தெரியாம டெலீட் செய்த Mobile நம்பரை மீண்டும் பெறுவது எப்படி? இது தெரிஞ்சா போதும்.!

|

இப்போது உங்களிடம் 10 நபர்களின் மொபைல் நம்பரை (Mobile number) போனை பார்க்கலாம் கூற வேண்டும் என்று கூறினால் என்ன செய்வீர்கள்..? உடனே, பெரும்பாலானோர் உங்கள் குடும்பத்தில் இருக்கும் மிக முக்கியமான நபர்களின் எண்களை கூறுவீர்கள்..! அதுவே சிலருக்கு சொல்ல கடினமாக தான் இருக்கும் - இன்றைய காலகட்டத்தில் ஒரு நபர் அதிகப்படியாக 5 மொபைல் நம்பரை வேண்டுமானால் கூற முடியும். அல்லது, குறைந்தது 3 நபர்களின் எண்களை கூற முடியும்.

மொபைல் நம்பர்களை போன் காண்டக்ட்டில் வெறுமென சேவ் செய்கிறீர்களா?

மொபைல் நம்பர்களை போன் காண்டக்ட்டில் வெறுமென சேவ் செய்கிறீர்களா?

10 மொபைல் நம்பரை தெளிவாக கூறிவிட்டால் உண்மையிலேயே அவர் புத்திசாலி என்று நாம் ஒப்புக்கொள்ள வேண்டும்.

ஸ்மார்ட்போன் (smartphone) பயன்படுத்தும் அனைவரும் இப்போது அவர்களுக்கு தேவைப்படும் அனைத்து விதமான போன் நண்பர்களையும் அவர்களுடைய போனின் காண்டாக்ட் இல் தான் ஸ்டோர் செய்து வைத்துள்ளனர்.

இது தான் இன்றைய காலத்தில் பின்பற்றப்படும் வழக்கமாக மாறிவிட்டது.

சேவ் செய்த மொபைல் எண்களை டெலீட் செய்துவிட்டால் என்ன செய்வது?

சேவ் செய்த மொபைல் எண்களை டெலீட் செய்துவிட்டால் என்ன செய்வது?

இப்படி ஸ்டோர் செய்யப்படும் எண்களை வைத்து தான், நாம் விரும்பும் நேரத்தில் எளிமையாக தேவைப்படும் அழைப்புகளை மேற்கொள்கிறோம்.

இப்படி, நம்முடைய போனில் சேவ் செய்து வைக்கும் போன் நம்பர்கள் திடீரென தெரிந்தோ... அல்லது... தெரியாமலோ அழிந்துவிட்டால் என்ன செய்வது? என்று பலருக்கும் தெரியாமல் இருக்கிறது.

உண்மையை சொல்லப் போனால், சில எண்களை காணவில்லை டெலீட் ஆகிவிட்டது போல என்று மக்கள் பதட்டமாகிறார்கள்.

உங்கள் அறைக்கு சரியான டிவி சைஸ் எது? இந்த ஃபார்முலா தெரியாம டிவி வாங்கவே கூடாது.!உங்கள் அறைக்கு சரியான டிவி சைஸ் எது? இந்த ஃபார்முலா தெரியாம டிவி வாங்கவே கூடாது.!

உங்கள் போன் செட்டிங்கில் இதை ஆக்டிவேட் செய்துகொள்ளுங்கள்.!

உங்கள் போன் செட்டிங்கில் இதை ஆக்டிவேட் செய்துகொள்ளுங்கள்.!

இனி அப்படி நீங்கள் பதட்டமடைய தேவையில்லை. காரணம், உங்கள் மொபைல் காண்டாக்ட் இல் சேவ் செய்யப்பட்டு இருக்கும் போன் நம்பரை நீங்கள் தெரியாமல் டெலிட் செய்தால் - அதை மீண்டும் ரீஸ்டோர் செய்வதற்கான வாய்ப்புகள் இப்பொழுது அதிகமாக இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

இதைச் சரியாகச் செய்வதற்கு உங்கள் போனில் சில செட்டிங்கை நாம் ஆக்டிவேட் செய்ய வேண்டியதுள்ளது. அதை எப்படிச் செய்வது என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் பார்க்கப் போகிறோம்.

டெலிட் செய்யப்பட்ட மொபைல் நம்பரை எப்படி மீண்டும் மீட்டெடுப்பது?

டெலிட் செய்யப்பட்ட மொபைல் நம்பரை எப்படி மீண்டும் மீட்டெடுப்பது?

உங்கள் போனிலிருந்து டெலிட் செய்யப்பட்ட மொபைல் நம்பரை எப்படி மீண்டும் மீட்டெடுப்பது என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க.

 • முதலில் உங்களுடைய போனின் செட்டிங்ஸ் (Settings) உள்ளே செல்ல வேண்டும்.
 • பின்பு அங்கு உள்ள அக்கவுண்ட்ஸ் (Accounts) என்று ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
 • பிறகு அதில் ஆட்டோ சிங்க் டேட்டா (Auto sync data) என்ற ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் செய்ய வேண்டும்.
 • இந்த விருப்பம் ஆஃப் (Off) இல் இருந்தால் அதை ஆன் (On) செய்யவும்.
 • 2023-ல் நீங்கள் வாங்க வேண்டிய பெஸ்ட் 5G போன்கள்.! லிஸ்ட்ட பார்க்காம வாங்கிடாதீங்க.!2023-ல் நீங்கள் வாங்க வேண்டிய பெஸ்ட் 5G போன்கள்.! லிஸ்ட்ட பார்க்காம வாங்கிடாதீங்க.!

  முழு காண்டாக்ட் விபரங்களை சில நொடியில் எடுக்கலாமா?

  முழு காண்டாக்ட் விபரங்களை சில நொடியில் எடுக்கலாமா?

  இப்போது, இந்த ஆட்டோ சிங்க் (auto sync) என்ற ஆப்ஷனை நீங்கள் ஆன் செய்வதன் மூலம் உங்கள் போனில் நீங்கள் சேவ் செய்யும் அணைத்து மொபைல் நம்பர்களும் உங்கள் கூகிள் கணக்குடன் இணைக்கப்படும்.

  இனி தெரியாமலோ அல்லது தெரிந்தோ உங்கள் போனில் இருந்து ஒரு மொபைல் நம்பரை நீங்கள் டெலிட் செய்துவிட்டால், அதை முழு காண்டாக்ட் விபரங்களுடன் நீங்கள் சில நொடிகளில் மீட்டெடுக்க முடியும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

  டெலீட் செய்யப்பட்ட மொபைல் நம்பரை ரெஸ்டோர் செய்ய இதை செய்யுங்கள்.!

  டெலீட் செய்யப்பட்ட மொபைல் நம்பரை ரெஸ்டோர் செய்ய இதை செய்யுங்கள்.!

  சரி, இப்போது நீங்கள் சேவ் செய்யும் மொபைல் எண்களை சிங்க் செய்துவிட்டோம். இப்போது உங்கள் ஃபோனில் இருந்து டெலிட் செய்யப்பட்ட எண்ணெய் எப்படி மீட்டெடுக்கலாம் என்பதை பார்க்கலாம்.

  • இதை செய்வதற்கு நீங்கள், உங்களுடைய கூகுள் குரோம் ஆப்ஸ் உள்ளே செல்ல வேண்டும்.
  • பின்பு அதில் கூகுள் என்று டைப் செய்து கிளிக் செய்ய வேண்டும்.
  • பிறகு அந்தப் பக்கத்தின் வலது மேல் மூலையில் 9 புள்ளிகள் இருப்பது போன்ற ஐகான் காண்பிக்கப்படும்.
  • உங்க போன் அடிக்கடி சூடாகிறதா? அப்போ இதெல்லாம் தான் காரணம்.! உடனே மாத்துங்க.!உங்க போன் அடிக்கடி சூடாகிறதா? அப்போ இதெல்லாம் தான் காரணம்.! உடனே மாத்துங்க.!

   இதை கிளிக் செய்ய மறக்காதீர்கள்.!

   இதை கிளிக் செய்ய மறக்காதீர்கள்.!

   • அதை கிளிக் செய்து, உங்களுக்கு காட்டப்படும் விருப்பங்களில் ஸ்க்ரோல் செய்ய வேண்டும்.
   • கீழே காண்பிக்கப்படும் காண்டாக்ட் (Contact) என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
   • பின்பு அங்கே தோன்றும் செட்டிங் ஐகானை கிளிக் செய்து அன்டு சேஞ்சஸ் (Undo changes) என்ற விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.
   • இறுதியாக காண்டாக்ட் (contact) என்பதை தேர்ந்தெடுத்து அன்டு (undo) என்பதை கிளிக் செய்ய வேண்டும். இப்பொழுது உங்கள் ஃபோனில் இதுவரை டெலிட் ஆன நம்பர்கள் எல்லாம் மீண்டும் ரெஸ்டோர் செய்யப்படும்.
   • இனி போனில் இருந்து காண்டாக்ட் டெலீட் செய்யப்பட்டாலும், ஆன்லைனில் இருக்கும்.!

    இனி போனில் இருந்து காண்டாக்ட் டெலீட் செய்யப்பட்டாலும், ஆன்லைனில் இருக்கும்.!

    அவ்வளவு தான் இனி உங்கள் போனில் இருந்து ஒரு காண்டாக்ட் விபரமோ அல்லது சேவ் செய்யப்பட்ட மொபைல் எண்களோ டெலீட் செய்யப்பட்டால் நீங்கள் கவலையடைய வேண்டாம்.

    இந்த முறையை பின்பற்றி உங்கள் போனில் இருந்து டெலீட் செய்யப்பட்ட நம்பர்களை சில நிமிடங்களில் நீங்கள் ரெஸ்டோர் செய்துகொள்ளலாம்.

    பிளாக் ஹோல் உள்ளே நீங்க சென்றால் என்ன ஆவீர்கள் தெரியுமா? அறிவியல் உண்மை இதான்.!பிளாக் ஹோல் உள்ளே நீங்க சென்றால் என்ன ஆவீர்கள் தெரியுமா? அறிவியல் உண்மை இதான்.!

Best Mobiles in India

English summary
How To Restore Deleted Phone Numbers From Your Stored Contact

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X