Just In
- 11 hrs ago
செவ்வாய் கிரகத்தில் சத்தமில்லாமல் புதிய சாதனை படைத்த நாசா.! எப்படி தெரியுமா?
- 11 hrs ago
ஹீலியோ ஜி70 எஸ்ஓசி செயலியுடன் டெக்னோ ஸ்பார்க் 7பி அறிவிப்பு!
- 13 hrs ago
அசத்தலான அம்சங்கள்: அலெக்சா ஆதரவோடு அறிமுகமான செகண்ட் ஜென் அமேசான் ஃபயர் டிவி க்யூப்!
- 13 hrs ago
ரூ.14,999-விலையில் அசத்தலான ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.! முழு விவரங்கள்.!
Don't Miss
- News
பாளையங்கோட்டை சிறையில்.. கைதிகளுக்கு இடையே பயங்கர மோதல்.. ஒருவர் உயிரிழப்பு
- Sports
இன்னா அடி... விராட் -படிக்கல் அதிரடி... சிக்ஸ், பவுண்டரியால் அதிர்ந்த மைதானம்... சிறப்பான வெற்றி!
- Finance
இந்தியாவிற்கு உதவிய பைசர் நிறுவனப் பங்குகள் 5% சரிவு.. என்ன நடக்கிறது..?!
- Automobiles
மஹிந்திரா தாரை டெலிவிரி எடுத்த இளம் இந்திய கிரிக்கெட் வீரர்!! ஆனந்த் மஹிந்திராவின் அன்பளிப்பு!
- Movies
என் பிறந்த நாள் மறக்க முடியாததாக மாறியது… ரத்னகுமாரின் மலரும் நினைவுகள்!
- Lifestyle
மீண்டும் உருமாறிய கொரோனா... உச்சக்கட்ட ஆபத்தில் இந்தியா... உயிரைக் காப்பாற்றிக்கொள்ள என்ன செய்யணும்?
- Education
ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் பொதுத்துறையில் கொட்டிகிடக்கும் வேலை வாய்ப்புகள்!!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
தமிழ்நாட்டில் 2ம் கட்ட கொரோனா தடுப்பூசிக்கு எப்படி ஆன்லைனில் முன்பதிவு செய்வது?
தமிழ்நாட்டில் 2ம் கட்ட கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நேற்று முதல் துவங்கி மும்முரமாகச் செயல்பாட்டில் இருக்கிறது. இந்த இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசி, 60 வயதுக்குட்பட்டவர்கள் மற்றும் இணை நோய்கள் உள்ள 45 வயதிற்குப்பட்டவர்களுக்கு மட்டுமே போடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதை நீங்கள் கோவின் ஆப்ஸ் மூலமாகவோ அல்லது இணையதளத்தின் வழியாகவோ முன்பதிவு செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 2ம் கட்ட கொரோனா தடுப்பூசி
தமிழ்நாட்டில் 2ம் கட்ட கொரோனா தடுப்பூசியை எப்படி ஆன்லைனில் மூலம் முன்பதிவு செய்து, பெறுவது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளுங்கள். கோவின் ஆப்ஸ் மூலம் பொதுமக்கள் கொரோனா தடுப்பூசிக்காக முன்பதிவு செய்லாம் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. ஆனால், சிலருக்கு ஆப்ஸ் மூலம் முன்பதிவு செய்யும் பொழுது OTP எண்கள் செல்போன் எண்களுக்கு வருவதில்லை என்று புகார் எழுந்துள்ளது.

கோவின் ஆப்ஸ் தற்காலிக லாக்
இதனால், தற்சமயம் கோவின் ஆப்ஸ் தற்காலிகமாக லாக் செய்யப்பட்டுள்ளது. இதற்குப் பதிலாக கொரோனா தடுப்பூசி போட விரும்பும் பொதுமக்கள், கொரோனா தடுப்பூசிக்காகப் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட கோவின் இணையதளம் http://cowin.gov.in வழியாக முன்பதிவு செய்து தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இணையப் பக்கம் வழியில் எப்படி கொரோனா தடுப்பூசியை முன்பதிவு செய்வது என்று பார்க்கலாம்.
மர்மமான முறையில் கிடந்த 41 கிலோ மெட்டல் பந்து: கடற்கரையில் கண்டுபிடித்த பெண்- அதில் இருந்த எழுத்து!

எப்படி கொரோனா தடுப்பூசியை ஆன்லைனில் முன்பதிவு செய்வது?
- முதலில் நீங்கள் http://cowin.gov.in இணையதளத்தை ஓபன் செய்ய வேண்டும்.
- பின்னர் உங்களின் மொபைல் எண்ணை டைப் செய்து GET OTP கிளிக் செய்யுங்கள்.
- உங்கள் மொபைல் எண்ணிற்கு வந்த OTP எண்களை அடுத்த பக்கத்தில் டைப் செய்து verify கிளிக் செய்யுங்கள்.

45 வயது முதல் 60 வயதிற்குள்
- உங்களின் ஆதார் அட்டை விபரம் அல்லது டிரைவிங் லைசன்ஸ் விபரம் அல்லது போட்டோ ஐடி-க்கான விபரங்களை உள்ளிடுங்கள்.
- நீங்கள் பதிவு செய்ய விரும்பும் நபர் 45 வயது முதல் 60 வயதிற்குள் இருப்பது கட்டாயம்.
- உங்களுக்குக் கட்டப்படும் அக்கௌன்ட் டீடெயில்ஸ் பக்கத்தில் கூடுதலாக 4 நபர்களை நீங்கள் இணைத்துக்கொள்ளலாம்.
வாட்ஸ்அப் to சோசியல் மீடியா: அரசின் அறிவிப்பால் இந்தியர்களுக்கு ஏற்படும் அடுத்த 'பிரைவசி' சிக்கல்..

அப்பாயின்மென்ட் புக் செய்வது எப்படி?
- ஒரு மொபைல் எண்ணின் கீழ் 4 நபர்கள் மட்டுமே பதிவு செய்ய முடியும் என்பதை மறக்க வேண்டாம்.
- பெயர்களை உள்ளிட்ட பின்னர் Action கிளிக் செய்து, calendar ஐகானை கிளிக் செய்யுங்கள்.
- Book Appointment for Vaccination பக்கத்தில் மாநில / யூடி, மாவட்டம், தொகுதி மற்றும் பின்கோடு போன்ற விவரங்களை உள்ளிடவும்.

தடுப்பூசி மையத்தைத் தேர்வு செய்ய
- பின்னர் சர்ச் கிளிக் செய்து, உங்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள தடுப்பூசி மையத்தைத் தேர்வு செய்யுங்கள்.
- உங்கள் வசதிக்கு ஏற்ப தேதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்யுங்கள்.
- அவ்வளவு தான் இறுதியாக Confirm கிளிக் செய்து, Appointment Successful என்று வரும் வரை காத்திருங்கள்.

உஷாராக இருப்பது நல்லது
அதேபோல், உங்கள் மெயில் ஐடி அல்லது உங்கள் மொபைல் எண்ணிற்கு கொரோனா தடுப்பூசி எளிமையாக பெற இந்த டோக்கனை பயன்படுத்துங்கள் என்று தெரியாத நபர்களிடமிருந்து செய்தி வந்தால் அதை நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது. குறிப்பாக பணம் கேட்கும்பட்சத்தில் அந்த செய்திகளை நிராகரிப்பது மிகவும் நல்லது. தனியார் மருதிவமனைகளில் கொரோனா தடுப்பூசி ரூ.250 விலைக்குள் கிடைக்கிறது.
-
54,535
-
1,19,900
-
54,999
-
86,999
-
49,975
-
49,990
-
20,999
-
1,04,999
-
44,999
-
64,999
-
20,699
-
49,999
-
11,499
-
54,999
-
7,999
-
8,980
-
17,091
-
10,999
-
34,999
-
39,600
-
25,750
-
33,590
-
27,760
-
44,425
-
13,780
-
1,25,000
-
45,990
-
1,35,000
-
82,999
-
17,999