Home
How to

கூகுள் சர்ச் பயன்படுத்தி பிரீபெயிட் மொபைல் நம்பரை ரீசார்ஜ் செய்வது எப்படி?

இணைய தேடல் என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது கூகுள் தான் எனலாம். இணைய தேடல்களுக்கு பதில் அளிப்பது மட்டுமின்றி பல்வேறு இதர சேவைகளையும் கூகுள் வழங்கி வருகிறது.

விமான டிக்கெட் முன்பதிவு

வழி தேடலில் துவங்கி, விமான டிக்கெட் முன்பதிவு, விளையாட்டு போட்டிகளின் நேரலை விவரங்கள், மொழி பெயர்ப்பு, உலகளாவிய பண மதிப்பு விவரங்கள் என இந்த பட்டியல் நீள்கிறது. இந்த வரிசையில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு என கூகுள் புதிய அம்சம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதை கொண்டு பயனர்கள் பிரீபெயிட் ரீசார்ஜ்களை கூகுள் தேடலில் இருந்தே மேற்கொள்ள முடியும்.

மொபைல் நெட்வொர்க்

மொபைல் நெட்வொர்க்

இந்த அம்சம் கொண்டு பயனர்கள் மொபைல் நெட்வொர்க் நிறுவனங்கள் வழங்கும் சலுகைகள், தள்ளுபடிகளை ஒப்பிட்டு பார்த்தல் என பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ள முடியும். முதற்கட்டமாக இந்த அம்சம் ஆண்ட்ராய்டு பயனர்கள் மற்றும் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது. புதிய அம்சம் பற்றி விரிவாக அறிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும்.

அம்சத்தினை இயக்க சீரான இணைய

இந்த அம்சத்தினை இயக்க சீரான இணைய சேவை, பிரீபெயிட் இணைப்பு மற்றும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் முதன்மையான தேவைகளாக இருக்கின்றன.

1 - ஸ்மார்ட்போனினை அன்லாக் செய்து கூகுள் செயலியை திறக்க வேண்டும்

2 - சர்ச் பாக்ஸ் மூலம் சிம் ரீசார்ஜ் என தேட வேண்டும்

3 - சர்ச் பதில்களில் மொபைல் நம்பர், நெட்வொர்க் விவரம், வட்டாரம் உள்ளிட்டவற்றை பதிவிட்டு சலுகைகளை தேடக் கோரும் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்

4 - இனி சலுகை விவரங்களை பார்த்து, நீங்கள் ரீசார்ஜ் செய்ய வேண்டிய சலுகையின் மீது க்ளிக் செய்ய வேண்டும்

5 - அடுத்து நீங்கள் ரீசார்ஜ் செய்ய எந்த வழிமுறையை பின்பற்ற விரும்புகிறீர்கள் என்பதை தேர்வு செய்ய வேண்டும்

கூகுள் பே

இதில் ஃப்ரீசார்ஜ், கூகுள் பே, பேடிஎம் என பல்வேறு ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. மேலும் இவ்வாறு தேர்வு செய்யும் சேவைகளின் செயலி உங்களது ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்க வேண்டும்

6 - பேமன்ட் வழிமுறைகளை சரியாக பின்பற்றி ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்

கூகுளில் வழக்கமான இணைய தேடல்களை போன்றே இந்த ரீசார்ஜ் அம்சத்தினையும் பயன்படுத்திக் கொள்ள முடியும். இதற்கு சீரான இணைய வசதி கொண்ட ஆண்ட்ரயாய்டு ஸ்மார்ட்போன், பிரீபெயிட் இணைப்பு மட்டும் இருந்தாலே போதுமானது. லான்ச்சரை திறந்து, கூகுள் ஆப், சிம் ரீசார்ஜ், மொபைல் நம்பரை பதிவிட்டு பிரவுஸ் பிளான்ஸ் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

பேடிஎம், கூகுள் பே

பேடிஎம், கூகுள் பே

இவ்வாறு செய்ததும், நீங்கள் பதிவிட்ட நம்பருக்கான சலுகைகளை பார்க்க முடியும். இனி சலுகைகளை தேர்வு செய்து ரீசார்ஜ் செய்திட முடியும். இதற்கு பேடிஎம், கூகுள் பே போன்றவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
How to Recharge your Prepaid Mobile via Google Search : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X