WhatsApp-ல் இருந்தபடி JioMart-ல ஆர்டர் பண்ணலாமா? இனி கடைக்கு போக சொல்லி சண்டை வராது.!

|

How To Use JioMart On WhatsApp: "வீட்ல சீனி இல்லை.. காய்கறி எதுவுமே இல்லை.. பழம் கூட இல்லை.. முதல கடைக்கு போய் நான் சொல்றதை எல்லாம் வாங்கிட்டு வா" என்று நம் வீட்டு தாய்மார்களும், பெரியவர்களும் சேர்ந்து, நம் மண்டைக்குள் மோட்டார் சைக்கிள் ஓட்டும் போது ஒரு கடுப்பு வரும் பாருங்க.!

அதை வெறும் வார்த்தைகளால் சொல்ல முடியாது - அனுபவித்தால் மட்டும் தான் தெரியும். நம்முடைய வாழ்க்கை எவ்வளவு கடுப்பாகப் போகிறது என்று இந்த நேரத்தில் தான் பலரும் யோசிப்பார்கள்.

வீட்ல கடைக்கு போக சொன்ன கடுப்பாகுதா மக்களே? இனி கவலை வேண்டாம்.!

வீட்ல கடைக்கு போக சொன்ன கடுப்பாகுதா மக்களே? இனி கவலை வேண்டாம்.!

இப்படி கடைக்குப் போகச் சொல்லிக் கூறும் போது, சில வீடுகளில் அடிக்கடி சண்டைகள் உருவாவதும் கூட வழக்கமாகிவிட்டது.

ஆனால், இனி இந்த கவலையே உங்களுக்கு வேண்டாம். அதான், இப்போது நமக்கு ஜியோ மார்ட் சேவை கிடைச்சுருச்சே.!

வீட்டில் இருந்தபடி உங்களுக்குத் தேவையான அனைத்து பொருட்களையும் இந்த ஆப்ஸ் மூலமாக நீங்கள் ஆர்டர் செய்யலாம்.

இப்போது இது உங்கள் சாட்டிங் ஆப்ஸ் மூலமாகவும் அணுகக் கிடைக்கிறது என்பதனால், இனி சாட் செய்து கொண்டே ஷாப்பிங் செய்யலாம்.

JioMart இப்போது வாட்ஸ்அப்பிலும் யூஸ் செய்ய கிடைக்கிறதா?

JioMart இப்போது வாட்ஸ்அப்பிலும் யூஸ் செய்ய கிடைக்கிறதா?

ஜியோ நிறுவனத்திற்குச் சொந்தமான புதிய ஜியோ மார்ட் (JioMart) அம்சம் இப்போது மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான வாட்ஸ்அப் (WhatsApp) மூலம் அணுகக் கிடைக்கிறது.

இந்த புதிய அம்சத்தைப் பயன்படுத்தி, பொதுமக்கள் மற்றும் ஜியோ பயனர்கள் இனி வீட்டில் இருந்தபடியே வாட்ஸ்அப் மூலமாக அவர்களுக்குத் தேவைப்படும் மளிகை சாமான் மற்றும் பொருட்களை ஆன்லைனில் ஆர்டர் (Grocery Online Order)செய்து வாங்கி பயன்பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Jio True 5G சென்னைக்கு வந்தாச்சா? 5ஜியின் அல்டிமேட் ஸ்பீடை தமிழ்நாட்டில் எப்படி அணுகுவது?Jio True 5G சென்னைக்கு வந்தாச்சா? 5ஜியின் அல்டிமேட் ஸ்பீடை தமிழ்நாட்டில் எப்படி அணுகுவது?

உங்க வாட்ஸ்அப்-ல் இருந்தபடி ஜியோமார்ட்டில் ஆர்டர்.!

உங்க வாட்ஸ்அப்-ல் இருந்தபடி ஜியோமார்ட்டில் ஆர்டர்.!

இந்த புதிய சேவையானது வாட்ஸ்அப் ஐ ஒரு சூப்பர் ஆப்ஸ் ஆக மாற வேண்டும் என்ற நிறுவனத்தின் முயற்சிக்கான சான்றாக விளங்குகிறது.

ஏனெனில், இது வாடிக்கையாளர்கள் வாட்ஸ்அப் பயன்பாட்டிலிருந்து வெளியேறாமல், ஜியோ மார்ட் சேவையை பயன்படுத்த அனுமதிக்கிறது.

ஏற்கனவே, வாட்ஸ்அப் தனது பேமெண்ட் (WhatsApp Payment) சேவையையும் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது என்பது குறிபிடித்தக்கது.

வீட்டில் இருந்து வெளியில் செல்லாமல் மளிகை சாமான் வாங்குவது எப்படி?

வீட்டில் இருந்து வெளியில் செல்லாமல் மளிகை சாமான் வாங்குவது எப்படி?

சரி, இப்போது எப்படி வாட்ஸ்அப் மூலம் ஜியோ மார்ட் சேவையை அணுகி, வீட்டில் இருந்து வெளியில் செல்லாமல், எப்படி உங்களுக்கு தேவையான மளிகை சாமான்களை வாங்கலாம் என்று பார்க்கலாம்.

கடைக்குச் செல்ல விரும்பாத ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இந்த சேவை மிகவும் முக்கியமானது என்பதனால், ஸ்கிப் செய்யாமல் படியுங்கள்.

சரி, வாங்க வாட்ஸ்அப்பில் ஜியோமார்ட்டை சேவையை பயன்படுத்துவது எப்படி? என்று பார்க்கலாம்.

நீங்கள் முதலில் செய்ய வேண்டிய முக்கியமான விஷயம் இது தான்.!

நீங்கள் முதலில் செய்ய வேண்டிய முக்கியமான விஷயம் இது தான்.!

  • முதலாவதாக, உங்கள் வாட்ஸ்அப் பயன்பாட்டை அப்டேட் செய்துகொள்ளுங்கள்.
  • பின்னர், உங்கள் போனில் 7977079770 என்ற எண்ணை டைப் செய்து, ஜியோமார்ட் என்று காண்டாக்ட் சேவ் செய்துகொள்ளுங்கள்.
  • பிறகு, வாட்ஸ்அப் சென்று JioMart என்ற காண்டாக்ட்டை கிளிக் செய்து "Hi" என்று அனுப்பவும்.
  • அவ்வாறு செய்யும்போது, ​​​​பயனர்கள் ஷாப்பிங்கைத் தொடங்குவதற்கான விருப்பத்தை வழங்கும் பதிலைப் பெறுவார்கள்.
  • அதிரடி விலை குறைப்பு.! இனி எல்லாரும் iPhone 13 வாங்கலாம் போலயே.!அதிரடி விலை குறைப்பு.! இனி எல்லாரும் iPhone 13 வாங்கலாம் போலயே.!

    கேட்டலாக் பார்த்து தேவையானதை ஆர்டர் பண்ணுங்க.!

    கேட்டலாக் பார்த்து தேவையானதை ஆர்டர் பண்ணுங்க.!

    • அடுத்த படியாக "Get Started" என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
    • இப்போது View Catalogue என்று காண்பிக்கப்படும். இது பொருட்களை உலாவ அனுமதிக்கும்.
    • நீங்கள் இருக்கும் இருப்பிடத்திற்கு டெலிவரி செய்ய முடியுமா என்பதைச் சரிபார்க்க, பின் நம்பர் குறியீட்டை உள்ளிட்டு Continue என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
    • காய்கறிகள், பழங்கள், பேக்கரி, பால் பொருட்கள், சாஃப்ட்ட்ரிங்க்ஸ், வீட்டு பராமரிப்பு மற்றும் மளிகை பொருட்களை கிளிக் செய்து கார்டில் ஆட் செய்துகொள்ளலாம்.
    • பொருட்களை Cart-ல் ஆட் செய்து கன்ஃபார்ம் பண்ணுங்க.!

      பொருட்களை Cart-ல் ஆட் செய்து கன்ஃபார்ம் பண்ணுங்க.!

      • நீங்கள் வாங்க விரும்பும் பொருட்களைச் சேர்த்த பிறகு, view cart என்பதை கிளிக் செய்யவும்.
      • இப்போது, சாட் பிரிவில் பயனர்களின் முகவரி கேட்கப்படும். இப்போது Provide address என்பதை கிளிக் செய்யவும்.
      • பயனர்கள் தங்கள் பெயர், தொலைப்பேசி எண் மற்றும் முகவரி விவரங்கள் போன்ற முக்கியமான விவரங்களை நிரப்ப வேண்டும்.
      • பின்னர் முகவரியை உறுதிப்படுத்த அல்லது மாற்றுவதற்கான விருப்பத்தை வாட்ஸ்அப் வழங்கும்.
      • தூக்கிட்டாங்க.! தூக்கிட்டாங்க.! iPhone 15-ல இருந்து தூக்கிட்டாங்க.! தூக்கிட்டாங்க.! iPhone 15-ல இருந்து "இந்த" அம்சத்தை தூக்கிட்டாங்க.!

        டெலிவரி அட்ரஸ் ரொம்ப முக்கியம்.! மறந்துடாதீங்க.!

        டெலிவரி அட்ரஸ் ரொம்ப முக்கியம்.! மறந்துடாதீங்க.!

        • பயனர்கள் confirm என்பதை கிளிக் செய்தவுடன் மூன்று கட்டண விருப்பங்கள் கொடுக்கப்படும்.
        • கேஷ் ஆன் டெலிவரி, ஜியோமார்ட்டில் பணம் செலுத்துதல் மற்றும் வாட்ஸ்அப்பில் பணம் செலுத்துதல் போன்ற விருப்பங்கள் காண்பிக்கப்படும்.
        • உங்களுக்கு விருப்பமான பேமெண்ட் முறையைத் தேர்வு செய்து Ok கிளிக் செய்யுங்கள்.
        • இறுதியாக உங்கள் ஆர்டர் பிளேஸ் செய்யப்பட்ட சில மணி நேரங்களுக்குள், உங்கள் பொருட்கள் வீடு வந்து சேர்க்கப்படும்.
        • இந்த எளிமையான அம்சத்தைப் பயன்படுத்தி இனி நீங்கள் வீட்டில் இருந்தபடியே, உங்களுக்குத் தேவையான போர்டுகளை ஆர்டர் செய்யலாம்.

Best Mobiles in India

English summary
How To Order Groceries From JioMart Using WhatsApp Easily Useful Tips 2022

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X