WhatsApp வாய்ஸ் மற்றும் வீடியோ கால்ஸை Record செய்வது எப்படி? ரொம்ப ஈஸியான டிப்ஸ்.!

|

வாட்ஸ்அப் (WhatsApp) இப்போது மக்கள் மத்தியில் அதிகம் பயன்படுத்தும் ஒரு முக்கியமான செயலியாக வளம் வந்து கொண்டிருக்கிறது. நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்குச் செய்தி அனுப்புவது, வாய்ஸ் கால் செய்வது மற்றும் வீடியோ கால் செய்வது போன்ற எந்த சேவையாக இருந்தாலும் அதை வாட்ஸ்அப் மூலம் செய்துகொள்ள முடியும். அப்படி வாட்ஸ் அப்பில் முக்கியமாக கால்களை பேசும்போது அதனைப் பதிவு (Record) செய்து எதிர்காலத்தில் கேட்டுக்கொள்ள ஏதுவாக இருந்தால் மிகவும் வசதியாக இருக்கும் தானே.!

ஆண்ட்ராய்டு மற்றும் iOS போஙக்ளில் வாட்ஸ்அப் கால்ஸ் ரெக்கார்ட் செய்ய முடியுமா?

ஆண்ட்ராய்டு மற்றும் iOS போஙக்ளில் வாட்ஸ்அப் கால்ஸ் ரெக்கார்ட் செய்ய முடியுமா?

ஆனால், வாட்ஸ்அப்பில் அப்படி வாய்ஸ் கால் மற்றும் வீடியோ கால்களை பதிவு செய்து கொள்ளும் வசதி கொடுக்கப்படவில்லை. அதற்காக நாம் 3வது பார்ட்டி ஆப்ஸ்களையே நம்பி இருக்க வேண்டும். அவற்றில் ஆண்ட்ராய்டு மற்றும் iOS ஸ்மார்ட்போன்களுக்கு ஏதுவான நம்பகமான வாய்ஸ் கால் மற்றும் வீடியோ கால் பதிவு செய்ய உதவிக்கரமாக இருக்கும் தர்ட் பார்ட்டி ஆப்ஸ்களை இக்கட்டுரையில் பார்க்கலாம்.

ஆண்ட்ராய்டு போன்களில் வாட்ஸ்அப் வாய்ஸ் கால் பதிவு செய்வது எப்படி?

ஆண்ட்ராய்டு போன்களில் வாட்ஸ்அப் வாய்ஸ் கால் பதிவு செய்வது எப்படி?

பொதுவாக ஆண்ட்ராய்டு போன்களில் வாட்ஸ்அப் வாய்ஸ் கால் பதிவு செய்துகொள்ளக் கால் ரெக்கார்டர் க்யூப் ஏசிஆர் (Call Recorder: Cube ACR) என்ற செயலியைப் பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனால் இந்த செயலியை அணைத்து ஆண்ட்ராய்டு மொபைல்களிலும் பயன்படுத்த முடியாது. எனவே, இந்த செயலியைப் பதிவிறக்கம் செய்வதற்கு முன்னர் நீங்கள் பயன்படுத்தும் ஸ்மார்ட்போனில் இந்த செயலி வேலை செய்யுமா என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

Unknown Number விபரங்களை இலவசமாக தெரிந்துகொள்வது எப்படி? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.!Unknown Number விபரங்களை இலவசமாக தெரிந்துகொள்வது எப்படி? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.!

Cube ACR ஆப்ஸ் மூலம் எப்படி வாட்ஸ்அப் கால் ரெக்கார்ட் செய்வது?

Cube ACR ஆப்ஸ் மூலம் எப்படி வாட்ஸ்அப் கால் ரெக்கார்ட் செய்வது?

  • முதலில் கூகிள் பிளே ஸ்டாரில் Cube ACR ஆப்ஸை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டும்.
  • பின்பு அதை ஓபன் செய்து வாட்ஸ்அப்பில் வாய்ஸ் கால் செய்ய வேண்டும்.
  • அப்படி கால் செய்யும் பொழுது அதில் கியூப் கால் விட்ஜெட் காண்பிக்கப்படும்.
  • கியூப் கால் விட்ஜெட் தெரியவில்லை என்றால், கியூப் கால் ரெக்கார்டர் செட்டிங்ஸ் சென்று Force VoIP call as a voice call என்பதைத் தேர்வு செய்ய வேண்டும்.
  • பின்னரும் வாட்ஸ்அப்பில் கியூப் கால் விட்ஜெட் தெரியவில்லை என்றால், உங்கள் ஆண்ட்ராய்டு போனில் க்யூப் கால் பயன்படுத்த முடியாது என்று அர்த்தம்.
  • ஐபோன்களில் WhatsApp வாய்ஸ் கால் ரெக்கார்ட் செய்வது எப்படி?

    ஐபோன்களில் WhatsApp வாய்ஸ் கால் ரெக்கார்ட் செய்வது எப்படி?

    • ஐபோன்களில் வாட்ஸ் ஆப் வாய்ஸ் கால் பதிவு செய்வது சிறிது கடினமான வேலையாகும். அதற்கு உங்களிடம் ஐபோன் மற்றும் மேக் இரண்டும் இருக்க வேண்டும்.
    • முதலில் உங்கள் ஐபோனை கேபிள் மூலம் மேக்குடன் இணைத்துவிட்டு Trust this computer என்று தேர்வு செய்ய வேண்டும்.
    • பின்னர் மேக்கில் குயிக்டைம் (QuickTime application) தேர்வு செய்து பைல்லில் நியூ ஆடியோ ரெகார்டிங் (New Audio Recording) என்று தேர்வு செய்ய வேண்டும்.
    • பின்பு அதில் ஐபோனை தேர்வு செய்து ரெகார்ட் பட்டனை கிளிக் செய்து பதிவு செய்யலாம்.
    • WhatsApp இல் யார் உங்களை Block செய்தார்கள் என்று தெரியனுமா? இந்த 5 டிப்ஸை பாருங்க.!WhatsApp இல் யார் உங்களை Block செய்தார்கள் என்று தெரியனுமா? இந்த 5 டிப்ஸை பாருங்க.!

      ஆண்ட்ராய்டு போன்களில் WhatsApp வீடியோ கால் ரெக்கார்ட் செய்வது எப்படி?

      ஆண்ட்ராய்டு போன்களில் WhatsApp வீடியோ கால் ரெக்கார்ட் செய்வது எப்படி?

      • ஆண்ட்ராய்டு போன்களில் WhatsApp வீடியோ கால் பதிவு செய்ய என்று பிரத்தியேக செயலிகள் கிடையாது. எனவே WhatsApp வீடியோ காலை பதிவு செய்ய ஸ்க்ரீன் ரெக்கார்டரை தான் பயன்படுத்த வேண்டும்.
      • முதலில் கூகிள் பிளே ஸ்டாரில் AZ Screen Recorder application பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள்.
      • WhatsApp வீடியோ கால் செய்வதற்கு முன் அந்த விட்ஜெட்டில் Enable audio recording என்று தேர்வு செய்ய வேண்டும்.
      • பின்னர் வாட்ஸ்அப் சென்று வீடியோ கால் பேச ஆரம்பித்தால் அனைத்தும் பதிவாகிவிடும்.
      • ஐபோன்களில் WhatsApp வீடியோ கால் பதிவு செய்வது எப்படி?

        ஐபோன்களில் WhatsApp வீடியோ கால் பதிவு செய்வது எப்படி?

        • iOS11 உடன் ஐபோனில் உள்ளமைக்கப்பட்ட ஸ்க்ரீன் ரெக்கார்டர் (built-in screen recorder) அம்சம் வருவதால் அதை பயன்படுத்தி வாட்ஸ்அப் வீடியோ கால் பதிவு செய்துகொள்ளலாம்.
        • அதற்கு முதலில் செட்டிங்ஸ்ஸில் கன்ட்ரோல் சென்டர் சென்று Customise Controls-ஐ தேர்வு செய்து ஸ்க்ரீன் ரெக்கார்டிங்கை கிளிக் செய்ய வேண்டும்.
        • பின்பு அந்த ஸ்க்ரீன் ரெக்கார்டிங்கை ஆன் செய்து விட்டு WhatsApp வீடியோ கால் பேச ஆரம்பித்தால் அது தானாக ரெகார்ட் ஆகிவிடும்.

Best Mobiles in India

English summary
How To Record WhatsApp Voice And Video Call Tips For Android and iOS Users 2022

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X