Home
How to

வாம்மா மின்னல்.. Paytm பயன்படுத்தும் அனைவருக்கும் ஒரு குட் நியூஸ்.. உடனே Scan & Pay ஆப்ஷனுக்கு போங்க!

பேடிஎம் ஆப்பை (Paytm App) பயன்படுத்தி, ஒரு குறிப்பிட்ட விற்பனையாளரிடம் அல்லது ஒரு குறிப்பிட்ட கடையில் அல்லது ஒரு குறிப்பிட்ட நபரருக்கு அடிக்கடி பணம் செலுத்தும் பழக்கம் / வழக்கம் உங்களிடம் இருக்கிறதா? ஆம் என்றால் உங்களுக்கு ஒரு குட் நியூஸ்!

பேடிஎம் நிறுவனமானது அதன் பேமண்ட் ஆப்பில் உள்ள ஸ்கேன் & பே பிரிவின் (Scan & Pay) கீழ் ஒரு புதிய "மின்னல் வேக" அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. வழக்கமாக, பேடிஎம் ஆப் வழியாக ஒருவருக்கு நாம் பணம் செலுத்த வேண்டுமென்றால் நாம் என்ன செய்வோம்?

வாம்மா மின்னல்.. Paytm பயன்படுத்தும் அனைவருக்கும் ஒரு குட் நியூஸ்!

அடிக்கடி பயன்படுத்தும் காண்டாக்ட் ஆக இருந்தாலும் கூட, அதை மறுபடியும் தேடி கண்டுபிடிப்போம்; அடிக்கடி பணம் செலுத்தும் அதே கடையாக இருந்தாலும் கூட ஸ்கேன் செய்து பணம் அனுப்ப உதவும் க்யூஆர் கோட்-ஐ கேட்போம் அல்லது அதை தேடுவோம். அப்படித்தானே? இனிமேல் அதற்கு அவசியம் இல்லை!

மேற்கண்ட 2 விஷயங்களையும் எளிதாக்கும் நோக்கத்தின் கீழ், பேடிஎம் ஆப்பில் புதிய பின் பட்டன் (PIN Button) ஒன்று சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உங்களுடைய சமீபத்திய பேமண்ட்களை உங்களால் 'பின்' செய்ய முடியும்; அதன் வழியாக அவற்றை விரைவாக அணுகி, விரைவாக பணமும் செலுத்த முடியும்.

நீங்கள் ஒரு குறிப்பிட்ட காண்டாக்ட்டிற்கு அடிக்கடி பணம் அனுப்புவீர்கள் என்றாலும் கூட, அவர்களையும் பேடிஎம் ஆப்பில் 'பின்' செய்யலாம்; அவர்களுக்கு விரைவாக பணம் அனுப்பலாம். கேட்கும் போதே சுவாரசியமாக இருக்கும் இந்த புதிய அம்சத்தில் கவனிக்கப்பட வேண்டிய 3 முக்கியமான விஷயங்கள் உள்ளன.

இது பேடிஎம் ஆப்பிற்கான பிரத்யேக அம்சமாகும், அதாவது இது மற்ற யுபிஐ ஆப்களுக்கு பொருந்தாது என்று அர்த்தம். அதுமட்டுமின்றி தற்போது வரையிலாக 5 காண்டாக்ட்களை மட்டுமே 'பின்' செய்ய முடியும். கடைசியாக, நீங்கள் சமீபத்தில் பணம் செலுத்திய காண்டாக்ட்களுக்கு மட்டுமே இந்த அம்சம் வேலை செய்யும். அதாவது, நீங்கள் சமீபத்தில் பணம் செலுத்தாத ஒரு காண்டாக்ட்டை உங்களால் 'பின்' செய்ய முடியாது.

பேடிஎம் ஆப்பிற்கு வந்துள்ள இந்த புதிய அம்சத்தை சரியாக பயன்படுத்துவது எப்படி? முதலில் உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள பேடிஎம் ஆப்பை அதன் லேட்டஸ்ட் வெர்ஷனுக்கு அப்டேட் செய்யவும். அதுமட்டுமின்றி, உங்கள் பேடிஎம் ஆப்பில் யுபிஐ அக்கவுண்ட், பேடிஎம் யுபிஐ மற்றும் பேடிஎம் வேலட் ஆக்டிவ் ஆக இருப்பதை உறுதி செய்துகொள்ளவும்.

மேற்கண்ட எல்லாம் தயாராகி விட்டதென்றால், உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள பேடிஎம் ஆப்பை திறக்கவும் பின்னர் யுபிஐ மணி டிரான்ஸ்பர் பிரிவின் (UPI Money Transfer section) கீழ் உள்ள ஸ்கேன் & பே விருப்பத்தை (Scan & Pay option) கிளிக் செய்யவும்.

அதை தொடர்ந்து மேல் நோக்கி ஸ்லைட் செய்வதன் மூலம் ரீசென்ட்ஸ் பிரிவிற்குள் (Recents section) நுழையவும். பின்னர் அதனுள் அணுக கிடைக்கும் (உங்களுக்கு விருப்பமான) காண்டாக்ட்களில் ஏதேனும் ஒன்றை லாங்-பிரஸ் (Long Press) செய்யவும். இப்போது உங்களுக்கு ஒரு பின் பட்டன் அணுக கிடைக்கும்; அதை கிளிக் செய்யவும். அவ்வளவுதான், குறிப்பிட்ட காண்டாக்ட் ஆனது பின் செய்யப்பட்டு இருக்கும்!

More from GizBot

Best Mobiles in India

English summary
How to PIN Your Favourite Contacts in Paytm App and Make Repeat Transactions Quickly
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X