்டஸ்களை பாதுகாத்து வைக்கும் எளிய முறைகளை ஒருசிலர் அறியாமல் இருந்திருக்க வாய்ப்பு உள்ளது.

ஸ்க்ரீன்ஷாட் இல்லாமல் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களை பாதுகாப்பது எப்படி?

ஒருசிலர் ஸ்க்ரீன்ஷாட் எடுத்து வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்களை பாதுகாத்து வைத்து கொள்வார்கள். அவ்வாறு பாதுகாக்கும்போது யூசர்நேம் மற்றும் நோட்டிபிகேசன்கள் உள்பட பல விஷயங்கள் அந்த ஸ்க்ரீன்ஷாட்டில் இருக்கும். எனவே ஸ்க்ரீன்ஷாட் இல்லாமல் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்களை பாதுகாப்பது எப்படி என்பது குறித்த எளிய முறையை தற்போது பார்ப்போம்

ஸ்க்ரீன்ஷாட் இல்லாமல் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களை பாதுகாப்பது எப்படி?

ஸ்டேட்டஸ் சேவர் மூலம் பாதுகாப்பது:
1. ஸ்டேட்டஸ் சேவர் என்ற செயலியை உங்கள் போனில் டவுன்லோடு செய்து பின்னர் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள். இந்த செயலி பிளே ஸ்டோர் அல்லது இண்டர்நெட்டில் எளிதில் கிடைக்க்கும்.

2. அதன்பின்னர் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பக்கத்திற்கு சென்று யாருடைய ஸ்டேட்டஸ்களை பாதுகாக்க நீங்கள் விரும்புகின்றீர்களோ, அந்த பக்கத்திற்கு செல்லவும். அந்த ஸ்டேட்டஸ்களை பார்த்துவிட்டு அதன்பின் நாங்கள் கூறும் இந்த எளிய வழிகளை பின்பற்றுங்கள்

3. இப்போது ஸ்டேட்டஸ் சேவர் என்ற செயலியை ஓப்பன் செய்யுங்கள். இந்த செயலி உங்களுக்கு தேவையான ஸ்டேட்டஸ்களை ஸ்கேன் செய்து அதன் பின் ஸ்டேட்டஸ்களை டிஸ்ப்ளே செய்யும். அதன் பின்னர் அந்த ஸ்டேட்டஸில் இருக்கும் புகைப்படங்கள், வீடியோக்களை தனிமைப்படுத்தி காட்டும். நீங்கள் எதை பாதுகாக்க விரும்புகின்றீர்களோ அதனை டவுன்லோடு செய்து கொள்ளலாம். அதாவது புகைப்படத்தை டவுன்லோடு செய்ய வேண்டும் என்றால் புகைப்படத்தையும், வீடியோவை டவுன்லோடு செய்ய வேண்டும் என்றால் வீடியோவையும் கிளிக் செய்தால் அவை டவுன்லோடு ஆகி பாதுகாக்கப்படும்

4. அதே நேரத்தில் அந்த ஸ்டேட்டஸ் ஏற்கனவே இருந்த இடத்திலும் அப்படியே இருக்கும். அதன்பின் மீண்டும் ஸ்டேட்டஸ் சென்று அடுத்த புகைப்படம் அல்லது வீடியோவை டவுன்லோடு செய்து கொள்ளலாம். நீங்கள் டவுன்லோடு செய்த அனைத்தும் உங்கள் போனில் பாதுகாக்கப்படும்

ஸ்க்ரீன்ஷாட் இல்லாமல் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களை பாதுகாப்பது எப்படி?

செயலிகள் இல்லாமல் சேவ் செய்வது எப்படி?
உண்மையில் வாட்ஸ் அப்-இல் இருக்கும் ஸ்டேட்டஸ் அனைத்துமே உங்கள் போனில் ஏற்கனவே டவுன்லோடு ஆகிதான் உங்கள் பக்கத்தில் இருக்கும். எனவே தேவையில்லாமல் மூன்றாவது பார்ட்டியின் செயலிகள் மூலம் மீண்டும் ஒருமுறை சேவ் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் உங்கள் போனில் இருக்கும் ஃபைல் மேனேஜர் சென்றால் அங்கே உங்களுடைய வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்களில் உள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இருக்கும்,

1. முதலில் நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் ஆண்ட்ராய்டு போனில் உள்ள ஃபைல் மேனேஜர் சென்று அதனை ஓப்பன் செய்ய வேண்டும்

2. பின்னர் இண்டர்னல் ஸ்டோரேஜை அக்சஸ் செய்து அதன் பின்னர் செட்டிங்ஸ் சென்று அதனை க்ளிக் செய்ய வேண்டும்

3. அதில் வரும் மெனுவில் இருந்து 'ஷோ ஹைடன் ஃபைல்ஸ்' என்ற ஆப்சனை எனேபிள் செய்ய வேண்டும்

4. அதன் பின்னர் இண்டர்னல் ஸ்டோரேஜை அக்சஸ் செய்து அதில் வாட்ஸ் அப் ஃபோல்டரை தேட வேண்டும்

5. அதன் பின்னர் அதில் உள்ள மீடியா என்ற ஃபைலின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்

6. அந்த ஃபைலுக்குள் 'ஸ்டேட்டஸ்கள்' என்ற ஃபைலை தேடி கண்டுபிடிக்க வேண்டும்

7. அங்கே உங்களுக்கு வந்த அனைத்து வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களும் இருக்கும்

8. அங்கே உள்ள இமேஜ் அல்லது வீடியோக்களை காப்பி செய்து நீங்கள் வேறு இடத்திலும் சேவ் செய்து வைத்து கொள்ளலாம்

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்கள் ஒரு கட்டத்தில் தானாகவே அழிந்துவிடும் தன்மையுடையது. எனவே அவை காணாமல் போகும் முன் நீங்கள் உங்கள் ஸ்டேட்டஸ்களை சேவ் செய்து வைத்து கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது

More from GizBot

Best Mobiles in India

English summary
How to save Whatsapp Status without capturing screenshots : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X