Home
How to

Jio கஸ்டமர்கள் காட்டில் மழை.. ரூ.349 பிளானில் ரூ.35,100 கூகுள் Gemini Pro.. 18 மாதம் இலவசம்.. பெறுவது எப்படி?

இதுதான் "உண்மையான கூட்டணி" என்று கூறும்படியாக.. சுந்தர் பிச்சை (Sundar Pichai) தலைமையிலான கூகுள் (Google) நிறுவனமும், முகேஷ் அம்பானி (Mukesh Ambani ) தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனத்தின் கீழ் இயங்கும் ரிலையன்ஸ் இன்டலிஜென்ஸும் (Reliance Intelligence) கூட்டு சேர்ந்து உள்ளது.

இந்தியாவில் உள்ள பெரும்பாலான மக்களுக்கு அதன் மிகவும் அட்வான்ஸ்டு ஏஐ டூல்களை (Advanced AI Tools) கிடைக்க செய்வதற்காக, கூகுள் நிறுவனமானது ரிலையன்ஸ் இன்டலிஜென்ஸுடன் கூட்டு சேர்ந்துள்ளது. இந்த புதிய கூட்டாண்மையின் ஒரு பகுதியாக, ஜியோ அன்லிமிடெட் 5ஜி பிளான்களை ரீசார்ஜ் செய்துள்ள கஸ்டமர்களுக்கு 18 மாதங்களுக்கான கூகுள் ஏஐ ப்ரோ திட்டம் (Google AI Pro plan) இலவசமாக கிடைக்கும்.

Jio கஸ்டமர்கள் காட்டில் மழை.. கூகுள் Gemini Pro.. 18 மாதம் இலவசம்!

கூகுளின் கூற்றுப்படி, இந்த கூட்டாண்மையின் கீழ் இலவசமாக வழங்கப்படும் நன்மைகளை தனித்தனியாக வாங்கினால் சுமார் ரூ.35,100 செலவாகும். நினைவூட்டும் வண்ணம் ஜியோ 5ஜி அன்லிமிடெட் திட்டங்கள் (Jio Unlimited 5G Plans) ரூ.350 முதல் (சரியாக சொல்ல வேண்டும் என்றால் ரூ.349 திட்டம் முதல்) தொடங்குகிறது.

இலவசமாக கூகுள் ஏஐ ப்ரோ திட்டத்தில் லேட்டஸ்ட் ஜெமினி 2.5 ப்ரோ (Gemini 2.5 Pro Model) மாடலும் அடங்கும். முதலில் இந்த இலவச சலுகை ஆனது 18 முதல் 25 வயதுடைய ஜியோ பயனர்களுடன் தொடங்கும். பின்னர் நாடு முழுவதும் உள்ள அனைத்து தகுதியான ஜியோ வாடிக்கையாளர்களையும் உள்ளடக்கும் வகையில் விரிவடையும்.

கூகுளின் மிகவும் திறமையான ஏஐ ஆனது ஜியோ திட்டங்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதன் விளைவாக - ஜியோ பயனர்கள் ஜெமினி ஆப்பின் (Gemini App) மூலம் கூகுளின் மிகவும் சக்திவாய்ந்த ஏஐ அம்சங்களில் சிலவற்றை நேரடியாக பயன்படுத்தலாம். முன்னரே குறிப்பிட்டபடி, சிக்கலான பகுத்தறிவு, டெக்ஸ்ட் உருவாக்கம் மற்றும் ஆக்கப்பூர்வமான பணிப்பாய்வுகளுக்காக வடிவமைக்கப்பட்ட கூகுளின் ஜெனரேட்டிவ் ஏஐ மாடலின் மிகவும் திறமையான வெர்ஷன் ஆன ஜெமினி 2.5 ப்ரோவையும் சந்தாதாரர்கள் பயன்படுத்த முடியும்.

சாட் மற்றும் ப்ரொடெக்டிவிட்டிக்கு அப்பால், உயர்தர இமேஜ்கள் மற்றும் வீடியோக்களை உருவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட கூகுளின் இரண்டு கிரியேட்டிவ் ஏஐ மாடல்கள் ஆன நானோ பனானா (Nano Banana) மற்றும் வியோ 3.1 (Veo 3.1) ஆகியவற்றையும் கூட ஜியோ பயனர்கள் அணுகலாம். முன்னதாக கூகுள் சந்தாக்கள் மூலம் மட்டுமே கிடைத்த இந்த டூல்கள், இப்போது கூடுதல் கட்டணமின்றி ஜியோவின் 5ஜி திட்டங்களில் இணைக்கப்பட்டுள்ளன.

கடைசியாக இலவசமாக கிடைக்கும் கூகுள் ஏஐ ப்ரோ திட்டத்தில் கூகுள் ஏஐ-பவர்டு நோட்-டேக்கிங் மற்றும் ரிசர்ச் கம்பானியன் ஆன நோட்புக்எல்-எம்-க்கான (NotebookLM) விரிவாக்கப்பட்ட அணுகலும் கிடைக்கும். இது பயனர்கள் ஸ்டடி மெட்டீரியல்களை ஒழுங்கமைக்கவும், ஆவணங்களை ஆட்டோமெட்டிக் ஆக சம்மரைஸ் செய்யவும் உதவும்.

முன்னரே குறிப்பிட்டபடி ரூ.35,100 மதிப்புள்ள இந்த திட்டத்தின் கீழ் ஏஐ டூல்களுடன், தகுதியான பயனர்கள் கூகுள் போட்டோஸ், ஜிமெயில் மற்றும் டிரைவ் முழுவதும் 2டிபி கிளவுட் ஸ்டோரேஜையும் பகிர்ந்து கொள்வார்கள். மேலும் ஆண்ட்ராய்டில் வாட்ஸ்அப் சாட்களுக்கான பேக்கப் ஆதரவும் கிடைக்கும். இந்த சலுகை மைஜியோ (MyJio) ஆப் மூலம் கிடைக்கும்.

இலவச கூகுள் ஜெமினி ப்ரோவை பெறுவதற்கு ரிஜிஸ்டர் செய்வது எப்படி?
- உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள மைஜியோ ஆப்பை திறக்கவும்.
- ஹோம்ஸ் ஸ்க்ரீனில் "ப்ரோ பிளான் ஆஃப் கூகுள் ஜெமினி ஃப்ரீ" (Pro plan of Google Gemini FREE) என்று கூறும் பேனரை தேடுங்கள்.
- பின்னர் "ரிஜிஸ்டர் இன்ட்ரெஸ்ட் (Register interest) என்பதை கிளிக் செய்யவும்
- உங்கள் கோரிக்கை பெறப்பட்டதாக உறுதிப்படுத்தும் மெசேஜை நீங்கள் காண்பீர்கள்.
- உங்கள் இலவச ஜெமினி ப்ரோ அணுகல் எப்போது தொடங்குகிறது என்பது குறித்த விவரங்களை ஜியோ நிறுவனம் விரைவில் அறிவிக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
How to Register for Free Google Gemini Pro For 18 Months Via MyJio App If you Are a Jio 5G Plan User
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X