கோடையில் செம்மயா ஹீட்டாகும் Smartphone? வெடிக்காமல் தடுக்க டிப்ஸ்!
அதிக வெப்பம் காரணமாகவே ஸ்மார்ட்போன்கள் (Smartphone) வெடித்து சிதறுகின்றன. ஸ்மார்ட்போனில் இருக்கும் பேட்டரியை எப்போதும் கூலாக வைத்திருந்தாலே வெடிப்பை எளிதாக தவிர்க்க முடியும். அதுவும் கோடை காலத்தில் பேட்டரி பராமரிப்பில் கூடுதல் கவனம் தேவை. இந்த நேரத்தில் நீங்கள் செய்ய வேண்டியவை குறித்து விளக்குகிறது இந்த செய்தி.
வெயிலில் நீங்கள் செல்லும்போது உங்களுடைய செல்போன் அதிகமாக ஹீட்டாவதை கவனித்திருப்பீர்கள். பேட்டரி இருக்கும் பின்பக்கத்தை தொட்டுப் பார்த்தால் உங்களுக்கே தெரியும், எவ்வளவு கொதிக்கிறதென்று. இருப்பினும், நாம் அப்படியே செல்போனை பயன்படுத்தப் பழகிவிட்டோம். இதுபோன்ற சூழலில், பேட்டரி அதிகப்படியான வெப்பத்தை தாங்கிக் கொள்ள முடியாத நிலை ஏற்படலாம். இதை தவிர்க்க எளிய வழிமுறைகளை பின்பற்றினாலே போதும்.

முதலில் செல்போன் கவர்களை கட்டாயம் பயன்படுத்துங்கள்: நீங்கள் வெயிலில் நடந்தோ அல்லது பைக்கிலோ செல்லும்போதும், நீண்ட நேரம் சூரிய ஒளியில் நிற்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்போதும், தொடர்ந்து செல்போன் பயன்படுத்துவதை தவிர்த்து விடுங்கள். இல்லையென்றால், பயன்படுத்தும் நேரத்தை குறைத்துக் கொள்ளுங்கள்.
அப்போதும், செல்போன் மீது கட்டாயம் கவர்களை பயன்படுத்த மறந்துவிடாதீர்கள். ஏனென்றால், நீங்கள் செல்போன் கவர்களை பயன்படுத்தாமல், வெயிலில் நின்று கொண்டு பேசும்போது, சூரிய ஒளி நேரடியாக பேட்டரியை ஹீட்டாக்கும். கவர்கள் இருந்தால், சூரிய ஒளியில் இருந்து பேட்டரிக்கு பாதுகாப்பு கிடைக்கும். இதுமட்டுமல்லாமல் செல்போன் கவர்கள் விபத்தின்போது பேட்டரிகள் சேதமடைந்து வெடிப்பதை தவிர்க்கக் கூடியது.
சார்ஜ் செய்யும் போது கவனிக்க வேண்டியவை: நாம் வெயிலில் அலைந்து திரிந்துவிட்டு வீட்டிற்கு சென்ற உடன் ஃபேன் போட்டு காற்று வாங்குவோம். ஏனென்றால், உடல் வெப்பத்தை காற்று கட்டுப்படுத்தும். அதுபோல செல்போனுக்கு சார்ஜ் போடும்போதும் வெப்பம் கட்டுப்படுத்தப்பட வேண்டும். கோடையில், காற்றோட்டம் இல்லாத இடத்தில் செல்போனுக்கு சார்ஜ் செய்யாதீர்கள். குறிப்பாக, மதிய வேளையில் காற்றோட்டம் இல்லாத பட்சத்தில் சார்ஜ் செய்துகொண்டு செல்போன் பயன்படுத்துவதை தவிர்த்துவிடுங்கள்.
கம்பெனி சார்ஜர்களை பயன்படுத்துங்கள்: எப்போதும் செல்போன்களில் வெடிக்கக்கூடியது பேட்டரி மட்டுமே. ஆகவே, அதை சார்ஜிங் செய்யும் முறையில் கவனம் வேண்டும். ஒவ்வொரு மாடல் செல்போனும் தனிப்பட்ட பேட்டரி திறன் மற்றும் சார்ஜிங் அளவை கொண்டிருக்கும். இதனடிப்படையிலேயே செல்போன் கம்பனி சார்ஜர் வழங்கப்பட்டிருக்கும். இதை தவிர்த்து வேறு சார்ஜரை பயன்படுத்தினால், கோடையில் பேட்டரியின் நிலைமை மோசமாகலாம். ஆகவே, உங்களுடைய போனுக்கான சார்ஜரை மட்டும் பயன்படுத்த வேண்டும்.
நீண்ட நேரம் சார்ஜ் போடுவதை தவிர்த்துவிடுங்கள்: இப்போதெல்லாம் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி அனைத்து செல்போன்களிலும் வந்துவிட்டது. 10 முதல் 20 நிமிடங்களில் 100 சதவிகிதம் சார்ஜ் ஆகிவிடுகிறது. இந்த நிமிடங்களை கூட சிலர் விட்டுவைக்காமல், சார்ஜ் போட்டுக்கொண்டே செல்போன் பயன்படுத்துவார்கள். இதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
குறைவான நிமிடங்களில் வேகமாக சார்ஜ் ஏறும் வசதி உள்ளதால், பேட்டரி அதிகப்படியான மின்சாரத்தை உள்வாங்க வேண்டிருக்கும். இந்த நேரத்தில் செல்போன் பயன்படுத்துவது என்பது வெப்பத்தை அதிகரிக்கும் செயலாகும். இந்த வெப்பம் கோடையில் 2 மடங்காகக்கூடும். ஆகவே கவனமுடன் தவிருங்கள்.
சேதமடைந்த செல்போனை பயன்படுத்த வேண்டாம்: கோடையில் நன்றாக இருக்கும் செல்போன்களே அதிகமாக வெப்பமடையும் என்றால் பழுதடைந்த அல்லது சேதமடைந்த செல்போனில் நிலைமை எப்படி இருக்கும். குறிப்பாக பேட்டரி தொடர்பான பழுதில் இருக்கும் செல்போன்களை கோடையில் பெரும்பாலும் பயன்படுத்தாதீர்கள். தவிர்க்க முடியாத சூழலில் வீட்டிலோ அல்லது வெப்பம் குறைவான இடங்களிலோ பயன்படுத்தலாம்.


Click it and Unblock the Notifications