எவ்வித மென்பொருளும் இன்றி விண்டோஸ் 10 ஸ்கிரீனினை ரெக்கார்டு செய்வது எப்படி?

|

விண்டோஸ் 10 இயங்குதளத்தை நீண்ட காலம் பயன்படுத்தி இருந்தாலும், அதில் உள்ள பெரும்பான்மை அம்சங்கள் பற்றி பலரும் அறிந்திருக்கும் வாய்ப்புகள் குறைவே. இந்த தளத்தின் பெரும்பாலான அம்சங்கள் ரகசியமாகவே இருக்கின்றன. அவ்வாறான அம்சங்களில் ஒன்றாக எவ்வித மென்பொருள் இன்றி ஸ்கிரீனினை ரெக்கார்டு செய்யும் வசதி இருக்கிறது. பெரும்பாலும் ஸ்கிரீனினை ரெக்கார்டு செய்ய மூன்றாம் தரப்பு மென்பொருள் தேவைப்படும்.

விண்டோஸ் 10

விண்டோஸ் 10

விண்டோஸ் 10 தளத்தில் மூன்றாம் தரப்பு மென்பொருள்களை இன்ஸ்டால் செய்யாமல், ஸ்கிரீனினை ரெக்கார்டு செய்யலாம். கேம் பாரில் ஸ்கிரீன் ரெக்கார்டு செய்யும் அம்சத்தை பார்க்கலாம். இதை கொண்டு கேம்பிளே வீடியோக்களை ரெக்கார்டு செய்ய முடியும். குறிப்பாக இந்த அம்சம் கேமர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் கொண்டு விண்டோஸ் 10 ஸ்கிரீனினை ரெக்கார்டு செய்யலாம்.

விண்டோஸ் 10 ஸ்கிரீனினை ரெக்கார்டு செய்வது எப்படி?

விண்டோஸ் 10 ஸ்கிரீனினை ரெக்கார்டு செய்வது எப்படி?

கீபோர்டு பயன்படுத்தி சில ஷார்ட்கட்களிலேயே இந்த எளிய வழிமுறையை செயல்படுத்தி விட முடியும். இந்த கேம் பார் விண்டோஸ் 10 தளத்தில் ஸ்கிரீனினை ரெக்கார்டு செய்யவும் பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

ஐபோன் பயனர்களுக்கு மால்வேர் எச்சரிக்கை: உடனே இந்த 17 செயலிகளை டெலீட் செய்யுங்கள்!ஐபோன் பயனர்களுக்கு மால்வேர் எச்சரிக்கை: உடனே இந்த 17 செயலிகளை டெலீட் செய்யுங்கள்!

வழிமுறை 1:

வழிமுறை 1:

விண்டோஸ் 10 தளத்தில் ஸ்டார்ட் மெனு சென்று எக்ஸ்பாக்ஸ் செயலியை திறக்க வேண்டும்.

வழிமுறை 2:

வழிமுறை 2:

எக்ஸ்பாக்ஸ் செயலியில் விண்டோஸ் மற்றும் ஜி எழுத்துக்களை ஒன்றாக க்ளிக் செய்தால் ஸ்கிரீன் ரெக்கார்டு செய்ய முடியும். இவ்வாறு க்ளிக் செய்ததும் ஆன்ஸ்கிரீனில் பாப்-அப் திறக்கும். இனி அது கேமா இல்லை என கேட்கும். கேம் எனில் அதனை உறுதி செய்யும் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.

ஸ்னாப்டிராகன் 855சிப்செட் வசதியுடன் களமிறங்கும் ஒப்போ ரெனோ எஸ் சாதனம்.!ஸ்னாப்டிராகன் 855சிப்செட் வசதியுடன் களமிறங்கும் ஒப்போ ரெனோ எஸ் சாதனம்.!

வழிமுறை 3:

வழிமுறை 3:

இனி ஸ்டார்ட் ரெக்கார்டிங், ஸ்கிரீன்ஷாட் மற்றும் செட்டிங்ஸ் போன்ற அம்சங்களை பார்க்க முடியும்.

வழிமுறை 4:

வழிமுறை 4:

முதலில் ஸ்டார்ட் ரெக்கார்டிங் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இவ்வாறு செய்ததும் ரெக்கார்டிங் துவங்கிவிடும். ரெக்கார்டு ஆகி முடிந்ததும் ரெக்கார்டிங்கை நிறுத்த வேண்டும். ரெக்கார்டிங்கள் தானாக C/Users/Videos/Captures ஃபோல்டரில் சேமிக்கப்படும்.

இவ்வாறு மூன்றாம் தரப்பு செயலிகளின் உதவியின்றி ஸ்கிரீனினை ரெக்கார்டு செய்யலாம்.

வி.எல்.சி. மீடியோ பிளேயர் பயன்படுத்துவது:

வி.எல்.சி. மீடியோ பிளேயர் பயன்படுத்துவது:

பிரபல மீடியா பிளேயர் செயலியாக இருக்கும் வி.எல்.சி. கொண்டு ஸ்கிரீனினை ரெக்கார்டு செய்யலாம். இதனை விண்டோஸ் 7, 8 மற்றும் 10 தளங்களில் ஸ்கிரீனினை ரெக்கார்டு செய்ய வேண்டும்.

வழிமுறை 1:

வழிமுறை 1: ஏற்கனவே வி.எல்.சி. மீடியா பிளேயர் இல்லாதவர்கள், அதனை விண்டோஸ் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்ய வேண்டும்.


வழிமுறை 2: வி.எல்.சி. மீடியா பிளேயரை லான்ச் செய்து மீடியா மற்றும் கேப்ச்சர் டிவைஸ் ஆப்ஷன்களை க்ளிக் செய்ய வேண்டும்.


வழிமுறை 3: கேப்ச்சர் மோட் சென்று டிராப்டவுந் மெனுவை க்ளிக் செய்ய வேண்டும். அங்கு டெஸ்க்டாப் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.


வழிமுறை 4: ஆப்ஷன்களை சரியாக தேர்வு செய்து பிளே பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.


வழிமுறை 5: ஸ்டாப் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.

வழிமுறை 6: ஸ்கிரீனில் ரெக்கார்டிங் க்ளிக் செய்து சேவ் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.

விண்டோஸ் தளத்தின் எந்த பதிப்பை பயன்படுத்தினாலும், வி.எல்.சி. செயலியை இன்ஸ்டால் செய்து ஸ்கிரீன் ரெக்கார்டு செய்யலாம்.

மேலே கொடுக்கப்பட்டுள்ள இரண்டு வழிமுறைகளை கொண்டு விண்டோஸ் 10 தளத்தில் ஸ்கிரீனினை ரெக்கார்டு செய்யலாம்.

Best Mobiles in India

English summary
How To Record Windows 10 Screen Without Any Software: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X