அதிரடியான திட்டங்களுடன் ஜியோ பைபர் முன்பதிவு துவங்கியது!

|

ஜியோ பைபர் என்பது ரிலையன்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனம் அறிமுகப்படுத்திய சமீபத்திய சேவையாகும். 5 ஜூலை 2018 வியாழக்கிழமை நடைபெற்ற ரிலையன்ஸ் நிறுவனத்தின் 41 வது ஆண்டு கூட்டத்தின் போது ஜியோ ஃபைபர் ஆன்லைன் மற்றும் முன்பதிவு சேவைகளின் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

ஜியோ பைபர் விபரம்

ஜியோ பைபர் விபரம்

ஜியோ ஃபைபர் நாடு முழுவதும் சிறந்த பிராட்பேண்ட் சேவைகளை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சோதனை அடிப்படையில் ஏற்கனவே சில முக்கிய நகரங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுவரும் நிலையில், இதன் சேவைகள் மிகவும் சிறப்பாக செயல்படுகின்றன. ஜியோ ஃபைபர் வெளியீட்டு தேதி, விலை விவரங்கள் மற்றும் திட்டங்களைப் பற்றிய முழுமையான தகவல்களை இங்கே காணலாம்.

 ஆன்லைனில் விண்ணப்பித்தல் எப்படி?

ஆன்லைனில் விண்ணப்பித்தல் எப்படி?

ஜியோ ஃசேவை சோதனை ஓட்டமாக ஏப்ரல் 2018ல் ஹைதராபாத், விசாகப்பட்டினம், சென்னை, புனே, பெங்களூர், டெல்லி மற்றும் சில முக்கிய நகரங்களில் தொடங்கப்பட்டது. இந்த சேவை ஆரம்பத்தில் நாட்டின் 1000 க்கும் மேற்பட்ட நகரங்களுக்கு விரைவில் கிடைக்கும். பின்னர் இந்தியா முழுவதும் விரிவுபடுத்தி வழங்கப்படும்.

முன்பதிவு துவங்கியது

முன்பதிவு துவங்கியது

ஜியோ ஜிகாஃபைபர் சேவைக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான பதிவு செயல்முறை நேற்று முதல் துவங்கியுள்ளது. இதற்கிடையில் கட்டுரையின் முடிவில் உள்ள படிவத்தை நிரப்புவதன் மூலம் உங்கள் விருப்பத்தை பதிவு செய்யலாம்.

பிராட்பேண்ட் சேவை எப்போது துவங்கும்?

பிராட்பேண்ட் சேவை எப்போது துவங்கும்?

ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆண்டு கூட்டத்தின் போது ஜியோ பைபர் சேவையுடன் ஜியோபோன் 2 முன்பதிவு, ஜியோ மான்சூன் ஹங்காமா திட்டம் உள்ளிட்ட பல சேவைகள் மற்றும் திட்டங்களை தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இருப்பினும், ஜியோ ஃபைபர்-க்கு விண்ணப்பிக்க ஆன்லைன் சேவை ஜூலை இறுதியில் தொடங்கும் என கூறப்படுகிறது.

வெள்ளோட்டம் நடத்தப்பட்டது

வெள்ளோட்டம் நடத்தப்பட்டது

3 மாதங்களுக்கு பொதுமக்களுக்கான முன்னோட்டத்திற்காக ரிலையன்ஸ் பிராட்பேண்ட் சேவைகள் தொடங்கப்பட்டன. ரிலையன்ஸ் இணைய சேவைகளை வழங்க அவர்கள் பயன்படுத்தும் ஃபைபர் கேபிள்களின் உதவியுடன் அதிவேக இணைய இணைப்பு சேவையை வழங்கவுள்ளனர்.

 லேண்ட்லைன் சேவையையும் அறிமுகம்

லேண்ட்லைன் சேவையையும் அறிமுகம்

எப்டிடிஎச் பிராட்பேண்ட் இணைப்போடு டி.டி.எச் சேவை மற்றும் லேண்ட்லைன் சேவையையும் ஜியோ அறிமுகப்படுத்துகிறது. இந்த மூன்று சேவைகளையும் ஒரே ஒற்றை இணைப்பில் பெற முடியும்.

ஜியோ ஃபைபர் விலை விகிதங்கள் மற்றும் திட்டங்கள் 3 வெவ்வேறு பகுதிகளாக வேறுபடுகின்றன. பயனர்கள் தங்களது தனிப்பட்ட தேவை மற்றும் பட்ஜெட்டின் படி பல்வேறு திட்டங்களிலிருந்து ஒன்றை தேர்ந்தெடுக்கலாம். திட்டங்களின் விரிவான விவரங்கள் கீழே உள்ளன

வேகத்தின் அடிப்படையில் திட்டங்கள்

வேகத்தின் அடிப்படையில் திட்டங்கள்

* 30 நாட்களுக்கு 50 Mbps வேகத்தில் 2000GB இணையதரவுகள் ரூ1500 என்ற விலையில் ஆரம்பித்து 600Mbps வேகத்தில் 300GB இணையதரவுகள் ரூ5500 என்ற விலை வரை கிடைக்கின்றன.

 டேட்டா அடிப்படை திட்டங்கள்

டேட்டா அடிப்படை திட்டங்கள்

ஒரு நாளைக்கு 5GB இணையம் என 30நாளைக்கு அளவில்லா வேகத்தில் ரூ1000 என்ற விலையில் ஆரம்பிக்கும் திட்டம். ஒரு நாளைக்கு 60GB இணையம் என 30 நாளைக்கு அளவில்லா வேகத்தில் ரூ5500 என்ற விலை வரை கிடைக்கிறது.

பிராட்பேண்ட் சிறப்பு திட்டங்கள்

பிராட்பேண்ட் சிறப்பு திட்டங்கள்

விலைக்கு ஏற்றவாறு நமக்கு தேவையான வேகத்தில் தேவையான அளவு இணைய தரவுகளை வழங்கும் பல்வேறு திட்டங்கள் இதில் உள்ளன. ஆன்லைனில் பதிவுசெய்தால் விலை?

சிறந்த ஜியோ பிராட்பேண்ட் இணைப்பை அனுபவிக்க, நீங்கள் ஒரு முறை கட்டணமாக ரூ .4,500 செலுத்த வேண்டும். இதற்காக நீங்கள் 90 நாட்களுக்கு சேவைகளை முற்றிலும் இலவசமாகப் பெறுவீர்கள்.

 விண்ணப்பிப்பது எப்படி?

விண்ணப்பிப்பது எப்படி?

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள கட்டணங்கள் மற்றும் திட்டங்கள் நிறுவனத்தால் இறுதி செய்யப்படவுள்ள திட்டத்திலிருந்து வேறுபட்டிருக்கலாம்.


இந்த சேவைகளுக்கு விண்ணப்பிக்க இரண்டு எளிய வழிகள் உள்ளன. முதலாவது, ஜியோ ஃபைபர் பிராட்பேண்டிற்கான ஜியோ அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உங்கள் விருப்பத்தை ஆன்லைனில் பதிவுசெய்வது மற்றும் மற்றொன்று நீங்கள் ஜியோ ஸ்டோருக்கு செல்ல வேண்டும். இரு முறைகளிலும், நீங்கள் ஒரு படிவத்தை பூர்த்தி செய்து நீங்கள் விரும்பும் திட்டங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

 தேவையான ஆவணங்கள்

தேவையான ஆவணங்கள்

இந்த இணைப்பை பெற ஆதார் அட்டையின் நகலை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும். ஆவணங்கள் மற்றும் படிவத்தை சமர்ப்பித்த பிறகு, நீங்கள் இணைப்பைப் பெறும் தேதி குறித்த தகவலை பெறுவீர்கள். உங்கள் நகரத்தில் சேவைகள் ஏற்கனவே தொடங்கப்பட்டிருந்தால், அதற்கு அதிக நேரம் எடுக்காது.

ஆன்லைப் ஆப் லைனில் சமர்ப்பித்தல்

ஆன்லைப் ஆப் லைனில் சமர்ப்பித்தல்

ஆஃப்லைன் அல்லது ஆன்லைன் எதுவாக இருந்தாலும், இணைப்பை பெற விண்ணப்பிக்க, நீங்கள் சில ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். அதன் விவரங்கள் பின்வருமாறு: -


*இரண்டு வண்ண பாஸ்போர்ட் அளவு புகைப்படம்

*ஆதார் அட்டை சமர்ப்பிப்பது கட்டாயமாகும்

* முகவரி ஆதாரத்தையும் வழங்க வேண்டும்

*நீங்கள் ஆன்லைனில் இ-கே.ஒய்.சி செயல்படுத்தலையும் பயன்படுத்தலாம்.

Best Mobiles in India

English summary
how to register for the jio giga fiber broadband service : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X