பாதுகாப்பு முக்கியம்: வாட்ஸ்அப் DP-யை குறிப்பிட்ட நபரிடம் இருந்து மறைப்பது எப்படி?

|

உலகளவில் பிரபல தகவல் பரிமாற்றும் செயலியாக இருப்பது வாட்ஸ்அப். இது அதிகளவில் பயன்படுத்தப்படும் பிரதான செயலியாக இருந்து வருகிறது. வாட்ஸ்அப் நிறுவனம் தொடங்கப்பட்ட நேரத்தில் இருந்து பயனர்களின் தேவை அறிந்து பல்வேறு கூடுதல் அம்சங்களை கொண்டு வந்த வண்ணம் இருக்கிறது. சமூகவலைதள செயலிகளை எப்படி பாதுகாப்பாக கையாளுவது என்பது முக்கியமான ஒன்று. வாட்ஸ்அப்பில் வைக்கப்படும் ப்ரொஃபைல் போட்டோக்கலை எப்படி அகற்றுவது, மறைப்பது மற்றும் பதிவேற்றுவது என்பது குறித்து பார்க்கலாம். குறிப்பிட்ட நபரிடம் மட்டும் சுயவிவர புகைப்படத்தை எவ்வாறு மறைப்பது மற்றும் மாற்றுவது போன்ற அம்சங்களும் வாட்ஸ்அப்பில் இருக்கிறது. வாட்ஸ்அப்-ன் சுயவிவரப் புகைப்படம் தொடர்பான விவரங்களை பார்க்கலாம்.

வாட்ஸ்அப் டிபி விவரம்

வாட்ஸ்அப் டிபி விவரம்

வாட்ஸ்அப் டிபி, ப்ரொஃபைல் படத்தை ஒருவரிடம் இருந்து மட்டும் மறைப்பது எப்படி என பார்க்கலாம்.

வாட்ஸ்அப் பயன்பாட்டில் சுயவிவர படத்தை அனைவரிடம் இருந்தும் மறைத்து வைக்க ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் இருக்கிறது.

ஸ்டெப் 1: உங்கள் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் சாதனங்களில் வாட்ஸ்அப் பயன்பாட்டுக்கு செல்ல வேண்டும்.

ஸ்டெப் 2: செட்டிங்க்ஸ் அமைப்புக்குள் சென்று அக்கவுண்ட் > தனியுரிமை (பிரைவேசி) > சுயவிவரப் புகைப்படம் என்பதற்குள் செல்ல வேண்டும்

ஸ்டெப் 3: தற்போது உங்கள் படத்தை அனைவரிடம் இருந்தும் மறைக்க 'Nobody' விருப்பத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.

வாட்ஸ்அப் DP-யை எப்படி மறைப்பது

வாட்ஸ்அப் DP-யை எப்படி மறைப்பது

குறிப்பிட்ட நபர்களிடம் இருந்து வாட்ஸ்அப் DP-யை எப்படி மறைப்பது என்பது குறித்து பார்க்கலாம்.

குறிப்பிட்ட நபரிடம் இருந்து சுயவிவர புகைப்படத்தை மறைக்க அனுமதிக்கும் உள்ளமைக்கப்பட்ட அம்சம் வாட்ஸ்அப்பில் இல்லை என்பது குறிப்பிடத்தக்க விஷயம் என்றாலும் சுயவிவரப் படத்தை காட்ட விரும்பாத நபர்களிடம் இருந்து இதை மறைக்கலாம்.

செட்டிங்க்ஸ் > கணக்கு > பிரைவசி

செட்டிங்க்ஸ் > கணக்கு > பிரைவசி

தற்போது உங்கள் வாட்ஸ்அப்பை ஓபன் செய்து, பின் செட்டிங்க்ஸ் > கணக்கு > பிரைவசி > ப்ரொபைல் போட்டோ என்பதை கிளிக் செய்து உள்ளே நுழைய வேண்டும். அதில் 'எனது தொடர்புகள்' என்ற விருப்பத்துக்குள் சென்று கிளிக் செய்து "டிபி காண்பிக்க" என்பதை கிளிக் செய்ய வேண்டும். இதன்மூலம் தங்கள் டிபி தங்கள் தொடர்பு பட்டியலில் உள்ளவர்களுக்கு மட்டுமே காண்பிக்கப்படும் பிற நபர்களுக்கு தங்கள் சுயவிவரப் படம் காண்பிக்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

டிபி-ஐ நீக்க வேண்டிய அவசியமில்லை

டிபி-ஐ நீக்க வேண்டிய அவசியமில்லை

வாட்ஸ்அப் முன்னதாகவே ஒரு புதிய அம்சத்தை செயல்படுத்துகிறது. இது பயனர்கள் தங்கள் சுயவிவரப் படத்தை தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களிடம் இருந்து மறைத்து வைக்க அனுமதிக்கிறது. தங்கள் டிபி-ஐ மறைக்க நீங்கள் அந்த தொடர்பை நீக்க வேண்டிய அவசியமில்லை. வாட்ஸ்அப் டிபி காண்பிக்க வேண்டாம் என குறிப்பிட்ட நபர்களிடம் தகவலை பரிமாற வாட்ஸ்அப் அனுமதிக்கிறது.

சுயவிவரப் புகைப்படத்தை மறைக்க சிறந்த அம்சம்

சுயவிவரப் புகைப்படத்தை மறைக்க சிறந்த அம்சம்

தேர்ந்தெடுக்கப்பட்ட தொடர்புகளில் இருந்து தங்கள் சுயவிவரப் புகைப்படத்தை மறைக்க இந்த அம்சம் உங்களை அனுமதிக்கிறது. இதற்கு மூன்று விருப்பங்கள் இருக்கிறது. அனைவரும், எனது தொடர்புகள் மற்றும் எனது தொடர்புகளை தவிர என்ற மூன்று தேர்வுகள் இருக்கிறது. இந்த அம்சம் மூலம் தங்களுக்கு தேவையில்லாதவர்களிடம் இருந்து டிபி-ஐ மறைக்கலாம்.

பிறரால் சேமிக்க முடியுமா

பிறரால் சேமிக்க முடியுமா

பொதுவாக அனைவருக்கும் வரும் சந்தேகங்கள் குறித்து பார்க்கையில், எனது வாட்ஸ்அப் டிபியை பிறரால் சேமிக்க முடியுமா என்பதாகும் பாதுகாப்பு அம்சங்கள் ஆக்டிவேட் செய்யப்படும் பட்சத்தில் சேமிக்க முடியாது என்றாலும் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வைத்துக் கொள்ளலாம்.

சுயவிவரப் படத்தின் ஸ்கிரீன்ஷாட்டை யாராவது எடுத்தால் நமக்கு தெரிய வருமா என்று பார்க்கையில், யாராவது உங்கள் டிபியின் ஸ்கிரீன்ஷாட்டை எடுத்தால் தங்களுக்கு அறிவிக்கப்பட வாய்ப்பில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

Best Mobiles in India

English summary
How to Safely Handle WhatsApp DP and hide it from the Specific Person

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X