ஜியோ போஸ்ட்பெய்ட் பில் ஆன்லைனில் செலுத்துவது எப்படி?

|

இந்தியாவின் மிகப்பெரிய தொலைதொடர்பு ஆபரேட்டரான ரிலையன்ஸ் ஜியோ தனது சந்தாதாரர்களுக்குப் பல சலுகைகளை வழங்குவதன் மூலம் தொலைத் தொடர்பு சந்தையைப் பெரியளவில் மாற்றியுள்ளது. ஆன்லைன் பரிவர்த்தனை மற்றும் ஆன்லைன் பில்கள் புதிய விதிமுறையாகிவிட்டதால், ஜியோ அதன் போஸ்ட்பெய்ட் பயனர்களுக்கு பல்வேறு ஆன்லைன் முறைகளைப் பயன்படுத்தி தங்கள் கட்டணங்களைச் செலுத்த அனுமதிக்கிறது.

ஜியோ போஸ்ட்பெய்ட் ஆன்லைன் கட்டணம்

ஜியோ போஸ்ட்பெய்ட் ஆன்லைன் கட்டணம்

ஜியோ போஸ்ட்பெய்ட் ஆன்லைன் கட்டண முறைகள் பற்றி உங்களுக்குத் தெரியாவிட்டால், இந்த பதிவை முழுமையாகப் படித்து ஜியோ போஸ்ட்பெய்ட் தொடர்பான ஆன்லைன் கட்டண முறைகளைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள். வலைத்தளத்தின் மூலம் ஜியோ போஸ்ட்பெய்ட் கட்டணத்தைச் செலுத்துதல் என்பது மிகவும் எளிதான மற்றும் தொந்தரவில்லாத அனுபவமாகும்.

ஜியோவின் குயிக் பே அம்சம்

ஜியோவின் குயிக் பே அம்சம்

ஜியோ போஸ்ட்பெய்ட் மொபைல் பில்களை செலுத்த நீங்கள் உங்களின் ஸ்மார்ட்போன் அல்லது லேப்டாப்பிலிருந்து ஜியோவின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பயன்படுத்தலாம். அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் மூலம் போஸ்ட்பெய்ட் பில்களை செலுத்த, Quick pay விருப்பத்தை கிளிக் செய்து, கட்டணத்தைச் செலுத்தி முடிக்கலாம்.

1TB ஸ்டோரேஜ் உடன் தயாராகிறதா iPhone 13 சாதனம்? என்னப்பா சொல்றீங்க உண்மையாவா?1TB ஸ்டோரேஜ் உடன் தயாராகிறதா iPhone 13 சாதனம்? என்னப்பா சொல்றீங்க உண்மையாவா?

யுபிஐ பயன்பாடுகள் மூலம் கட்டணம் செலுத்தலாம்

யுபிஐ பயன்பாடுகள் மூலம் கட்டணம் செலுத்தலாம்

ஜியோ பயனர்கள் அந்தத் தொகை அந்தந்த போஸ்ட்பெய்ட் கணக்கில் வரவு வைக்கப்படுவார்கள் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும், மேலும் அதை ரீசார்ஜ் நோக்கங்களுக்காகப் பயன்படுத்த முடியாது. யுபிஐ பயன்பாடுகளைப் பயன்படுத்தி ஜியோ போஸ்ட்பெய்ட் கட்டணத்தைச் செலுத்துவதற்கான செயல்முறையை இப்போது பார்க்கலாம். யுபிஐ பயன்பாடுகள் மூலம் உங்கள் ஜியோ போஸ்ட்பெய்ட் எண்ணை உள்ளிடவும்.

பில் தொகையை உள்ளிடவும்

பில் தொகையை உள்ளிடவும்

பிறகு கட்டணப் பிரிவுக்கு மாறி, உங்கள் போஸ்ட்பெய்ட் மொபைல் எண்ணை உள்ளிட்டு, சேவை வழங்குநராக ஜியோவைத் தேர்ந்தெடுக்கவும். டெல்கோ உருவாக்கிய பில் தொகையை உள்ளிடவும். பில் செலுத்த proceed பொத்தானைக் கிளிக் செய்க.

இதில் எதை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்

இதில் எதை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்

விருப்பமான கட்டண முறையைப் பயன்படுத்தி உங்கள் கட்டணத்தை முடிக்கவும். உங்கள் ஜியோ போஸ்ட்பெய்ட் எண் கட்டணத்தைச் செலுத்த Google Pay, PhonePe, Paytm மற்றும் பிற UPI பயன்பாடுகளைப் பயன்படுத்தலாம்.

ரீசார்ஜ் செய்வதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்?

ரீசார்ஜ் செய்வதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்?

ஜியோ போஸ்ட்பெய்ட் பில் ஆன்லைனில் ரீசார்ஜ் செய்வதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்?

உங்கள் ஜியோ போஸ்ட்பெய்ட் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த, உங்கள் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட செயலில் உள்ள யுபிஐ கணக்கு உங்களிடம் இருக்க வேண்டும். மேலும், ஆன்லைனில் பில் செலுத்துவதற்குச் செயலில் இணைய இணைப்பு கட்டாயமாக இருக்க வேண்டும் என்பது அவசியம்.

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
How to Pay Jio Postpaid Bill Online Using Various UPI Apps Like GooglePay, Paytm, PhonePe and More : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X