ஆண்ட்ராய்டு ஹோம் ஸ்கிரீனில் லைவ் ஸ்கோரை பின் செய்வது எப்படி?

|

கிரிக்கெட் ப்ரியர்கள் எப்போது நேரலையில் கிரிக்கெட் போட்டி ஸ்கோர்களை அறிந்து கொள்ள விரும்புவர். எந்த விளையாட்டு போட்டிகள் பற்றியும், ஸ்கோர்களை அறிந்து கொள்ள பல்வேறு வழிமுறைகள் இருக்கின்றன. உலகம் முழுக்க விளையாட்டு போட்டிகளை விரும்பும் எல்லாருக்கும் இது பொதுவானதாகும். உலக கோப்பை தொடரின் போது லைவ் ஸ்கோர்களை அறிந்து கொள்ள அவர்கள் விரும்புவர்.

கிரிக்கெட் போட்டி

கிரிக்கெட் போட்டி

உலகில் உள்ள அனைவருக்கும் கிரிக்கெட் போட்டிகளை நேரலையில் பார்க்க வேண்டும் என்பதே பெரும் ஆவலாக இருக்கும். ஒரே இடத்தில் இருந்தபடி அவரவர் விரும்பும் அணிக்கு ஆதரவளிக்க முடியும். ஒருவர் மிகமுக்கிய பணிகளில் இருக்கும் போதும் இது சாத்தியமாகும். இது லைவ் ஸ்கோர்களை அறிந்து கொள்வதை எளிமையாக்குகிறது. நேரலையில் கிரிக்கெட் போட்டிகளை பார்க்க முடியாதவர்கள் லைவ் ஸ்கோர் அறிந்து கொள்ள செயலிகளை இன்ஸ்டால் செய்திருப்பர். இதற்காகவே பின் லைவ் ஸ்கோர் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பின் லைவ் ஸ்கோர் அம்சம் என்றால் என்ன?

பின் லைவ் ஸ்கோர் அம்சம் என்றால் என்ன?

விளையாட்டு பிரியர்களுக்கு மிகவும் அவசியமான அம்சங்களில் ஒன்றாக பின் லைவ் ஸ்கோர் இருக்கிறது. கூகுள் சர்ச் பக்கத்தை அடிக்கடி ரிஃப்ரெஷ் செய்து ஸ்கோர்களை அறிந்து கொள்ளும் நபர் எனில், இந்த அம்சம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இதை கொண்டு விரும்பிய விளையாட்டு போட்டி விவரங்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள முடியும். இது ஆண்ட்ராய்டு ஹோம் ஸ்கிரீனில் பின் செய்யப்பட்டு விடும். பின் ஸ்கோர்கள் மிதக்கும் திரையில் காண்பிக்கப்படும்.

ஆண்ட்ராய்டு ஹோம்ஸ்கிரீனில் லைவ் செய்வது எப்படி?

முதலில் நேரலை மேட்ச் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆப்ஷன்களை பின்பற்ற வேண்டும்.

மீண்டும் புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்த ஜியோ.! ரூ.75-முதல்: என்னென்ன சலுகைகள்?மீண்டும் புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்த ஜியோ.! ரூ.75-முதல்: என்னென்ன சலுகைகள்?

வழிமுறை 1:

வழிமுறை 1:

முதலில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் கூகுள் குரோம் செயலியை லான்ச் செய்ய வேண்டும்.

வழிமுறை 2:

வழிமுறை 2:

போட்டி நடைபெறும் நாடுகளின் பெயரை டைப் செய்ய வேண்டும்.

வழிமுறை 3:

வழிமுறை 3:

டைப் செய்யும் போது போட்டியை தேர்வு செய்து பின் லைவ் ஸ்கோர் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.

ஸ்னாப்டிராகன் 855சிப்செட் வசதியுடன் களமிறங்கும் ஒப்போ ரெனோ எஸ் சாதனம்.!ஸ்னாப்டிராகன் 855சிப்செட் வசதியுடன் களமிறங்கும் ஒப்போ ரெனோ எஸ் சாதனம்.!

வழிமுறை 4:

வழிமுறை 4:

இவ்வாறு செய்த பின் பின் செய்யப்பட்ட லைவ் ஸ்கோரை பார்க்க முடியும். இது ஹோம் ஸ்கிரீனில் இருக்கும். பின் செய்யப்பட்ட ஸ்கோரினை நீங்கள் விரும்பும் இடத்தில் வைக்க முடியும்.

வழிமுறை 5:

வழிமுறை 5:

போட்டி பற்றி முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள, பின்டு லைவ் ஸ்கோர் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இதில் போட்டி பற்றிய அனைத்து விவரங்களும் இடம்பெற்றிருக்கும்.

 சிறு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்

சிறு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்

இவ்வாறு செய்து ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் லைவ் ஸ்கோரை பின் செய்து கொள்ளலாம். இது லைவ் ஸ்கோர்களை எளிமையாகவும், சவுகரியமாக பார்க்க உதவும். இந்த வழிமுறையை பின்பற்றினால் விளையாட்டு போட்டிகள் பற்றிய சிறு விவரங்களையும் தவற விட வாய்ப்பே இல்லை. இதை செயல்படுத்த சிறு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் இருந்தாலே போதுமானது.

Best Mobiles in India

English summary
How To Pin Live Score On Android Homescreen: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X