அடிக்கடி டிவிட்டர் பயன்படுத்தும் பயனர்களுக்கு ஒரு சூப்பர் டிப்ஸ்.!

|

ட்விட்டர் நிறுவன தலைமை செயல் அதிகாரி ஜாக் டார்சியின் அக்கவுண்ட் சில மாதங்களுக்கு முன் ஹேக் செய்யப்பட்டது. விரைவில் அவரது ட்விட்டரில் பல்வேறு அவதூறு கருத்துக்கள் பகிரப்பட்டன. அதன் பின்னரே அவரது ட்விட்டர் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டதை உலகம் அறிந்து கொண்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும் முன் டார்சியின் அக்கவுண்ட் காவு வாங்கப்பட்டுவிட்டது.

அடிக்கடி டிவிட்டர் பயன்படுத்தும் பயனர்களுக்கு ஒரு சூப்பர் டிப்ஸ்.!

அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்ட சிறிது நேரத்தில் அவரது அக்கவுண்ட் மீட்கப்பட்டு விட்ட போதும், மீட்பதற்குள் அக்கவுண்ட் பாழாக்கப்பட்டுவிட்டது. சமீப காலங்களில் சமூக வலைதளங்களை ஹேக் செய்வது வாடிக்கையான காரியமாகி விட்டது. அவ்வாறு கடந்த ஆண்டு சுமார் ஐந்து கோடி ஃபேஸ்புக் அக்கவுண்ட்கள் ஹேக் செய்யப்பட்டு, பயனர் விவரங்கள் டார்க் வெப் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டன.

இதேபோன்று ஹூவாய் மொபைலின் பிரேசில் ட்விட்டர் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டது. ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் அக்கவுண்ட்கள் ஹேக் செய்யப்படும் சம்பவங்கள் மிகவும் இயல்பான ஒன்றாகிவிட்டது.

இணையம் முழுக்க சமூக வலைதள அக்கவுண்ட்களை பாதுகாக்கும் வழிமுறைகள் நிறைந்து இருக்கின்றன. அந்த வகையில் சமூக வலைதள அக்கவுண்ட்டினை பாதுகாக்கும் பொதுவான வழிமுறைகளில் ஒன்றாக அனைத்து சாதனங்கள் மற்றும் பொது சாதனங்களில் இருந்து லாக் அவுட் செய்ய வேண்டும்.

அடிக்கடி டிவிட்டர் பயன்படுத்தும் பயனர்களுக்கு ஒரு சூப்பர் டிப்ஸ்.!

அனைத்து சாதனங்களில் இருந்து லாக் அவுட் செய்வது அக்கவுண்ட்டினை பாதுகாக்கும் பல்வேறு வழிமுறைகளில் முதன்மையானதாக இருக்கிறது. ட்விட்டர் தளம் அதிகம் பயன்படுத்தப்படும் சமூக வலைதளங்களில் முதன்மையான ஒன்றாக இருக்கிறது. ட்விட்டர் தளத்தை சுமார் 30 கோடி பேர் உலகம் முழுக்க பயன்படுத்தி வருகின்றனர்.

ஹேக்கர்களிடம் இருந்து அக்கவுண்ட்டினை பாதுகாக்க ட்விட்டரில் பிரத்யேக வலைபக்கம் உள்ளது. சமயங்களில் பொது சாதனம் ஒன்றில் ட்விட்டரை லாக் இன் செய்து அதனை லாக் அவுட் செய்ய மறந்தால் என்ன செய்வது? ட்விட்டர் அக்கவுண்ட்டில் இருந்து ரிமோட்லி லாக் அவுட் செய்வது எப்படி என தொடர்ந்து பார்ப்போம்.

அடிக்கடி டிவிட்டர் பயன்படுத்தும் பயனர்களுக்கு ஒரு சூப்பர் டிப்ஸ்.!

-- மொபைல் போன் அல்லது லேப்டாப்பில் ட்விட்டர் அக்கவுண்ட்டில் லாக் இன் செய்ய வேண்டும்.


-- செட்டிங்ஸ் மற்றும் பிரைவசி ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.


-- அக்கவுண்ட் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.


-- செயலி மற்றும் செஷன்ஸ் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.


-- இனி உங்களது ட்விட்டர் அக்கவுண்ட் பயன்படுத்தப்பட்டு இருக்கும் செயலிகளின் விவரங்கள் பட்டியலிடப்பட்டு இருக்கும். ட்விட்டர் ஆக்டிவ் மோடில் இருக்கும் அனைத்து சாதனங்களும் இங்கு காணப்படும். இனி லாக் அவுட் ஆப்ஷனை க்ளிக் செய்தால், அனைத்து சாதனங்களில் இருந்தும் ட்விட்டர் லாக் அவுட் செய்யப்பட்டுவிடும்.

Best Mobiles in India

English summary
how to remotely logout from your Twitter account : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X