ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனினை ரூட் செய்யாமல் ஸ்டாக் செயலிகளை நீக்குவது எப்படி?

|

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனினை புதிதாக வாங்கும் போதே அவற்றில் சில செயலிகள் ஏற்கனவே இன்ஸ்டால் செய்யப்பட்டு இருக்கும். பெரும்பாலும் இதுபோன்ற செயலிகள் பயனற்றதாகவே இருக்கும். இவை ஸ்மார்ட்போனின் செயல்திறனை பாதித்து, அவை சீராக இயங்குவதை தடுப்பதோடு, அதிக மெமரியையும் பயன்படுத்திக் கொள்கிறது. ஸ்மார்ட்போனை ரூட் செய்யாமல் இதுபோன்ற செயலிகளை நீக்க முடியாது. ஸ்டாக் செயலிகளை ரூட் செய்யாமலேயே நீக்குவது எப்படி என்பது பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

ஆண்ட்ராய்டு போனை ரூட் செய்யாமல் ஸ்டாக் செயலிகளை நீக்குவது எப்படி?

வழிமுறை 1: ஆண்ட்ராய்டு செட்டிங் பயன்படுத்துவது

1 - செட்டிங் செல்ல வேண்டும்

2 - செயலிகளை தேர்வு செய்ய வேண்டும்

3 - இனி அப்ளிகேஷன் மேனேஜர் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்

4 - சில செயலிகளில் அன்-இன்ஸ்டால் செய்யக் கோரும் ஆப்ஷன் இருக்காது. இதனால் ஃபோர்ஸ் ஸ்டாப் அம்சத்தை பயன்படுத்தி பின் டிசேபில் ஆப்ஷனை க்ளிக் செய்யவும்.

இவ்வாறு செய்ததும் ஸ்டாக் செயலி சாதனத்தில் இருந்து நீக்கப்பட்டுவிடும். இதே வழிமுறையை பயன்படுத்தி ஆண்ட்ராய்டு சாதனத்தில் உள்ள மற்ற ஸ்டாக் செயலிகளையும் நீக்க முடியும். ஒருவேளை செயலி முழுமையாக நீக்கப்படவில்லை என்பதை உணர்ந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பயன்படுத்தலாம்.

ஆண்ட்ராய்டு போனை ரூட் செய்யாமல் ஸ்டாக் செயலிகளை நீக்குவது எப்படி?

வழிமுறை 2: டி-புளோட்டர் பயன்படுத்துவது

1 - இந்த வழிமுறையில் நீங்கள் டெவலப்பர் ஆப்ஷனை எனேபில் செய்ய வேண்டும். இதனை செயல்படுத்த செட்டிங் -- அபவுட் போன் ஆப்ஷனில் உள்ள பில்டு நம்பரை ஏழு முதல் பத்து முறை தொடர்ந்து க்ளிக் செய்ய வேண்டும். இவ்வாறு செய்ததும் டெவலப்பர் ஆப்ஷன் செயல்படுத்தப்பட்டு விடும்.

2 - எனேபில் செய்ததும், டெவலப்பர் ஆப்ஷனை செட்டிங் ஸ்கிரீனில் பார்க்க முடியும். இனி கீழ்புறம் ஸ்கிரால் செய்து யு.எஸ்.பி. டீபக்கிங் சென்று எனேபில் செய்ய வேண்டும்.

3 - இனி டி-புளோட்டர் டூலினை விண்டோஸ் கணினியில் சர்ச் செய்து, அதனை டவுன்லோடு மற்றும் இன்ஸ்டால் செய்ய வேண்டும். சாதனத்தில் இருந்து செயலியை நீக்க இது பயனுள்ளதாக இருக்கும். இனி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனினை யு.எஸ்.பி. கேபிள் மூலம் கணினியில் இணைக்க வேண்டும். அடுத்து கணினி உங்களது சாதனத்தை கண்டறியும் வரை காத்திருக்க வேண்டும். பின் டி-புளோட்டர் மென்பொருள் எச்சரிக்கை குறுந்தகவலை வழங்கும்.

4 - அடுத்து இடதுபுறத்தில் உள்ள ரீட் போன் பேக்கேஜஸ் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இவ்வாறு செய்ததும் ஸ்மார்ட்போனில் உள்ள அனைத்து செயலிகலும் ரீட் ஆகும்.

5 - அடுத்து செயலிகளின் பட்டியலை நீங்கள் பார்க்க முடியும். அவை பிளாக் மற்றும் நாட்-பிளாக்டு என குறிப்பிடப்பட்டிருக்கும்.

6 - நீங்கள் நீக்க விரும்பும் செயலிகளை தேர்வு செய்து அப்ளை பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். இதேபோன்று நீக்க வேண்டிய மற்ற செயலிகளையும் எளிதில் நீக்கிட முடியும்.

நீக்கிய செயலிகளை திரும்பப் பெற செயலிகளை அன்-செலக்ட் செய்ய வேண்டும். இதே போன்று ஸ்மார்ட்போனில் உள்ள தேவையற்ற செலிகளை நீக்கிவிடலாம்.

ஆண்ட்ராய்டு போனை ரூட் செய்யாமல் ஸ்டாக் செயலிகளை நீக்குவது எப்படி?

வழிமுறை 3: ஏடிபி பயன்படுத்துவது

1 - முதலில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் ஆப் செலக்டர் செயலியை டவுன்லோடு மற்றும் இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

2 - அடுத்து ஆண்ட்ராய்டு டீபக் பிரிட்ஜ் மென்பொருளை கணினியில் இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

3 - ஆண்ட்ராய்டு சாதனத்தில் உள்ள ஆப் இன்ஸ்பெக்ஷன் செயலியை சர்ச் செய்து ஆப் லிஸ்ட் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

4 - நீங்கள் நீக்க விரும்பும் செயலியை தேர்வு செய்து கொண்டு ஆப் பாத் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

5 - இனி ஆண்ட்ராய்டு சாதனத்தை கணினியில் இணைத்து டிரான்ஸ்ஃபர் ஃபைல்ஸ் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

6 - அடுத்து கமாண்ட் பிராம்ப்ட் ஆப்ஷன் சென்று adb devices என்டர் செய்ய வேண்டும்.

7 - இனி adb shell என டைப் செய்து ஷெல் மோடிற்கு செல்ல வேண்டும்.

8 - செயலியை அன்-இன்ஸ்டால் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள கமாண்ட்களை டைப் செய்ய வேண்டும்.

கமாண்ட் பிராம்ப்டில் pm uninstall -k --user 0 என டைப் செய்ய வேண்டும்.

இங்கு நீங்கள் நான்காவது வழிமுறையில் குறித்து வைத்த ஆப் பாத்தினை மாற்ற வேண்டும். இவ்வாறு செய்ததும் கமாண்ட் பிராம்ப்டில் செயலி நீக்கப்பட்டதை உறுதிப்படுத்தும் தகவல் தெரியும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
How To Remove Stock Apps In Android Without Rooting: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X