PhonePe, Paytm, Google Pay, BHIM மூலம் FASTag ஐ எப்படி ரீசார்ஜ் செய்வது? கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய டிப்ஸ்

|

சமீபத்தில், மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி, இந்தியாவில் உள்ள அனைத்து வாகனங்களுக்கும் ஜனவரி 1, 2021 முதல் ஃபாஸ்டேக்குகள் கட்டாயமாக இருக்க வேண்டும் என்று அறிவித்தார். இந்த ஆண்டு துவக்கம் முதல் FASTag திட்டத்தை வாகன ஓட்டுனர்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

FASTag ஐ எப்படி Google Pay, PhonePe மற்றும் BHIM UPI மூலம் ரீசார்ஜ் செய்வது?

FASTag ஐ எப்படி Google Pay, PhonePe மற்றும் BHIM UPI மூலம் ரீசார்ஜ் செய்வது?

டோல் பிளாசாக்களில் உள்ள ஓட்டுநர்கள் வரிசையில் காத்திருக்காமல் உடனடியாக பணம் செலுத்த ஃபாஸ்டாக் உதவுகிறது. அவர்கள் வங்கியில் இருந்து நேரடியாக பணம் செலுத்துவதன் மூலம் இதைச் செய்யலாம். ஏற்கனவே, ஃபாஸ்டேக் 20 க்கும் மேற்பட்ட வங்கிகளுடன் இணைந்துள்ளது. வங்கிகள், யுபிஐ அல்லது ஈ-வாலெட் வழியாக நாம் எப்படி Google Pay, PhonePe மற்றும் BHIM UPI இலிருந்து FASTag ஐ ரீசார்ஜ் செய்யலாம் என்பதைப் பார்ப்போம்.

PhonePe ஐப் பயன்படுத்தி FASTag ஐ எவ்வாறு ரீசார்ஜ் செய்வது?

PhonePe ஐப் பயன்படுத்தி FASTag ஐ எவ்வாறு ரீசார்ஜ் செய்வது?

  • PhonePe ஐப் பயன்படுத்தி FASTag ஐ ரீசார்ஜ் செய்ய, நீங்கள் கீழே குறிப்பிட்ட முறைகளைப் பின்பற்ற வேண்டும்.
  • PhonePe பயன்பாட்டைத் திறந்து FASTag Recharge ஐகானைக் கிளிக் செய்க.
  • FASTag வழங்கும் வங்கிகளின் பட்டியலிலிருந்து, உங்கள் ஃபாஸ்டாக் வழங்கிய வங்கியைத் தேர்வு செய்யுங்கள்.
  • ரூ.365-க்கு 365 நாட்கள் வேலிடிட்டி., தினசரி 2 ஜிபி டேட்டா- பிஎஸ்என்எல் மிரட்டல் அறிவிப்பு!ரூ.365-க்கு 365 நாட்கள் வேலிடிட்டி., தினசரி 2 ஜிபி டேட்டா- பிஎஸ்என்எல் மிரட்டல் அறிவிப்பு!

    FASTag ரீசார்ஜ்
    • கார் எண் போன்ற தேவையான அனைத்து விவரங்களையும் உள்ளிடவும்.
    • உங்கள் FASTag ஐ ரீசார்ஜ் செய்ய கட்டணம் செலுத்துங்கள்.
    • உங்கள் FASTag இப்போது ரீசார்ஜ் செய்யப்பட்டது.
    • Paytm ஐப் பயன்படுத்தி FASTag ஐ எவ்வாறு ரீசார்ஜ் செய்வது?

      Paytm ஐப் பயன்படுத்தி FASTag ஐ எவ்வாறு ரீசார்ஜ் செய்வது?

      • Paytm ஐப் பயன்படுத்தி FASTag ஐ ரீசார்ஜ் செய்ய, நீங்கள் கீழே குறிப்பிட்ட முறைகளைப் பின்பற்ற வேண்டும்.
      • Paytm ஐத் திறந்து மெயின் மெனுவில் உள்ள Show more விருப்பத்தை கிளிக் செய்க.
      • மெனுவிலிருந்து, FASTag Recharge என்ற ஐகானை கிளிக் செய்யவும்.
      • ஃபாஸ்டேக்கை ரீசார்ஜ் செய்து பணம்
        • உங்கள் ஃபாஸ்டாக் வழங்கும் வங்கியைத் தேர்வு செய்யுங்கள்.
        • கார் எண் போன்ற அனைத்து விவரங்களையும் உள்ளிட்டு, உங்கள் ஃபாஸ்டேக்கை ரீசார்ஜ் செய்து பணம் செலுத்துங்கள்.
        • மகாபாரத, ராமாயண காலத்தில் அணு ஆயுதங்கள் பயன்பாடு: இதோ ஆதாரம்.!மகாபாரத, ராமாயண காலத்தில் அணு ஆயுதங்கள் பயன்பாடு: இதோ ஆதாரம்.!

          Google Pay ஐப் பயன்படுத்தி FASTag ஐ எவ்வாறு ரீசார்ஜ் செய்வது?

          Google Pay ஐப் பயன்படுத்தி FASTag ஐ எவ்வாறு ரீசார்ஜ் செய்வது?

          • Google Pay ஐப் பயன்படுத்தி FASTag ஐ ரீசார்ஜ் செய்ய, நீங்கள் கீழே குறிப்பிட்ட முறைகளை பின்பற்ற வேண்டும்.
          • Google Pay ஐத் திறந்து மெயின் மெனுவில் உள்ள Business & Bills விருப்பத்தை கிளிக் செய்க.
          • இந்த மெனுவிலில் மேல் மூலையில் உள்ள Explore கிளிக் செய்யுங்கள்.
          • Google Pay ஐப் பயன்படுத்தி FASTag ஐ எவ்வாறு ரீசார்ஜ் செய்வது?
            • மேலே காணப்படும் சர்ச் டேப் இல் FASTag என்று டைப் செய்யுங்கள்.
            • ஃபாஸ்டாக் வழங்கும் வங்கிகளின் பட்டியல் காண்பிக்கப்படும்.
            • இதில் உங்களுக்கு FASTag வழங்கிய வங்கியை தேர்வு செய்யுங்கள்.
            • கார் எண் போன்ற அனைத்து விவரங்களையும் உள்ளிட்டு, கட்டணத்தைச் செலுத்தி உங்கள் ஃபாஸ்டேக்கை ரீசார்ஜ் செய்யுங்கள்.
            • BHIM ஐப் பயன்படுத்தி FASTag ஐ எவ்வாறு ரீசார்ஜ் செய்வது?

              BHIM ஐப் பயன்படுத்தி FASTag ஐ எவ்வாறு ரீசார்ஜ் செய்வது?

              • BHIM ஐப் பயன்படுத்தி FASTag ஐ ரீசார்ஜ் செய்ய, நீங்கள் கீழே குறிப்பிட்ட விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
              • BHIM பயன்பாட்டைத் திறந்து முகப்புத் திரையிலிருந்து Send என்பதைத் தேர்வு செய்க.
              • NETC FASTag UPI ஐடியை உள்ளிடவும்.
              • உங்கள் ஃபாஸ்டேக்கை ரீசார்ஜ் செய்ய ரீசார்ஜ் தொகை மற்றும் பின்னை உள்ளிடவும்.
              • முக்கிய குறிப்பு.. கொஞ்சம் கவனமாக இருங்கள்..

                முக்கிய குறிப்பு.. கொஞ்சம் கவனமாக இருங்கள்..

                அவ்வளவுதான்! உங்கள் ஸ்மார்ட்போனிலிருந்து உடனடியாக ஃபாஸ்டேக்கை ரீசார்ஜ் செய்யலாம் மற்றும் டோல் பிளாசாக்கள் வழியாக இனி வசதியாகப் பயணிக்கலாம். முக்கிய குறிப்பு, நீங்கள் ரீசார்ஜ் செய்த அடுத்த 20 நிமிடத்திற்கு பிறகே சில நேரங்களில் உங்களுடைய ரீசார்ஜ் செல்லுபடியாகிறது. இது தொழில்நுட்ப லேக் (lag) காரணமாக நிகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆகையால், பயணம் செய்வதற்கு முன்பாகவே உங்கள் FASTag ஐ ரீசார்ஜ் செய்வது எப்போதும் உங்களுக்கு நல்லது.

Best Mobiles in India

English summary
How to Recharge FASTag Using Phonepe Paytm Google Pay and BHIM in Tamil : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X