Google Pay, Paytm யூசர்களுக்கு RBI-யின் அலெர்ட்! உடனே செய்யணும்.. அப்போ தான் உங்க பணத்தை காப்பாற்ற முடியும்!

|

ஆர்பிஐ (RBI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவானது (Reserve Bank Of India), நாட்டில் உள்ள ஒவ்வொரு யுபிஐ பேமண்ட் ஆப் (UPI Payment App) பயனர்களும் - அதாவது கூகுள் பே (Google Pay), பேடிஎம் (Paytm), போன்பே (PhonePe) போன்ற ஆப்களை பயன்படுத்துபவர்கள் அனைவருமே ஒரு முக்கியமான விஷயத்தை தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறது!

அதென்ன விஷயம்? Google Pay, Paytm யூசர்கள் அப்படி எதை தெரிந்துகொள்ள வேண்டும்? அதை தெரிந்துகொண்ட பின்னர் என்ன செய்ய வேண்டும்? இதோ விவரங்கள்:

தற்செயலாக இருந்தாலும் சரி.. தவறாக இருந்தாலும் சரி!

தற்செயலாக இருந்தாலும் சரி.. தவறாக இருந்தாலும் சரி!

கூகுள் பே, பேடிஎம் போன்ற யுபிஐ பேமண்ட் ஆப்கள் வழியாக, தவறான மொபைல் நம்பருக்கோ அல்லது தவறான யுபிஐ ஐடிக்கோ பணம் அனுப்பிவிட்டால் அதை உடனடியாக மீட்டெடுப்பது எப்படி என்பதை பற்றி அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்று ஆர்பிஐ (RBI) நினைக்கிறது

ஒருவேளை தவறான நபருக்கு பணத்தை அனுப்பிவிட்டால்.. உடனே என்ன செய்ய வேண்டும் என்று உங்களுக்கு தெரியாது என்றால்.. இந்த கட்டுரை முழுக்க முழுக்க உங்களுக்கானது தான்!

YouTube செட்டிங்ஸ்-ல் ஒளிந்திருக்கும் ரீசெட் ஆப்ஷன்.. மாதத்திற்கு 1 முறை கிளிக் செய்வதால் இப்படி ஒரு நன்மையா?YouTube செட்டிங்ஸ்-ல் ஒளிந்திருக்கும் ரீசெட் ஆப்ஷன்.. மாதத்திற்கு 1 முறை கிளிக் செய்வதால் இப்படி ஒரு நன்மையா?

முதல் வேலையாக என்ன செய்ய வேண்டும்?

முதல் வேலையாக என்ன செய்ய வேண்டும்?

RBI (இந்திய ரிசர்வ் வங்கி) வழிகாட்டுதல்களின்படி, நீங்கள் ஒரு தவறான நபருக்கு பணம் அனுப்பிவிட்டால், நீங்கள் செய்ய வேண்டிய முதல் வேலை - குறிப்பிட்ட ஆப்பின் கஸ்டமர் கேர்-ஐ அணுகி, அது தொடர்பான புகாரை அளிக்க வேண்டும்.

அதாவது கூகுள் பே அல்லது பேடிஎம் அல்லது போன்பே-வின் கஸ்டமர் கேர்-ஐ அணுகி, தவறான எண்ணிற்கு / தவறான யுபிஐ ஐடிக்கு பணம் அனுப்பிவிட்டதாக கூறி, குறிப்பிட்ட சிக்கலை சரி செய்யுமாறும், இழந்த பணத்தை உடனே ரீஃபண்ட் (Refund) செய்யுமாறும் கேட்கலாம்.

கஸ்டமர் கேர் வழியாக உங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை என்றால், நீங்கள் உடனே செய்ய வேண்டிய இன்னொரு வேலையும் இருக்கிறது!

NPCI போர்ட்டல் வழியாக ஒரு புகாரை பதிவு செய்யவும்!

NPCI போர்ட்டல் வழியாக ஒரு புகாரை பதிவு செய்யவும்!

நீங்கள் பயன்படுத்தும் UPI ஆப்பின் வாடிக்கையாளர் சேவை மையமானது உங்கள் பணத்தை மீட்டுக்கொடுக்கவில்லை என்றால்.. நீங்கள் NPCI போர்ட்டலிலும் புகார் அளிக்கலாம். அதை செய்வது எப்படி என்கிற படிப்படியான வழிமுறைகள் இதோ:

- முதலில் NPCI-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான npci.org.in க்கு செல்லவும்

- அங்கே 'வாட் வி டூ' (What we do) என்கிற டேப்-ஐ கிளிக் செய்யவும்.

- அதனை தொடர்ந்து யுபிஐ (UPI) என்பதை கிளிக் செய்யவும்.

- பின்னர் டிஸ்பியூட் ரீஅட்ரசெல் மெக்கானிஸம் (Dispute Redressal Mechanism) என்கிற விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும்

அவஸ்தை படாதீங்க! வீட்டில் இருந்தபடியே மின் இணைப்பு (EB) எண்ணை ஆதார் உடன் இணைக்க ஒரு ஈஸியான வழி இருக்கு!அவஸ்தை படாதீங்க! வீட்டில் இருந்தபடியே மின் இணைப்பு (EB) எண்ணை ஆதார் உடன் இணைக்க ஒரு ஈஸியான வழி இருக்கு!

பாதி வேலை முடிந்தது!

பாதி வேலை முடிந்தது!

- இப்போது கம்ப்ளெயிண்ட் (Complaint) செக்ஷனின் கீழ் - யுபிஐ டிரான்ஸாக்ஷன் ஐடி, விர்ச்சுவல் பேமெண்ட் அட்ரெஸ், தவறுதலாக அனுப்பப்பட்ட தொகை, பரிவர்த்தனை செய்யப்பட்ட தேதி, மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண் உட்பட உங்களின் அனைத்து வகையான பரிவர்த்தனை விவரங்களையும் உள்ளிடவும்.

- மேலும் இந்த புகாருக்கான காரணம் 'தவறாக வேறொரு கணக்கிற்கு மாற்றப்பட்டது' (Incorrectly transferred to another account) என்று தேர்வு செய்யவும்

- கடைசியாக, உங்கள் புகாரை சமர்ப்பிக்கவும்; அவ்வளவு தான்!

எதுவுமே கைகொடுக்கவில்லை என்றால்?

எதுவுமே கைகொடுக்கவில்லை என்றால்?

சில, பல நாட்கள் கழிந்தும் கூட குறிப்பிட்ட புகார் தீர்க்கப்படாமல் இருந்தால், வாடிக்கையாளர்கள் தங்களது அக்கவுண்ட்டை பராமரிக்கும் வங்கியை அணுகலாம்.

மேலே உள்ள அனைத்து செயல்முறைகளையும் பின்பற்றிய பிறகும் கூட, உங்களுடைய புகார் தீர்க்கப்படாமல் இருந்தால், 30 நாட்களுக்கு பிறகு நீங்கள் வங்கி குறைதீர்ப்பாளரை (Banking Ombudsman) அல்லது டிஜிட்டல் புகார்களுக்கான குறைதீர்ப்பாளரை (Ombudsman for Digital Complaints) அணுகலாம்.

ரிசர்வ் வங்கியின் கூற்றுப்படி, உங்கள் புகாரை ஒரு சாதாரண தாளில் எழுதி, ஒம்புட்ஸ்மேனின் சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு, தபால் வழியாகவோ அல்லது நேரடியாக சென்றோ புகார் அளிக்கலாம்!

Best Mobiles in India

English summary
How To Refund The Money Which You Sent To Wrong UPI ID According To RBI Guidelines

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X